தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

28 ஜூன் 2020

தீட்டுறிஞ்சி

ந.பெரியசாமி

Spread the love

தூர்த்த குளக்கரையிலிருந்து வந்த விசும்பலின்
துயர்வெடிக்கக் கலைந்த தூக்கத்தின் எரிச்சலோடு
இடம் அடைய அதிர்ந்தேன்
எழுப்பிய தூண்களிடையே நின்றிருந்தாள்
குலசாமியான செல்லியம்மன்
யாது துயர் தாயே
மண்டியிட்டேன்
அவளும் மண்டியிட்டு தலைநிமிராது
நாப்கீன்கள் படைக்க வேண்டினாள்
வீடு திரும்ப நினைத்துக்கொண்டேன்
பெரியாயிக்கு சேலை படைக்கும்
அம்மாவின் வேண்டுதலையும்
நிறைவேற்றிட வேண்டுமென…

Series Navigationசாந்தகுமாரின் ‘மௌனகுரு’நன்றி உரை

One Comment for “தீட்டுறிஞ்சி”


Leave a Comment

Archives