தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 ஜூன் 2018

கோழியும் கழுகும்…

ஹேமா(சுவிஸ்)

வறுத்தெடுக்க  மனிதன்
கொத்திக் குடிக்கப்  பாம்பு
இயற்கையும்  சிதைக்க….
உறக்கம் விற்று
திசையோடு தவமிருக்கிறது
காக்கும் அடைக்காய்.

ஆகாயக் காவலன்
கண்களில்
மிஞ்சிப் பொரித்த
ஒற்றைக் குஞ்சை
உறிஞ்சும் மரணம்.

அருக்கனையே மறைக்கும்
அதிகாரம் வானில்
அடங்கினால்
அரிகண்டம் மாட்டுவதற்கொப்பு.
இறகு இத்தினிதான்
எம்பி எதிர்க்கிறது
இருப்பு இருக்கும்வரை!!!

ஹேமா(சுவிஸ்)

Series Navigationபுதிய சிற்றிதழ் ‘ குறி ‘ – ஓர் அலசல்ஜென் ஒரு புரிதல் – பகுதி 22

Leave a Comment

Archives