ஜியா உர் ரஹ்மான்
Zia ur Rehman
மூன்று இந்துக்கள் – டாக்டர் அஜித் குமார், நரேஷ் குமார் மற்றும் அசோக் குமார் – ஒரு ஆயுத தாக்குதலில் நவம்பர் 7 வடக்கு சிந்து மாகாணத்தில் Shikarpur ஷிகார்பூர் மாவட்டத்தில் சக் நகரில் சுட்டு வீழ்த்தப்பட்டார்கள்.ஊடக அறிக்கைகளின்படி, ஒரு முஸ்லீம் பெண்ணை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட இருந்த தங்கள் சமூகத்தின் இரு இளைஞர்கள் சார்பாக இவர்கள் தலையிட்டார்கள். அதனால் இவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று ஒரு முஸ்லீம் மதகுரு Bhayo பையோ பழங்குடியினரிடன் சொன்னதாக அறிக்கைகள் கூறுகின்றன.
இந்த மூன்று ஆண்களது இறுதி சடங்குகள் முடிந்ததும், சிந்து மாகாணம் முழுவதும் இந்து சமூகத்தினர் தங்கள் எதிர்ப்பை காட்ட தங்கள் வியாபார நிலையங்களை மூடினர், அதற்காக மூன்று நாட்கள் துக்கம் அனுஷ்டித்தனர். “இது முதல் சம்பவம் அல்ல. கடந்த சில ஆண்டுகளில், குறிப்பாக சிந்து மாநிலத்தில், மதவெறி தாக்குதல்கள் அதிகரித்து உள்ளன,” என்று டாக்டர் ரமேஷ் குமார் வாங்க்வாணி என்ற பாக்கிஸ்தான் இந்து மதம் கவுன்சில் (PHC) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் தலைவர் தெரிவித்துள்ளார். “அரசாங்கம் முற்றிலும் சிறுபான்மையினரை குறிப்பாக இந்துக்களை பாதுகாக்க தவறிவிட்டது. இதனால் சிறுபான்மையினர் மீதான மதரீதியான அடக்குமுறையை எதிர்க்க வலுஇன்றி உள்ளார்கள்” என்று கூறுகிறார்.
ஜூன் கடந்த ஆண்டு, தார்பார்க்கர் மாவட்டத்தில் இந்துகோவில்களின் கடவுள் சிலைகள் உடைக்கப்பட்டன. இந்த மாவட்டத்தின் மக்கள்தொகையில் 55 சதவீதம் இந்துக்கள். இது உலகம் முழுதும் உள்ள இந்துக்களை கோபமடையச்செய்தது.
பாகிஸ்தானில், இந்துக்கள் 1998 கணக்கெடுப்பின் படி, 2.7 மில்லியன் இந்துக்கள் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு, மிக பெரிய மத சிறுபான்மையினர் என்று நம்பப்படுகிறது. பெரும்பாலானவர்கள் சிந்து மாநிலத்தில் வாழ்கின்றனர். சிறுபான்மை உரிமை கோரும் குழுக்களின் அறிக்கை படி, இங்குதான் இந்துக்களை கட்டாயமாக இஸ்லாமுக்கு மதம் மாற்றுவதும், அவர்களை கடத்திக்கொண்டு செல்வதும் கட்டுப்பாடின்றி நடக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற பாகிஸ்தான் செனட் கமிட்டியிலும் சிறுபான்மையினர் ‘விவகாரங்களுக்கான செனட் தான் நிலை குழு (SSCMA)விலும் இது பேசப்பட்டது. இந்து பெண்களை கடத்திசெல்வதும், அவர்களை கட்டாயமாக இஸ்லாமுக்கு மதம் மாற்றுவதையும் பற்றி கவலை வெளியிட்டது.
“கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் Kandkhot பகுதியில் இருந்து சுமார் 29 ஆண்கள் கடத்தப்பட்டுள்ளனர். மற்றும் ஏராளமான பெண்கள் இஸ்லாமுக்கு கட்டாயமாக மதம் மாற்றப்பட்டனர்,” என்று பிதன்பர் சேவானி( Pitanber Sewani) என்ற சிந்து சிறுபான்மை எம்பிஏ தெரிவித்துள்ளார். அவர் சில தீவிரவாதிகள் மதத்தின் பெயரால் சிறுபான்மை சமூகங்கள் மீது தாக்குதல்களை நடத்திவருகின்றனர் என்று கூறினார்.
“இந்து சமூகத்துக்கு எதிரான பேச்சு மற்றும் வன்முறை கடந்த பல ஆண்டுகளாக கட்டுப்படுத்தப்படாமல் தொடர்ந்து நடக்கிறது” என்று ஒரு சிவில் சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார். “பெரும்பாலும் மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகைகளில், இஸ்லாமிய இமாம்கள் இந்து மதத்தினரை இந்தியாவின் ஏஜெண்டுகள் என்று அழைத்து தம் வெறுப்பை பரப்புகின்றனர்” என்று கூறுகிறார்
செப்டம்பர் 8ஆம் தேதியன்று, Kalhoro பழங்குடி முஸ்லீம்களான பன்னிரண்டு பேர்கள் Pannu Aqil பன்னு அகில் என்ற இந்து சேரியை தாக்கி அவர்களது சொத்துக்களை கொள்ளையடித்தனர்.
ஜூன் கடந்த ஆண்டு, தார்பர்க்கார் Tharparkar மாவட்டத்தில் கோவில்களில் இந்து மத கடவுள்களின் சிலைகள் உடைத்தனர். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து சிந்து மாநிலத்தில் நடந்துவருகின்றன
சில பகுதிகளில், தலிபான் தீவிரவாதிகள் உள்ளூர் இந்துக்களையும் சீக்கியர்களையும் ஜிஸ்யா வரி செலுத்தவேண்டும் அல்லது அங்கிருந்து ஓட வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர்.
1999இல் பெரும்பாலான இந்து மதத்தினர் இந்தியாவுக்கும் பல்வேறு உலக நாடுகளுக்கும் இடம் பெயர்ந்துவிட்டனர். அதன் பின்னர் சூழ்நிலை சற்று மேம்பட்டது என்று வாங்க்வாணி தெரிவித்தார். “சமீபத்திய நிகழ்வுகள் பல்வேறு சிறுபான்மை சமூகங்களை சேர்ந்த மக்களது வாழ்க்கையை வேதனையடையச்செய்துள்ளன. மீண்டும் பாகிஸ்தானை விட்டு ஓடுவதை பற்றி பலர் யோசிக்கும்படி ஆக்கியிருக்கின்றன.” என்று கூறுகிறார்.
இந்துக்கள் பெருமளவில் வாழும் மாவட்டங்களில் (உமர் கோட், தார்பர்க்கார், சாங்கார்)சிந்தி இந்துக்கள் தங்களது ஹோலி பண்டிகையை விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். அது 2009 வரைதான். மார்ச் 11, 2009இல் அவர்களது போர்டுகள், இந்து வாசகங்கள் தங்களது மத நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குவதாக இஸ்லாமிய கும்பல் ஹோலி கொண்டாடியவர்களை தாக்கியது.
1,000 க்கும் மேற்பட்ட இந்துக்கள் (பெரும்பாலும் சிந்து மற்றும் பலுசிஸ்தான் இருந்து) இந்தியாவுக்கும் வேறு நாடுகளுக்கும் இடம் பெயர்ந்துள்ளனர். சிந்து சட்டசபை உறுப்பினரான ராம்தேவ் சோதோ உட்பட ஏராளமானவர்கள், தங்களது குடும்பங்களுக்கு நடக்கும் தொடர்ந்த அச்சுருத்தல்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர். அவருக்கு இஸ்லாமிய தீவிரவாத குழுக்களிடமிருந்து அவருக்கு அச்சுருத்தல் வந்த பின்னால், அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். “எங்கள் சமூகத்தினர் இந்தியாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் ஓடுவதன் காரணம் அவர்களை யாரும் பாகிஸ்தானின் குடிமக்களாக கருதுவதில்லை என்பதால்தான்” என்று ஒரு இந்து பத்திரிக்கையாளர் கூறுகிறார்
பலுச்சிஸ்தான் இந்துக்களின் நிலைமை, சிந்து மாநில இந்துக்களிடமிருந்து வேறுபட்டதாக இல்லை. பலுசிஸ்தான் பகுதியில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு, இந்துக்களை கடத்துவதும், அவர்களை கட்டாயமாக இஸ்லாமுக்கு மதம் மாற்றுவதும் அதிகரித்துள்ளது என்பதையும், இந்து குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்குக் கூட அனுப்ப பயப்படுகிறார்கள் என்று கூறுகிறது.
குறைந்தது நான்கு இந்து வியாபாரிகள் பணத்துக்காக பலுசிஸ்தானில் கடத்தப்பட்டுள்ளனர். நவம்பர் 4 அன்று, ஒரு இந்து வர்த்தகர், பசந்த் லால், குவெட்டா நகரில் சார்யாப் சாலையிலிருந்து கடத்தப்பட்டார். அதே நாளில், ஆயுததாரிகளான பல முஸ்லீம்கள் தாதார் பகுதியில் உள்ள இந்துக்களது கடைகளையெல்லாம் சூறையாடினார்கள். சேத் அதோமால் என்று மற்றொரு இந்து வர்த்தகர் செப்டம்பர் 4இல் குவெட்டா நகரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
பாகிஸ்தானில் இருந்து 500 இந்து குடும்பங்கள் மட்டுமே கடத்தலுக்கும் அவர்களது குடும்பத்தினர் மீதான அச்சுருத்தலுக்கும் பயந்து இந்தியாவுக்கு இடம் பெயர்ந்துள்ளர் என்று ஒரு செனட்டர் SSCMA கமிட்டியிடம் தெரிவித்தார். “நாங்கள் பல நூற்றாண்டுகளாக முஸ்லீம் பலுச் பழங்குடிகளுடன் வாழ்ந்து வருகின்றோம். ஆனால் இப்போது, பாதுகாப்பின்மை உணர்வு எங்களது இந்து சமூகத்தின் மத்தியில் பரவலாக உள்ளது,” என்று அமர்லால் என்ற இந்து பிரமுகர் தெரிவித்தார். இது பலுச் பாரம்பரியத்தையும் மதசார்பற்ற அரசியலையும் குலைக்க நடக்கும் சதி என்று கூறினார்
பயங்கரவாதமும் தீவிரவாதமும் அதிகரித்துள்ள கைபர் பக்தூன்க்வா மாநிலத்தில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. தாலிபான் தீவிரவாதிகள் அங்குள்ள இந்துக்களும் சீக்கியர்களும் ஜிஸ்யா வரி கொடுக்க வேண்டும் இல்லையேல் ஓட வேண்டும் என்று அறிவித்துள்ளனர். இதனால் நூற்றுக்கணக்கான இந்துக்களும் சீக்கியர்களும் இந்தியாவுக்கும் பல்வேறு நாடுகளுக்கும் அடைக்கலம் தேடி சென்றுள்ளனர்.
“இஸ்லாமுக்கு மதம் மாற வேண்டும் இல்லையேல் ஓடிப்போய்விட வேண்டும் என்ற தாலிபான் அச்சுருத்தலுக்குந் அடுவே நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்” என்ரு கைபர் ஏஜென்ஸியில் உள்ள ஒரு இந்து வியாபாரி கூறினார். ஷம்ஷான் கட்டத்தில் (ஆற்றில்) குர்ரம், ஹங்கு ஒரக்ழி பகுதியில் வாழும் இந்துக்கள் தங்களது நீத்தார்களுக்கு இறுதிச்சடங்குகள் செய்வதை அனுமதிப்பதில்லை என்றும், இதனால் அட்டாக் நகருக்கு தங்களது மறைந்தவர்களை எடுத்துசென்று அங்கு எரிக்கிறார்கள் என்றும் செய்தி அறிக்கைகள் கூறுகின்றன.
ஒரக்ழி, கைபரில் வாழும் இந்துக்கள் மிகவும் மோசமான அடக்குமுறைக்கு நடுவே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்று டாக்டர் அரேஷ் குமார் (புனேர் தொகுதியின் சிறுபான்மை எம்.எல்.ஏ) கூறுகிறார். தாலிபான் குழுக்கள் ஸ்வாத் பகுதியில் உள்ள சீக்கியர்களை தொந்தரவு செய்யவில்லை என்றும் கூறுகிறார்
“பாராளுமன்றத்தில் சிறுபான்மையினர் தலைவர்கள் தங்களது கட்சிகளது உறுப்பினர்களாக, கட்சி தலைமை சொல்வதை கேட்கிறார்களே தவிர சிறுபான்மையினரின் பிரச்னைகளை பேசுவதில்லை” என்று குமார் தெரிவிக்கிறார். ”மர்டான் போன்ற நகரங்களில் இருக்கும் மோசமான பொருளாதார நிலைமை, இப்படி சிறுபான்மையினரை கடத்தவும் இந்துக்கள் மீதான கொடுமைகளுக்கும் காரணமாக இருக்கிறது” என்று இவர் கூறுகிறார்.
இந்துக்களை பணத்திற்காக கடத்துவதும், இந்துக்களை பாரபட்சமாக நடத்துவதும் பஞ்சாப் மாநிலத்திலும் அதிகமாக காணப்படுகிறது. ஷம்ஷன் கட்டத்துக்கு அருகே இருந்த கோவில் இந்து கோவில் சென்ற ஜூன் மாதம் இடிக்கப்பட்டது. இதனால் இந்துக்களும் சீக்கியர்களும் போராட்டத்தில் இறங்கினார்கள்.
பாகிஸ்தான் பாட புத்தகங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக, முக்கியமாக இந்துக்களுக்கு எதிரான பல பிரச்சாரங்கள் காணப்படுகின்றன. ஆசிரியர்களும் இந்துக்களை இஸ்லாமின் எதிரிகள் என்றே போதிக்கிறார்கள். மத சுதந்திரத்துக்கான அமெரிக்க கமிஷனும் தனது சமீபத்திய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்துக்களுக்கு எதிரான பாரபட்சமான சட்டங்களை நீக்க வேண்டும் என்றும், சிறுபான்மையினருக்கு எதிரான மத வன்முறையை தக்கபடி தண்டிக்க வேண்டும் என்றும் மனித உரிமை குழுக்கள் கோரி வருகின்றன.
zia_red@hotmail.com
http://www.thefridaytimes.com/beta2/tft/article.php?issue=20111118&page=9
பிற செய்திகள்
http://www.thenews.com.pk/TodaysPrintDetail.aspx?ID=78099&Cat=4&dt=11/18/2011
http://zeenews.india.com/news/south-asia/conversion-of-pakistani-hindus-condemned_741423.html
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 1
- ரவுடிச் சாமியும் ரங்கமன்னாரும்
- தமிழ் பெண் கவிஞர்கள் – ஆங்கிலத்தில் – ஆதி மந்தியார் முதல் உமா மஹேஸ்வரி வரை
- அர்ஜண்ட் வெயிட் லாஸ்.. ஒரு யாத்ரா டிக்கட் ப்ளீஸ்..
- அப்பா
- பழமொழிகள் கூறும் உதவி எனும் வாழ்க்கை நெறி
- பா. சத்தியமோகன் கவிதைகள்
- தலைமை தகிக்கும்…
- நானும் அசோகமித்திரனும்
- குறுங்கவிதைகள்
- ஜென் ஒரு புரிதல் – பகுதி 19
- அந்த நொடி
- முள் எடுக்கும் முள்
- வாசிப்பு அனுபவம்
- இதுவும் அதுவும் உதுவும் – 5
- இந்திய அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சி யானதா ? அணுவியல் இயக்குநர் முதிர்ச்சி பெற்றவரா ?
- பம்பரம்…
- கவிதைகள்: பயணக்குறிப்புகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கோடாரியில் தகர்ப்பாய் ! (கவிதை -52 பாகம் -1)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் ! (கவிதை – 50 பாகம் -5)
- இந்துக்களுக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பில்லை
- பஞ்சதந்திரம் தொடர் 18 சமுத்திரமும் நீர்க்குருவியும்
- தமிழ் விக்கிப்பீடியா ஒரு ஊடகப் போட்டி
- வாப்பாவின் மடி
- ப்ளாட் துளசி
- தோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன்
- கூடிக்களிக்கும் தனிமை
- கை மாறும் கணங்கள்
- வாசிப்பும் வாசகனும்
- முகம்மது யூனுஸ் அறிஞர் அண்ணாவை ஹாங்காங்கில் சந்தித்தது பற்றிய உரை
- மகா சந்திப்பொன்றில்
- நடுநிசிகோடங்கி
- கஸ்ட்டம்ஸ் கட்டிடத்தில் மோகினிப்பிசாசு
- பிரான்சு கம்பன் கழகத்தின் 10 -ஆம் ஆண்டு விழா
- நானும் பிரபஞ்சனும் கட்டுரை குறித்து சில கருத்துகள்:
- முன்னணியின் பின்னணிகள் – 14 சாமர்செட் மாம்
- மியன்மார் பாரம்பரிய இசை
- மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 16