தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

28 ஜூன் 2020

தமிழகக் கல்வி நிலை பற்றி

Spread the love

G Ramakrishnan

ஓராண்டிற்கு முன் தமிழகக் கல்வி நிலை பற்றியும் கபில் சிபலின் மைய அரசின் மோசடி முயற்சிகள் பற்றியும் சொல்லியிருந்தேன். மேலும் ஆகஸ்டில் சமச்சீர் கல்வி பற்றி ராஜாராம் எழுதியிருந்தார்.
கபிலின் மேலதிக விளையாட்டுகள், உச்ச நீதிமன்றத்தின் குழப்பமானத் தீர்ப்பு, சுப்ர பாரதி மணியனின் செய்தி (திண்ணை) போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்குப் பின் மீண்டும் சந்திக்கிறேன்.
மைய அரசு முயற்சிகளைப் பார்க்கலாம்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பதையே அறவே 2013 லிருந்து அகற்றும் முடிவை மைய பள்ளிக் கல்வி ஆணையம் (CBSE) அறிவித்துள்ளது. பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மாநில மேனிலைக் கல்விச் சேர்க்கையை (பிளஸ் 2) இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. மகாராஷ்ட்ர மாநில அரசு நீதிமன்றமே சென்றுவிட்டது. இருப்பினும் மைய ஆணையம் முயற்சியில் தளராத விக்கிரமாதித்தனாக முன்னேறுகிறது.
மையக் கல்விஆணையம் தேர்வினால் வரும் மன உளைச்சலையும் அதனால் உண்டாகும் பாதிப்புகளை நீக்குவைதை மட்டுமே காரணமாகக் கூறிக் கொணர்ந்த இம்மாற்றம் ஏமாற்றமே. ஏனெனில், CBSE மாணவர்களுக்கென ஒரு தொலைபேசி வாயிலான உதவிச் சேவையை வழங்குகிறது. அதற்கு வரும் அழைப்புகளின் எண்ணிக்கை பெருத்த அளவில் குறையவில்லை.
பார்க்க சுட்டி
http://articles.timesofindia.indiatimes.com/2011-03-18/parenting/29141073_1_class-xii-exam-students
காங்கிரசிற்கோ கபிலிற்கோ ஓட்டு வேட்டைக்காகவாவது இது உதவுமா எனத் தெரியவில்லை.

தமிழகத்திற்கு வருவோம்!
சமச்சீர் கல்வி பற்றிய விவாதங்களில் எல்லோருக்கும் ஒரே கல்வி என்ற புளகாங்கிதத்தை மட்டுமே முன்வைத்து முடித்துவிட்டனர். ஒரு வழியாக உச்ச நீதி மன்றமும் அதையே தீர்ப்பாக வழங்கிவிட்டது. சமச்சீர் கல்வியின் நீட்சியாக தனியார் பள்ளிகள் பாடத் திட்டத்திற்கு மேல் எதுவும் கற்பிக்கக் கூடாது என்ற வாதத்தை முன்வைக்கிறார்கள்.
நான் பள்ளியில் பயிலும் போது வாய்ப்பாடு எழுதுவது அன்றாடப் பணி. “ராமகிருஷ்ணா நில்ரா” எனும் கோரிக்கை வேகமாக எழுது எனக்கு வரும்; “குச்சியைப் புடுங்கு!” எனும் அடக்குமுறை வரை அது நீளும். இந்த வாதத்தில் அதையே காண்கிறேன். முன்னேறிய நாடுகளில் ஒரே கல்வி கற்பிக்கபடுவதை பலரும் சுட்டுகிறார்கள்; ஆனால் அவை மாணவர்களை இரண்டு அல்லது மூன்றாகத் தரம் பிரித்துக் கல்வி அளிப்பதை எவரும் சுட்டுவதில்லை. சில நாடுகளில் சிறப்பு பள்ளிகளும் தனித் திறமையாளர்களுக்கு உண்டு.
நாம் என்ன செய்ய விழைகிறோம்? படிப்பவன் ஏட்டைப் பிடுங்க விரைகிறோமா?
சமச்சீர் கல்வி செயல்பாட்டை அடுத்து தமிழக அரசு பள்ளிக் கல்வியில் மதிப்பெண்ணிற்கு மாற்றாக மதிப்புக் குறியீடு (grades) முறையைக் கொணர்ந்துள்ளது. தமிழகக் கல்வியின் தரம் தாழ்ந்த நிலையை மேலும் குலைக்கும் முயற்சி.
நான் முன்னரே குறிப்பிட்ட தேசியத் திறனறி தேர்வு போன்ற தேர்வுகளில் எந்த முன்னேற்றமமும் இந்த ஆண்டும் இல்லை. மேலும், கல்வி பற்றி education initiatives எனும் அமைப்பு நாடெங்கிலும் கல்வித் தரம் பற்றி ஆய்வு நடத்துகிறது. இது மாணவர்களுக்கான ஒரு தேர்வையும் உள்ளடக்கியது. கவைலையேபடாதீர்கள் கடைசி இடம் நமக்கு தான். அது மட்டுமில்லை 2006 ஐ விடவும் பின்னடைந்துள்ளோம்
பார்க்க சுட்டி
http://www.ei-india.com/wp-content/uploads/Main_Report.pdf
எந்த ஆய்வும் அக்கறையும் இல்லாத வாக்குகளை குறி வைத்துக் கொண்டு வரும் மாற்றங்கள் மிக மோசமான நிலைக்கு நம்மைத் தள்ளுகின்றன.
முடிக்கும் நேரத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி
http://timesofindia.indiatimes.com/home/education/news/Indian-students-rank-2nd-last-in-global-test/articleshow/11492508.cms

Series Navigationஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் (Shakespeare’s Sonnets : 2) எழில் இனப் பெருக்கம்கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 5

2 Comments for “தமிழகக் கல்வி நிலை பற்றி”

  • virutcham says:

    சமச்சீர் கல்வி முறை சீக்கிரமே பிசுபிசுத்து விடும் என்று தான் தோன்றுகிறது. இந்த ஓராண்டில் மட்டும் பல CBSE பள்ளிகள் துவங்கப்பட்டு துவங்கிய நிலையிலேயே நல்ல கூட்டம. தன சக்திக்கி மீறியே பல பெற்றோரும் செலவு செய்து சேர்க்கிறார்கள்.

  • ramesh kalyan says:

    ஏற்கெனவே தனியார் கல்வி செழிக்க ஆரம்பித்து விட்டது. உயர் கல்விகளுக்கு மேனாட்டுப் பல்கலைகள் வரலாம் என்று சொல்லி ஆயிற்று. இப்படியே சமச்சீர் சரியாக யோசிக்கப்படாமல் கிடப்பில் போட்டு. பரீட்சை வேண்டுமா வேண்டாமா என்று தொடங்கி படத்திட்டமே வேண்டுமா வேண்டாமா என்று – நீயா நானா ஆய்வு செய்து ( முடிவு என்று எதுவும் எட்டப்படாது என்பதுதான் இதன் சிறப்பு ) – சிபிஎஸ்சி முறைக்கு பெரும்பாலானோர் மாறி அரசுக் கல்வித் துறையும் தபால் இலாகா. அரசு கிங்க்ஸ் இன்ஸ்டிடுட். அரசு மருத்துவமனை போன்று (ஒரு காலத்தில் அற்புதமாக விளங்கியவை) சிதிலநிலைக்கு தள்ளப்பட்டு, பிறகு அரசு கல்வி பயில்வோருக்கு ஊக்கத்தொகை என்று தேர்தல் வாக்குறுதி அளிக்கலாம். மெக்காலே கல்வி முறை அடிமைத்தனத்தை நோக்கமாக கொண்டது என்று சபிக்கப்பட்டாலும் ஏதோ ஓரளவு தேறிய நிலையில் இந்திய கல்வி இருக்கிறது. (ஒபாமா போகுமிடம் எல்லாம் நம் கல்வி இந்திய கல்வி போன்று இருக்கவேண்டும் என்று புலம்புகிறார். மனுஷன், எந்த நேரம் வாயைத் திறந்தரோ ! ) சீனா கல்வி விஷயத்தில் மிக கவனமாகஇருக்கிறது. நாம்தான் கல்வியை அரசியலுக்கு உட்படுத்தி விட்டோமோ என்று தோன்றுகிறது. இப்போது அர்ஜுனில் ஆரம்பித்து சிபலிடம் சிக்கித் தவிக்கிறது கல்வியின் குரல்வளை. இந்த வருடம் தமிழ்நாட்டில் கல்வித் திட்டம், புத்தகங்கள், பாட முறைகள் பட்டபாடு ! பாவம் மாணவர்கள். கல்வியறிவு பெறுதலை விரிவாக்கி ஜனநாயகப் படுத்துவோம். ஆனால் திறன்காண்/தகுதி காண் முறைகளை சமரசம் இல்லாத வழி முறை ஒன்றே வலிமையான நாட்டை உருவாகும். இல்லாவிட்டால் பெருமளவு இளைஞர் பட்டாளம் உள்ள இந்தியா கிரிக்கெட் பேட்டிங் ஐபிஎல் வேடிக்கை பார்க்கலாம் ! ரியாலிட்டி ஷோ மானாட மயிலாட என்று சுவாரசியமாக பொழுது போக்கலாம். டாஸ்மார்க் கிளர்ச்சியில் தெருவோரமாக மல்லாந்து கனவு காணலாம்! இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது அரசியல் !


Leave a Comment

Archives