கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -2)

This entry is part 21 of 39 in the series 4 டிசம்பர் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“கிறித்துவ ஆலயத்தில் தொழுவோன் ஆயினும் சரி, மண்டியிட்டு இஸ்லாமிய மசூதியில் வழிபடுவோன் ஆயினும் சரி யாராக நீ இருப்பினும் உன்னை நான் நேசிக்கிறேன் என் சகோதரனே ! நீயும் நானும் ஒரே நம்பிக்கையில் உதித்த பிள்ளைகள்தான் ! மதங்களின் வெவ்வேறு பாதைகளில் இருப்பவை ஓர் உன்னத அதிபனின் அன்புக் கரத்தில் உள்ள ஒரே மாதிரி விரல்கள்தான் ! அவை நமக்கெல்லாம் பூரண ஆன்மாவாக இருந்து நம் எல்லோரையும் ஏற்றுக் கொள்ள ஆர்வமுடன் நீளும் கரங்கள்தான் !”

கலில் கிப்ரான் (ஞானியின் பொன்மொழிகள்)

+++++++++++

அறிவும். பகுத்தாய்வு நெறியும்

அறிவு எதுவும் இல்லாமல்
வெறும் பகுத்தாய்வு
முறை மட்டும்
இருப்பதில் ஒரு பயனு மில்லை !
குருதிச் சகோதரி அறிவு
இருக்காது
பகுத்தாய்வு முறை மட்டும்
உள்ளது
இல்ல மற்ற ஏழ்மை !
பகுத்தாய்வு இல்லாத அறிவு
அதுபோல்
பாதுகாப் பில்லா இல்லம் !
அத்துடன்
அன்பு, நியாயம், நன்னெறி
அனைத்தும்
தகுதி யற்றுப் போய் விடும்
பகுத்தாயும் வேரின்றி !

கற்றோர் அறிஞனாய் இருப்போன்
நியாய நெறி யின்றேல்
ஆயுத மின்றி போருக்குப் போகும்
யுத்த வீரன் ஆவான் !
அவனது சினம்
தூய நீரை நஞ்சாக்கும்
அவன் வாழும் சமூகத் துக்கு !
அறிவும் பகுத்தாய்வும்
ஆத்மாவும் உடலும் போன்றவை !
உடல் வெற்றுக் கூடாகும்
உயிரூட்டும்
ஆத்மா இல்லாது போயின் !
அதுபோல்
ஆத்மா சூனிய ஆவியாகும்
ஆறறிவு
உடலின்றிப் போனால் !

(தொடரும்)

+++++++++++++

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (November 29, 2011)

Series Navigationகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இறைவன் திருநாம உச்சரிப்பு (Zikr) (கவிதை -53 பாகம் -1)ஞானப்புகழ்ச்சி இறைவேதத்திற்கு ஒப்பாகுமா
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *