டெம்போரல் லோப் என்பது என்ன?
படத்திலிருப்பது மூளையின் பல பகுதிகள். ஒவ்வொரு பகுதியும் ஒரு லோப் என்று வழங்கப்படுகிறது. ஆங்கிலத்தில் டெம்பில் temple என்பது http://en.wiktionary.org/wiki/temple நெற்றிக்கு பக்கவாட்டில் கண்களுக்கு பின்னால் இருக்கும் இடம். இந்த இடத்தில் இருக்கும் மூளையின் பகுதி டெம்போரல் லோப் என்று அழைக்கப்படுகிறது.
உடலின் உணர்வு தளங்கள், கண், மூக்கு, வாய், தோல் ஆகியவை இந்த பகுதிக்கு தன் நரம்புகளை அனுப்பிகொடுக்கின்றன. இந்த மூளை அந்த உணர்வுகளை பொருளுள்ளதாக மாற்றுகிறது. இதுவே காதிலிருந்து வரும் ஒலியையும், பேச்சு, கண் ஆகிய உறுப்புகளிலிருந்து வரும் செய்திகளையும் ஒழுங்குபடுத்துகிறது. temporal lobe என்னும் இந்த பகுதியில் வரும் வலிப்பு இவ்வளவு உணர்வுத்தளங்களிலிருந்து வரும் செய்திகளை பாதிக்கின்றன. இந்த பகுதியில் வரும் வலிப்பு நோய், ஹிப்போகாம்பஸ் பகுதியையும் பாதிக்கிறது.
What is TLE? டெம்போரல் லோப் எபிலப்ஸி என்பது என்ன?
டெம்போரல் லோப் எபிலப்ஸி என்னும் டெம்போரல் லோப் வலிப்பு ஒரு நோய். இது டெம்போரல் லோப் பகுதியில் தோன்றும் வலிப்பு (நியுரான்களில் நடக்கும் மின்புயல்). இது வலது டெம்போரல் லோப் இடது டெம்போரல் லோப் அல்லது இரண்டிலும் நடக்கலாம்.
டெம்போரல் லோப் வலிப்பு இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. ஹிப்போகாம்பஸ், அமிக்டலா பகுதிகளில், அதாவது ஏறத்தாழ மூளையின் மையப்பகுதியில் நடப்பது, மெசியல் டெம்போரல் லோப் வலிப்பு MTLE என்று அழைக்கப்படுகிறது. மூளையின் வெளிப்புறத்தில் டெம்போரல் லோபின் மேற்பரப்பில் நடப்பது லேட்டரல் டெம்போரல் லோப் வலிப்பு அல்லது LTLE என்று அழைக்கப்படுகிறது.
இரண்டு வகையிலும், பொதுவாக வலிப்பு வருபவர்களுக்கு நடக்கும் பலவிதமான குணநலன்கள் இந்த வலிப்புகளிலும் இருக்கலாம். மூளையின் ஒரு சிறுபகுதியில் நடக்கும் மூளை வலிப்பு (simple partial seizures ) இதனை aura அல்லது ஒளிவெள்ளம் என்று குறிக்கிறார்கள். இது முழு நினைவு இருக்கும்போதே நடக்கிறது. இந்த சிறு மூளைவலிப்பு அடைபவர்கள் நினைவு தவறிவிடுவதில்லை. ஏற்கெனவே இந்த உணர்வை அடைந்திருப்பது போன்ற உணர்வு (feelings of deja vu ), பழங்காலத்தில் நடந்த விஷயங்கள் மீண்டும் நினைவுக்கு வருதல், அல்லது நடந்ததை மறந்துவிடுதல் ஆகியவை பக்க விளைவுகள். உணர்வுகளை ஒழுங்குபடுத்தும் டெம்போரல் லோபில் இந்த வலிப்பு வருவதால், இல்லாத மணத்தை நுகர்வது, ருசி, எதுவும் யாருமே பேசாமலிருந்தாலும் எதையோ கேட்பது, இல்லாததை பார்ப்பது போன்ற பிரமைகளை நோயாளிகள் அடையலாம்.
Image from http://www.migraines.org
பெரிய பகுதி வலிப்புகள் (Complex partial seizures) சுயநினைவை பாதிக்கின்றன. சாதாரண பகுதி வலிப்புகள் பரவி முழு டெம்போரல் லோபையும் தாக்கும்போது இவ்வாறு நடக்கிறது. இவ்வாறு நடக்கும்போது, பிரமைகள், வன்மையான போக்கு, மனநிலையில் மாற்றம், நினைவில் பாதிப்பு ஆகியவை நடக்கலாம். சுய நினைவு இழப்பதோடு கூடவே, கை கால்களில் சில பகுதிகளில் ஒரே மாதிரி இழுத்துகொள்ளும் செய்கைகளுமோ, வாய் கோணிக்கொள்வதோ நடக்கலாம். அல்லது நகராமல் அப்படியே பார்த்துகொண்டிருப்பது, யாராவது கூப்பிட்டால் பதில் கூறாமல் இருத்தல் ஆகியவை நடக்கலாம்.
மற்ற வகை வலிப்புகளிலிருந்து டெம்போரல் லோப் வலிப்பு எவ்வகையில் மாறுபட்டது?
டெம்போரல் லோப் வலிப்பு உள்ளவர்களுக்கும் மற்ற வகை வலிப்பு உள்ளவர்களுக்கும் இடையே சில முக்கியமான வேறுபாடுகள் உள்ளன.(Rodin et al., 1976). நோய்க்கு காரணம் எது, மருந்துக்கு எவ்விதத்தில் நோய் பதிலீடு அளிக்கிறது, குணாம்ச மாறுதல் ஆகியவை இந்த வேறுபாடுகள் எனலாம். சுமார் 71% சதவீத டெம்போரல் லோப் நோயாளிகள் மூளையில் மற்ற இடங்களில் தோன்றும் மற்ற வகை வலிப்புகளாலும் பாதிக்கப்படுகிறார்கள்.
டெம்போரல் லோப் வலிப்பு மரபணு ரீதியாக வருவதற்கும் வாய்ப்புகள் உண்டு. மைய நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதால், காயப்படுவதால் இவை தோன்றலாம். உதாரணமாக சிறு குழந்தையாக இருக்கும்போது எதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருப்பது, அவர்கள் வயது முதிர்ந்ததும் டெம்போரல் லோப் வலிப்பாக வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
http://www.macalester.edu/psychology/whathap/UBNRP/tle09/TLE.html
டெம்போரல் லோப் வலிப்பு நோய் அறிகுறிகள்
டெம்போரல் லோப் வலிப்பு வரும்போது என்ன நடக்கிறது என்பதை நோய்வாய்ப்பட்டவரே விவரித்தது இது “ ஒரு வினோதமான உணர்வு அடையப்பெற்றேன். இதனை வார்த்தைகளில் கூறவியலாது. முழு உலகமும் மிக மிக உண்மையாக முதலில் தோன்றியது. எல்லாமே மிக தெளிவடைந்தாற்போல ஒரு உணர்வு. பிறகு நான் இங்கே இருக்கிறேன். ஆனால் இங்கே இருக்கவில்லை. சொல்லப்போனால் ஒரு கனவில் இருப்பது போல. இதே உணர்வை இதே நிகழ்வை பல்லாயிரக்கணக்கான முறை வாழ்ந்து விட்டதுபோன்ற ஒரு உணர்வு. மற்றவர்கள் பேசுவது எனக்கு கேட்கிறது. ஆனால் அவற்றில் எதுவும் எனக்கு அர்த்தமாகவில்லை. இது நடக்கும்போது நான் பேசக்கூடாது என்பதை அறிந்திருக்கிறேன். ஏனெனில் நான் முட்டாள்த்தனமாக பேசுகிறேன். சில சமயங்களில் நான் பேசுகிறேன் என்று நினைக்கிறேன். ஆனால் மற்றவர்கள் நான் எதுவும் சொல்லவில்லை என்று சொல்கிறார்கள். இது முழுவதும் நடக்க ஒரு நிமிஷமோ அல்லது இரண்டு நிமிஷமோ ஆகிறது” (www.epilepsy.com)
Auras ஒளி வெள்ளம்
குறிப்பிட்ட பகுதிகளில் மென்மையான வலிப்புகள் தோன்றுவதையே ஒளிவெள்ளம் Auras என்று குறிக்கிறோம். இந்த வகையில் டெம்போரல் லோப் பகுதியில் தோன்றும் வலிப்பு. இது பெரும்பாலும் வலிப்பு தோன்றுவதற்கு முன்னால் தோன்றும். பல நோயாளிகள் இதனை வலிப்பு தோன்றப்போகிறது என்பதன் எச்சரிக்கை என்று விவரிக்கிறார்கள். சுமார் 80 சதவீத டெம்போரல் லோப் வலிப்பு நோயாளிகள் இவ்வாறு ஒளிவெள்ளம் தோன்றுவதை குறிப்பிடுகிறார்கள். இந்த ஒளிவெள்ளங்கள் பல விதங்களில் தோன்றுகின்றன. 327 வகையான வெவ்வேறு உணர்ச்சிகளை (Lennox, Cobb, 1933) பரந்த அளவு ஆராய்ச்சிகள் அட்டவணைப்படுத்தியிருக்கின்றன.
பார்வை பிரமைகள் இந்த பார்வை பிரமைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி தோன்றுகின்றன. ஒக்கிபிடல் லோப்occipital lobeபகுதியே கண்ணிலிருந்து வரும் செய்திகளை குவித்து பொருளாக்கம் செய்கிறது. இந்த ஓக்கிபிடல் லோபில் வலிப்பு தோன்றுபவர்களுக்கு நேரும் பார்வை பிரமைகளை விட டெம்போரல் லோபில் வலிப்பு வரும் நோயாளிகள் வித்தியாசமான பார்வை பிரமைகளை அடைகிறார்கள். அடிப்படையான பார்வை பிரமைகளை விட சிக்கலானதும், பிம்பங்கள் வலைந்து நெளிந்தும் காணப்படலாம். சாதாரண உருவத்தை விட பெரியதாகவோ சிறியதாகவோ காணப்படலாம். சில சமயங்களில் தலை சுற்றல் vertigo (உலகம் சுழல்வது போன்ற உணர்வு) தோன்றலாம். சில சமயங்களில் தங்களது உடலை தாங்களே வெளியேயிருந்து பார்ப்பது போன்ற உணர்வு இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். சில சமயங்களில் இந்த பிரமைகளை செயற்கை முறையிலேயே தூண்டி எந்த பகுதி வலிப்பு அடைகிறது என்பதை மருத்துவர்கள் காண்கிறார்கள்.
மற்ற குணாம்ச அறிகுறிகள் பார்வை பிரமைகளும் மற்ற நான்கு உணர்வுகளில் தோன்றும் பிரமைகளும் டெம்போரல் லோப் வலிப்பு கொண்டவர்களுக்கு பொதுவானதாக இருந்தாலும், மற்ற வகை குணாம்ச அறிகுறிகளும் டெம்போரல் லோப் நோயாளிகளுக்கு உண்டு. இவை கீழே கூறப்பட்டுள்ளன
Aggression வன்மையான போக்கு
வன்மையான எதிர்ப்பு குணம் தோன்றுவது சில சமயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது (Taylor, 1969). மற்ற வன்மையான குணமுள்ளவர்களிடமிருந்து டெம்போரல் லோப் வலிப்பு நோய் உள்ளவர்கள் கொள்ளும் வன்மையான குணம் பல விதங்களில் வேறுபட்டுள்ளது. இவர்கள் மிக குறுகிய காலத்திலேயே கோப வயப்படுவதும், விரைவிலேயே அமைதியாவதும், மறதியும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். உயிரற்ற பொருள்கள் மீதும், மற்ற மனிதர்கள் மீதும் கோபம் கொள்வதும் பொதுவாக காணப்படுகிறது.
சைகோபாதலஜி Psychopathology
1961இல் டெம்போரல் லோப் நோயாளிகளிடம் பாரோனோயா (மற்றவர்கள் தன்னை கொல்ல திட்டமிடுகிறார்கள் என்ற உணர்வு), மன அழுத்தம், கவலை, மற்றவர்களிடமிருந்து விலகியிருத்தல் போன்றவை மற்றவர்களை விட இந்த டெம்போரல் லோப் நோயாளிகளிடம் அதிகம் என்று கிப்ஸ் என்ற ஆராய்ச்சியாளர் தெரிவிக்கிறார் இடது டெம்போரல் லோபில் பாதிக்கப்பட்டவர்கள் பிளவாளுமை ( schizophrenia ), மற்றவர்கள் உங்களை கொடுமைப்படுத்துகிறார்கள் அடக்குமுறை செய்கிறார்கள், (paranoic ideation, persecuted mentality) என்ற உணர்வு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
உணர்வுப்பூர்வமான அணுகுமுறை Emotionality
தீவிரமான உணர்ச்சிகள் கடுமையான மன அழுத்தம் ஆகியவை டெம்போரல் லோப் வலிப்பு நோய் உருவாக காரணமாக இருக்கின்றன என்று காட்டப்பட்டுள்ளதாலும், அவர்களது தீவிர உணர்ச்சிகள், அவர்கள் அடையும் வலிப்பின் தீவிரத்தன்மையையும் பாதிப்பதால், மனவியல் ஆலோசனைகள் மனநோய் உதவி ஆகியவை டெம்போரல் லோப் வலிப்புக்கு நல்ல மருத்துவமாக இருக்கமுடியும் என்று கருதுகிறார்கள். தங்களது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த பழகிக்கொண்டால், வலிப்பும் குறையும் என்று அறிகிறோம்.
—
மதமும் இலக்கியமும்
டெம்போரல் லோப் வலிப்பு நோயின் கலாச்சார வெளிப்பாடுகள்.
மனித வரலாற்றில் மிகவும் ஆழமான அனுபவங்களுடன் தொடர்புடையதாக டெம்போரல் லோப் வலிப்பு நோய் இருக்கிறது. இதுவே மற்ற வலிப்பு நோய்களிலிருந்து இந்த டெம்போரல் லோப் வலிப்பு நோயை பிரித்து காட்டுகிறது எனலாம். பல முக்கியமான வரலாற்று நாயகர்கள் நரம்பு மூளை வியாதிகளால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அந்த காலத்தில் இந்த அறிகுறிகள் புரிந்துகொள்ளப்படவில்லை, சொல்லப்போனால், பெயர் சூட்டக்கூட படவில்லை. டெம்போரல் லோப் எபிலப்ஸி பற்றிய ஆய்வுகளும், அறிகுறிகளும் மருத்துவ ஆராய்ச்சிகளும் நடந்த பின்னால், பல வரலாற்றாசிரியர்களும், மூளை நரம்பு அறிவியலாளர்களும், பல வரலாற்று நாயகர்களும், அவர்களது வாழ்வில் TLE எனப்படும் டெம்போரல் லோப் வலிப்பு நோயின் பங்கும், அவர்களது அந்த வலிப்பு நோயின் விளைவாக அவர்களது வாழ்க்கையும், நமது கலாச்சாரமும் எவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பதை ஆராய்ந்திருக்கிறார்கள்.
டெம்போரல் லோப் வலிப்பு நோய் உள்ளவர்கள் தங்களது வலிப்பு அனுபவங்களுக்கு முன்னால், aura எனப்படும் ஒளிவெள்ளத்தை பற்றி கூறியுள்ளார்கள். இவை குத்துமதிப்பான எச்சரிக்கையிலிருந்து, மிகவும் ஆழமான அனுபவங்கள் விரிந்த மனநிலைகள் வரைக்கும் வித்தியாசனவை. இவை பாதிக்கப்படும் அந்த மனிதரின் உலகப்பார்வையையே மாற்றக்கூடியவை. ஒவ்வொரு நபருக்கும் இந்த வலிப்பு நோய் வருவதற்கு முன்னால் வரும் aura வித்தியாசனது என்றாலும், பெரும்பாலானவை கீழ்க்கண்டவற்றை கொண்டிருக்கின்றன(Taylor, 1987):
hypergraphia (விடாது அதிகப்படியாக எழுதிகொண்டேயிருத்தல் அல்லது வரைதல், ) முன்னர் பார்த்தது போன்ற உணர்வு(deja/jamais vu ) புதியதாக நடப்பது ஏற்கெனவே நடந்தது போன்ற உணர்வும். ஏற்கெனவே நடந்தது முதன்முறையாக நடப்பது போன்ற உணர்வும். முன்னர் கேட்டது போன்ற உணர்வு (deja/jamais entendu ) இது கேட்பது. ஏற்கனவே கேட்டது போன்ற உணர்வு, முன்னர் கேட்டதை புத்தம் புதியதாய் கேட்பது போன்ற உணர்வு. பயம், அதி மகிழ்ச்சி, உச்சகட்ட உணர்ச்சிக்குவியல் கடவுளிடமிருந்து செய்தி வந்தது போன்ற உணர்வு
இவை எல்லாம் நமது சாதாரண வாழ்வில் எல்லோருக்கும் நடக்கக்கூடியவை என்றாலும், இந்த tle டெம்போரல் லோப் நோயாளிகளுக்கு உச்சகட்டமாகவும் எல்லாமே சேர்ந்து வலிப்பு நோய் சமயத்தில் நடப்பதும் முக்கியமானது. இந்த அறிகுறிகள் இருக்கும் வரலாற்று நாயகர்களை நாம் புரிந்துகொள்வதும், நம்மை பற்றியும் நம் கலாச்சாரத்தை பற்றியும் அறிந்துகொள்வதற்கும் உதவும்.
மதம்
இந்த ஆராய்ச்சிகளில் பெரும் விவாதப்பொருளாக இருக்கும் ஒரு துறை, நியூரோ தியாலஜி எனலாம். இது மதம் பற்றிய நியூரான் அறிவியலும், மத அனுபவங்கள் பற்றிய ஆராய்ச்சியும். பலர் இப்படிப்பட்ட ஆராய்ச்சிகள் மத நம்பிக்கைகளது மதிப்பை குறைப்பதாகவும், அவமரியாதை செய்வதாகவும் கருதுகிறார்கள். ஆனால், இந்த ஆராய்ச்சிகள் மதத்தை கேவலப்படுத்தும் எந்த முயற்சியிலும் இல்லை. நாம் அனைவருக்கும் பொதுவான மத அனுபவங்களை அறிவியல் ரீதியில் புரிந்துகொள்வதற்கும் மூளையின் செயல்பாடுகளை புரிந்துகொள்வதற்குமே இந்த ஆராய்ச்சிகள். மத பிம்பங்கள் தோன்றும் பிரமை, மிகவும் தெளிவாக தோன்றும் நினைவுகள், கேட்பது போன்ற பிரமை, தீவிரமான மத நம்பிக்கை உணர்வு, ஏதோ ஒரு மதத்துக்கு திரும்பி செல்லும் அளவுக்கு மத மாற்றம் ஆகியவற்றோடு டெம்போரல் லோப் வலிப்பு நோய் இறுக்கமாக தொடர்பு கொண்டது.
சொல்லப்போனால், பல விஞ்ஞானிகளும் வரலாற்றாசிரியர்களும் கிறிஸ்துவத்தின் செயிண்ட் பால் அவர்களுக்கு டெம்போரல் லோப் வலிப்பு நோய் இருந்திருக்கிறது என்றே கூறுகிறார்கள்.
St. Paul செயிண்ட் பால்
அபோஸ்தலர்களின் நடபடிகள் என்ற விவிலிய புத்தகத்தில் செயிண்ட் பவுலின் மத மாற்றத்துக்கு இரண்டு வெவ்வேறு விவரிப்புகள் காணப்படுகின்றன. முதலாவது மூன்றாம் மனிதரது பார்வையில். மற்றொன்று ஜெருசலத்தில் அவர் கைது செய்யப்பட்டபோது அவர் பேசியது. இரண்டுமே சிறியதாக இருந்தாலும், அவரை மருத்துவ ரீதியில் பார்க்க ஏராளமான தடயங்களை தரவில்லை. ஆனால், அவற்றில் சொல்லப்பட்டுள்ளவை அவருக்கு டெம்போரல் லோப் வலிப்பு இருந்திருக்கிறது என்பதற்கு தெளிவான அடையாளங்களை சொல்கின்றன.
St. Paul’s Conversion from Livre d’Heures d’Étienne Chevalier by Jean Fouquet Image from http://www.wikipedia.org
இரண்டு பத்திகளுமே பவுல் தரையில் விழுவதையும், குருடாக்கவைக்கும் ஒளியை அனுபவித்ததையும் விவரிக்கின்றன. அதன் பிறகு “நான் நாசரேத்தின் ஜீஸஸ், நீ என்னை துன்பப்படுத்துகிறாய்” “Jesus of Nazareth, whom you are persecuting” (Acts of the Apostles 22:6-21 ) என்ற குரல் கேட்டதாக சொல்கிறார். அதன் பிறகு அவரால் பார்க்க முடியவில்லை. டமாஸ்கஸுக்கு போகும் மூன்று நாட்களில் அவர் சாப்பிடவோ குடிக்கவோ இல்லை. அவரது இந்த அனுபவத்துக்குப் பிறகு பவுல் கிறிஸ்துவத்தின் தீவிரமான பின்பற்றுபவராகவும், கிறிஸ்துவத்தின் மிஷனரியாகவும் ஆகிறார். தீவிர மத ஆர்வத்தையும், மதமாற்ற வேகத்தையும் பெறுகிறார்.
கடவுளின் குரல்கள், தெய்வீக உருவங்களின் காட்சி ஆகிய பிரமைகள், உடல் தளர்ந்து விழுதல் ஆகியவை எல்லாமே டெம்போரல் லோப் வலிப்பு நோயின் பொதுவான அறிகுறிகள். டெம்போரல் லோப் வலிப்பு நோயாளிகள் திடீரென்று மதம் மாறுவது அடிக்கடி ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. 2 கொரிந்தியன்12 இல் பவுல் இன்னொரு அனுபவத்தை விவரிக்கிறார். அதில் சுவர்க்கத்தில் மாட்டிகொண்டதை பற்றியும் மனித வாய்களால் உச்சரிக்கப்படாத புனித ரகசியங்களை பற்றியும் பேசுகிறார். அதே போல, அவருக்கு மாம்சத்திலே முள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் அது சாத்தானுடைய தூதனாக இருக்கிறது என்றும் பேசுகிறார். அந்த முள், அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற abundance of the revelations ஏராளமான தீர்க்கதரிசனங்கள் அல்லது wealth of visionsஇலிருந்து அவர் சுய பெருமை பட்டுகொள்ளாதபடிக்கு அவரை துன்புறுத்துகிறது என்றும் கூறுகிறார். இந்த விவரிப்பு செயிண்ட் பவுலுக்கு டெம்போரல் லோப் வலிப்பு நோய் இருந்திருக்கும் என்று காட்டுகிறது. அடிக்கடி வரவில்லை என்றாலும், திரும்பத்திரும்ப வரும் இப்படிப்பட்ட காட்சிகளும், தன்னிடமே ஏதோ குறையுள்ளது என்ற அவருடைய உணர்வும் இங்கே வெளிப்படுகிறது.
இப்படிப்பட்ட முக்கியமான வரலாற்று நாயகரை பற்றி பேசுவது அவரை அவமரியாதை செய்ய அல்ல. மாறாக, பொதுவாக மனிதர்களுக்குள்ள இப்படிப்பட்ட குணாம்சத்தை வெளிகொணர்வதும் அது பற்றிய ஒரு புரிதலுக்கு நம்மை தயார் படுத்துகொள்வதுமே.
இது பற்றி பல ஆய்வுக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. அதில் ஒன்று இங்கே இருக்கிறது
http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1032067/pdf/jnnpsyc00553-0001.pdf
Art கலை இலக்கியம்
மனித அடிப்படையான குணாம்சத்திலிருந்து வெளிப்படுவது கலை. நியூரோ சயன்ஸ், மதம் ஆகியவை எவ்வாறு புற உலகை நாம் எவ்வாறு புரிந்துகொள்கிறோம் என்பதற்கு உதவுகிறதோ அதே போல கலையும் இலக்கியமும் உலகத்தை பற்றிய புரிதலுக்கு நம்மை அழைக்கின்றன. மனவியலில் பல துறைகள் கலையை ஆராய்கின்றன. 1992இல் டெம்போரல் லோப் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட பல கலைஞர்களை ஒன்று சேர்த்து அவர்கள் அந்த நோயை பற்றி உணர்வை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கப்பட்டனர். இப்படிப்பட்ட நிலையால் பாதிக்கப்பட்டவர் எவ்வாறு உலகத்தை அணுகுகிறார் என்பதை மற்றவர்கள் காண இது ஒரு வாய்ப்பாகும்.
வரலாற்று நாயகரான ஒரு மாபெரும் எழுத்தாளர் இதே நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அது அவரது வாழ்க்கையையும் கலையையும் எவ்வாறு செழுமைப்படுத்தியது, மாற்றியது என்பதை அவரே அறியத்தருகிறார். அது ஃபேடோர் மிகயீலோவிச் தாஸ்தாவஸ்கி.
Dostoevsky தாஸ்தாவஸ்கி
பெடோர் தாஸ்தாவஸ்கி உலகத்தின் மிகச்சிறந்த நாவலாசிரியர்களில் ஒருவராக கருதப்படுகிறார். குற்றமும் தண்டனையும், Crime and Punishment, The Idiot and The Brothers Karamazov. முட்டாள், கரமசோவ் சகோதரர்கள் ஆகிய உன்னத படைப்புகளுக்காக அவர் உலகெங்கும் கொண்டாடப்படுகிறார். அதே நேரத்தில் அவருக்கு இருந்த டெம்போரல் லோப் வலிப்பு நோய் மீது ஏறத்தாழ காதலுடன் இருந்தார் என்பது ஆச்சரியமானது. ஒரு ராணுவ அறுவை சிகிச்சை மருத்துவருக்கு 1821இல் பிறந்த தாஸ்தாவெஸ்கி ருஷ்ய ராணுவத்தில் சில காலம் பணியாற்றினார். அதன் பிறகு எழுத்துக்கே முழுவதுமாக தன்னை அர்ப்பணித்துகொண்டார். 1849இல் ருஷ்ய அரசால் துரோக குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டார். அவரை சுட்டு கொலை செய்ய போர்வீரர்கள் தயாராக இருக்கும்போது ஜார் அவரை மன்னித்து விடுதலை செய்தார். தன் வாழ்நாளில் மீத நாட்கள் முழுவதும் எழுதுவதிலேயே கழித்தார். இரவிலும் பகலிலும் தொடர்ந்து வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஒரு நாளைக்கு இரண்டு தடவையிலிருந்து நான்கு மாதங்களுக்கு ஒருமுறை என்ற வீதத்தில் அவருக்கு டெம்போரல் லோப் வலிப்பு வந்தது என்பதை குறித்திருக்கிறார்.
http://en.wikipedia.org/wiki/Fyodor_Dostoyevsky
A portrait of the young Dostoevsky
தாஸ்தாவெஸ்கிக்கு வந்த டெம்போரல் லோப் வலிப்பு உச்சகட்டமகிழ்ச்சியை உண்டுபண்ணியது என்பது ஒரு வித்தியாசமான செய்தி. வலிப்பு வருவதற்கு முன்னால் வரும் aura என்னும் ஒளிவெள்ளம் அவருக்கு கொடுத்த இன்பமும் பெரும் மகிழ்ச்சியும் அவருக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தன என்று எழுதுகிறார். அந்த ஒரு சில வினாடிகளுக்காக தன் வாழ்நாளில் 10 வருடங்களையும் தியாகம் செய்ய தயாராக இருப்பதாக எழுதினார். தாஸ்தாவெஸ்கியின் “முட்டாள்” நாவலில் வரும் கதாநாயகன் இளவரசன் முஷ்கின் என்பவருக்கும் வலிப்பு நோய் இருக்கிறது. பெரும்பாலான திறனாய்வாளர்கள் அந்த நாவலை அவரது சுயசரிதை என்று கருதுகிறார்கள். அதன் இரண்டாம் அத்தியாயத்தில் இளவரசருக்கு வரப்போகும் வலிப்புக்கு முந்திய நிலையை விவரிக்கிறார்,” “immediately preceding (his seizures), he had always experienced a moment or two when his whole heart, and mind, and body seemed to wake up to vigour and light; when he became filled with joy and hope, and all his anxieties seemed to be swept away for ever; these moments were but presentiments, as it were, of the one final moment… in which the fit came upon him.”
”அவரது வலிப்புக்கு சற்றுமுன்னர், அவர் எப்போதுமே, ஓரிரு கணங்கள் தனது முழு இதயமும், மனமும், உடலும் உச்சகட்ட உணர்வுக்கும், ஒளிவெள்ளத்துக்கும் எழுச்சி அடைந்து நின்றதையும், எல்லையற்ற பேரானந்தத்தையும் நம்பிக்கையும் நிறைந்து நின்றதையும், அவரது கவலைகள் அனைத்தும் துப்புரவாக நீக்கப்பட்டதையும், உணர்ந்தார். அந்த கணங்கள் ஒரு எச்சரிக்கை மணிஒலிகள், ஒரு இறுதிகணம், அவருக்கு வலிப்பு பாய்ந்தேறியது”
தாஸ்தாவெஸ்கியின் நிலை, இந்த நோயை பற்றிய எதிர்மறையான கருத்துக்கள் இருப்பதை பற்றிய, பல சிக்கலான கடினமான கேள்விகளை எழுப்புகிறது. அதே நேரத்தில் இன்பம், மகிழ்ச்சி ஆகியவற்றை பற்றியும் நம்மை ஆராயத்தூண்டுகிறது. பின்னொரு அத்தியாயத்தில் “முட்டாள்” நாவலில் இதே கேள்வியை தாஸ்தாவெஸ்கி எழுப்புகிறார்.
“What matter though it be only disease, an abnormal tension of the brain, if when I recall and analyze the moment, it seems to have been one of harmony and beauty in the highest degree–an instant of deepest sensation, overflowing with unbounded joy and rapture, ecstatic devotion, and completest life?”
”நான் அந்த கணத்தை திரும்ப நினைவுபடுத்திகொண்டு ஆராயும்போது, அந்த கணம் உச்சகட்ட இணக்கத்தையும், உச்சகட்ட அழகையும் கொண்டிருந்ததை உணர்கிறேன் என்றால், அது அக்கணத்தில் மிகவும் ஆழமான உணர்வையும், கட்டற்ற எல்லையற்ற மகிழ்ச்சியிலும், பேரானந்தத்தையும், களிப்பூட்டும் பக்தியையும், வாழ்க்கை முழுமையடைந்ததையும் உணர்ந்தேன் என்றால், அது நோயாகவோ, அல்லது மூளையில் அசாதாரணமான பிரச்னையாகவோ இருந்தால் என்ன?” என்று எழுதுகிறார்.
இவர் மட்டுமே அல்ல. பல மிகச்சிறந்த எழுத்தாளர்களையும் கலைஞர்களும் இப்படிப்பட்ட டெம்போரல் லோப் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு அதன் மூலம் அடைந்த அனுபங்களை மிகச்சிறந்த கலைப்படைப்புகளாக மாற்றியவர்கள்.
இதுவரை ஆவணப்படுத்தப்பட்ட கலைஞர்களாக கீழ்க்கண்டவர்களை குறிப்பிடலாம்.
ஓவியர் வின்சண்ட் வான்கோ லூயிஸ் கரோல் (சார்லஸ் டாட்ஜ்சன்) எட்கர் ஆலன் போ குஸ்டாவ் ஃப்ளாபெர்ட் பிலிப் கே டிக் ஸில்வியா பிளாத் டிவைன் காமெடி எழுதிய இத்தாலியின் மிகச்சிறந்த கவிஞர் டாண்டே 18ஆம் நூற்றாண்டின் நாடகாசிரியர் மோலியெர் சர் வால்டர் ஸ்காட் (இவான்ஹோ , வேவர்லி ஆகிய படைப்புகளை எழுதியவர்) 18 ஆம் நூற்றாண்டு எழுத்தாளர் ஜோனதன் ஸ்விஃப்ட் (குலிவர் ட்ராவல்ஸ் எழுதியவர்) அல்பிரட் லார்ட் டென்னிஸன் (மாபெரும் ஆங்கிலக்கவிஞராக மதிக்கப்படுபவர்) மாபெரும் கவிஞர் ஷெல்லி சகலகலாவல்லவர் லியனர்டோ டா வின்ஸி
மேலே இருப்பது சிறிய வரிசைதான். விக்கி பக்கம் இன்னும் ஏராளமான வரலாற்று நாயகர்களை வலிப்பு நோய் கொண்டவர்களாக பட்டியலிடுகிறது
http://en.wikipedia.org/wiki/List_of_people_with_epilepsy
http://www.macalester.edu/psychology/whathap/UBNRP/tle09/home.html
- அள்ளும் பொம்மைகள்
- சில்லறை நோட்டு
- அகநானூறு உணர்த்தும் வாழ்வியல் அறன்கள்
- காதறுந்த ஊசி
- ஜென் ஒரு புரிதல் -26
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை –
- ஜெயமோகனுக்கு “முகம் “ விருது
- இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை
- மக்கள் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள் (துருக்கி நாட்டுச் சிறுகதை)
- சென்னை புத்தகக் கண்காட்சியில் வல்லினம் பதிப்பக நூல்கள்
- ஏன்?
- கிறுக்கல்கள்
- சிற்றிதழ் அறிமுகம் : சங்கு
- சாந்தகுமாரின் ‘மௌனகுரு’
- தீட்டுறிஞ்சி
- நன்றி உரை
- முனைவர் பட்ட பொது வாய்மொழித்தேர்வு அறிவிப்பு
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) களிப்பும் துக்கமும் (கவிதை – 52 பாகம் -2)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் – எனக்கொரு குருநாதர் (கவிதை -56)
- கவிஞர் ந. பிச்சமூர்த்தியின் மகளுக்கு உதவ
- புத்தகச் சந்தை 2012 – ஸ்கூப் சுவாரஸ்யங்கள்
- ………..மீண்டும் …………..
- பாசாங்குப் பசி
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 5
- பஞ்சரத்னம்
- மார்கழி காதலி
- துளிதுளியாய்….
- கூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள் !
- ஏதோ ஒன்று (கடவுள்? நேரம்? வினை)
- ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் (Shakespeare’s Sonnets : 1) எழில் இனப் பெருக்கம்
- சிலை
- மண் சுவர்
- அழகின் சிரிப்பு
- பூபாளம்
- Learn Hindu Vedic Astrology
- கவிஞர் குட்டி ரேவதியின் ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் நூல் வெளியீட்டு விழா
- பஞ்சதந்திரம் தொடர் 25 முட்டாளுக்குச் செய்த உபதேசம்
- முன்னணியின் பின்னணிகள் – 21 சாமர்செட் மாம்
- முடிச்சு
- கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 4