தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 ஜனவரி 2021

இரகசியக்காரன்…

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

Spread the love

மெல்ல என்னை இழந்து கொண்டிருந்தேன்

திடுமென வீசிப்போன புயலில்

தன்னருகதை இழந்த சிறு துகள்களாய்

என் ஒட்டு மொத்தமும் ஒடுங்கி விட்டிருந்தது

வீசியெறிந்ததொரு அலையின் எதிர் நீச்சல்காரனாய்

சிதைந்த உடம்புகளோடும் இழந்த துடுப்புகளோடும்

அந்நிகழ்வுகளின் அரூபங்கள் வழியே

பின் தொடர வேண்டியதுள்ளது.

முற்றுமாய் தங்கள் மௌனங்கள் களைந்த என் வார்த்தைகளை

சிலர் பறித்துக் கொண்டிருப்பார்கள்

இன் முகமாய் முன் இளித்து

என் பித்தட்டு வழியே ரகசியங்களை

பை நிறைய திணித்துக் கொள்வார்கள் பலர்

ஒரு ஓரமாய் ஒடுங்கிய படி சமீபத்தியவர்களிடம்

என் பால் கொண்ட சைகையில்

தாகம் தணித்துக் கொண்டிருப்பார்கள் இரண்டுமல்லாதவர்கள்

ரகசியங்கள் வற்றிய ஓர் மித மாலைப் பொழுதொன்றில்

நடந்த முன் நிகழ்வுகளுக்குக் குசலமிடுவதாய்

கட்டியணைத்து பின்னரும் அவர்கள்

என் பித்தட்டு வழியாய் துலாவுவார்கள் ரகசியங்களை.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ.

Series Navigationஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 4)பாரதி இணையதளத்தில்

Leave a Comment

Archives