தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

22 மார்ச் 2020

இதயத்தின் தோற்றம்

ஹெச்.ஜி.ரசூல்

Spread the love

அழகற்ற்வை மெள்னங்கள்
என்பதுணர்ந்து
உதறி வீசி எறிகிறேன்
அது பலி கொண்டவற்றில்
என் நேசமும் ஒன்று.
சிறுகச் சிறுக சேமித்த கனவுகளின்
ஊர்கோலம்பற்றிய மயக்கங்களும்
இப்போது இல்லை
மழையைப் போலவோ
காற்றைப் போலவோ
விடுதலை பெற்று வாழ விருப்பம்.
கசக்கி வீசிய
தொட்டு துரத்தும் ஞாபகங்கள்
அவற்றில் தெரிகிறதே
மங்கலாகிப் போன
மக்கிப்போன
சிதைவுற்றுப் போன
என் இதயத்தின் தோற்றம்

Series Navigationமணல்வீடு சிற்றிதழும் களரி தொல்கலைகள் &கலைஞர்கள் மேம்பாட்டு மையமும் இணைந்துகனவும் காலமும்

Leave a Comment

Archives