ஜெயமோகனுக்கு “முகம் “ விருது

This entry is part 7 of 40 in the series 8 ஜனவரி 2012

திருப்பூர் கோதபாளையம் காதுகேளாதோர் பள்ளியில் குக்கூ இயக்கம் சார்பில் “முகம்” விருது ஜெயமோகனுக்கு 27/12/11 அன்று அளிக்கப்பட்டது திருப்பூரில் காதுகேளாதோர் பள்ளி முருங்கப்பாளையும், கோதாபாளையம் பகுதிகளில் 300 மாணவர்களைக்கொண்டு 15 ஆண்டுகளாக இயங்கிவருகிறது. அதன் நிர்வாகி முருகசாமியும் காது கேளாத விளிம்பு நிலை மனிதரே.
குக்கூ இயக்கம் குழந்தைகளின் மத்தியில் கல்வி, விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காக சிவராஜின் தலைமையில் இயங்கி வருகிறது. அதன் சார்பில் “ முகம் “ விருது இயற்கைவேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வார், பழங்குடியினமக்கள் தலைவர் விபி குணசேகரன்., ,ஆயிரக்கணக்கான மரங்களை நட்ட மரங்கள் நாகராஜ் போன்றோருக்கு இதுவரை வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாண்டு ஜெயமோகனின் “ அறம் “ சிறுகதைத் தொகுப்பிற்காக அவருக்கு வழங்கப்பட்டது. ”””””””’””” வாழ்க்கையில் வெற்றி பெறுவது முக்கியமில்லை. அறம் சார்ந்த விழுமியங்களுடன் வெற்றி பெறுவதே சிறந்தது. அதையே அறம் தொகுப்புக்கதைகள் வலியுறுத்துகின்றன. தன் நலனுக்காக தர்மத்தை கைவிடாத மனிதர்களின் கதையே அறம். ” என்றார் ஜெயமோகன் விருதைப்பெற்றுக் கொண்டு பேசும்போது.. அவர் பேச்சு மகா .பாரதத்துக் கதையொன்றில் பாண்டவர்கள் சொர்க்கம் புகும் வாய்ப்பை முன் வைத்து அமைந்திருந்தது.” ஒவ்வொரு மனிதனும் பணம், புகழ் சம்பாதித்து பெறுவது வெற்றியல்ல. கடைசிவரை தர்மத்தின் வழி நடப்பவனே வெற்றி பெற்றவன் “ ஜெயமோகனின் “யானை டாக்டர்”””’” “ கதையை மையமாகக் கொண்டு அப்பள்ளி மாணவமாணவியர் 30 ஓவியங்களைத் தீட்டியிருந்தது கண்காட்சியாகியிருந்தது. புகைப்படக்கலையின் தோற்றம், வளர்ச்சி மற்றும் பார்வையிழந்தோர் எடுத்த புகைப்படங்களின் கண்காட்சி, குக்கூ குழந்தைகளுக்கான 1500 நூல்கள் கொண்ட நூலகம் ஆகியவை திறக்கப்பட்டன. பாரம்பரியமான 10 ஆயிரம் விதைகள் பயிரிடப்பட்ட நாற்றுப்பண்ணை துவங்கப்பட்டது.குழந்தைகளின் ஆரவாரமும், உற்சாகமும் வினோதமான ஓசையாய் வெளிப்பட்டு மனதை நெகிழச்செய்தது.அப்பள்ளி பற்றிய ஒரு குறும்படம் அவர்களுக்கான கல்வி கற்பித்தலில் இருக்கும் அர்ப்பணிப்பையும், பள்ளிச் சூழலையும் நேர்த்தியாக, வருடும் இசைப் பின்னணியில் வெளிப்படுத்தியது. இயக்குனர் கும்பகோணம் சரவணன். பன்னாட்டு நிறுவன எதிர்ப்பில் பலியான கென்சரோவிவாவின் புகைப்படம் மட்டுமே இருந்தமேடை இலைகளாலும், புற்களாலும் வெள்ளைத்துணியின் பரப்பில் விசேசமானதாக அமைந்திருந்தது. அக்குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளில் அவர்களின் உடல் குறையை மீறிய அற்புத அசைவுகளில் திறமை வெளிப்பட்டது. தாளம், அசைவுகளின் மூலமும், அதிர்வுகளின் மூலமும் பயிற்சி பெற்ற பாரம்பரிய கிராமியக்கலை அம்சங்களை அவை கொண்டிருந்தன. மேடையைச்சுற்றி இருந்த இடங்களில் நெய்விளக்கு தீபங்கள், ஈர விதைகள் நிரம்பிய மண் கலயங்கள், அழகான மரங்கள், கட்டிடங்களில் அபூர்வமான வர்ண புகைப்படங்கள் அச்சூழலை ரம்மியமாக்கியிருந்தது.குக்கூ இயக்கம் சார்பில் வழியெங்கும் நடப்பட்ட புதிய 2000 மரங்கள், வருகையாளர்களைக் கொண்டு நடப்பட்ட பல்வேறு தானியங்களின் ஈர விதைகளின் மணம், லேசான பனி சூழ்ந்த சூழல் இவ்விருது வழங்க உரிய இடமாக்கியிருந்தது காதுகேளாதோர் பள்ளியை..விழாவில் தென்பட்ட பல்வேறு துறை சார்ந்தவர்களின் செயல்பாடு ஒருமித்ததாய் அமைந்ததால் .நினைவில் நிற்கும் நிகழ்ச்சியாகியிருந்தது.
( அறம் தொகுப்பு வெளியீடு: வம்சி பதிப்பகம், 19 டிஎம் சாரோன், திருவண்ணாமலை .விலை ரூ 250) . காது கேளாதோர் பள்ளி , முருகம்பாளையம், திருப்பூர் 641687 . தொலைபேசி: 0421-2261201, 5533962.

subrabharathi@gmail.com

Series Navigationமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை –இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *