தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

16 செப்டம்பர் 2018

இரண்டு வகை வெளவால்கள்

பா. சத்தியமோகன்

அளவில் பெரியதான பட்டாம் பூச்சியோ என நான் கருதிய
கருப்பு வெளவால் ஒன்று
அலுவலகம் புகுந்தது
மேசையின் இரும்புக் கால்கள் நடுவே நின்றது
பிறகு
இன்னொருவர் மேசைக்கு கீழே சென்றது
“மேசை மேலே வா
எழும்பு
ஜன்னலைப் பார்
ஆகாயம் தெரியும்
வெளிச்சம் தேடு”
என்றெல்லாம் நினைக்கத் தான் முடிகிறது
சொல்ல முடிவதில்லை
மன வெளவாலிடம்.

*****

Series Navigationசொக்கப்பனைபொருத்தியும் பொருத்தாமலும்

Leave a Comment

Archives