கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) களிப்பும் துக்கமும் (On Joy and Sarrow) (கவிதை – 52 பாகம் -1)

This entry is part 35 of 42 in the series 1 ஜனவரி 2012

 

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
“நீ மலைகளோடு சேர்ந்து ஏறுகிறாய். பள்ளத் தாக்குகளோடு இணைந்து இறங்குகிறாய், பசுமைத் தளம் மீது பரவுகிறாய். ஏறும் போது நடக்க உனக்கு வலுவும், இறங்கும் போது உனக்குப் பரிவும் உள்ளது. உன் நடையில் ஒரு நளினம் தெரிகிறது. நசுக்கப் பட்டவர் மீது கருணை காட்டுவதாலும், கர்வம் பிடித்து மூர்க்க வலுப் பெற்றவரிடம் கடுமையாய் நடப்பதாலும் நீ அருள் கூர்ந்த வேந்தனைப் போன்றவன்,”

கலில் கிப்ரான் (ஞானியின் பொன்மொழிகள்)

+++++++++++

சிரிப்பும் கண்ணீரும் !
என்னித யத்தின்
புன்ன கையை நான்
மாற்றம் செய்வ தில்லை
பல்வேறு
கூட்டத்து மாந்தரின்
அதிட்டத் துக்கு !
அது போல்
திருப்தி அடைவ தில்லை
தவிப்பு நிலையை
மௌனக்
கண்ணீருக்கு நான்
மாற்றம் செய்யும் போது !
எனது ஆர்வ நம்பிக்கை
இப்புவியில் :
என் வாழ்க்கை முழுவதும்
புன்னகையும் கண்ணீரும்
பின்னி யிருக்கும் !
என்னைச் சக மனிதர்
அருகே அழைத்துச் செல்வது
புன்னகை !
கழுவி இதயத்தைத்
தூய தாக்கும் கண்ணீர் !
வாழ்வு மர்மத்தைக் கூறுவதும்
கண்ணீர் !
மன முறிவு அடைந்தோர்
இனமுடன்
என்னைச் சேர்ப்பது
கண்ணீர் !
எனது வசிப்பு மீது
களிப்பைச்
சின்ன மாக்குது
புன்னகை !
காதல், அழகுத்துவம் மீது
தீராப் பசி
உண்டாவதில்
பேராவல் எனக்கு !

+++++++++++++

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (December 28, 2011)

 

Series Navigationகம்பன் மணிமண்டபத்தில் முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள் கம்பர் போற்றிய கவிஞர் என்ற தலைப்பில் உரைசிந்தனைச் சிற்பி
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *