உலரும் பருக்கைகள்…

This entry is part 22 of 46 in the series 5 ஜூன் 2011
கத்திரிவெயிலிலும்
சிரிக்க மறப்பதில்லை
பொய்க்காத பூக்கள்
மாறாத வண்ணங்களோடு. 

ஒற்றை விடயம்
மாறுபட்ட பதில்கள்
ஒருவருக்கொருவராய்
மாறித்தெறிக்கும்
அடர் வார்த்தை. 

பிதிர்க்கடனெனத் தெளிக்கும்
எள்ளும் தண்ணீரும்
சிதறும் வட்ட வட்ட
திரவத்துளிகக்குள்
சிரார்த்த ஆன்மாக்கள்.

சம்பிரதாயங்களுக்குள்ளும்
சமூகச் சடங்குகளுக்குள்ளும்
குறுக்கு மரச் சட்டங்களுக்குள்ளும்
முங்கி அமிழ்ந்து திணறுகின்றன
சங்கடங்களும்
சந்தோஷங்களும்
இறந்த பின்னும்கூட!!!

ஹேமா(சுவிஸ்)

Series Navigationஇந்திய சர்க்காரிடம் சாமானியன் கேட்கும் பத்து சாதாரண கேள்விகள்:பழைய இதழ்கள் பற்றிய குறிப்போ புதிய பயனர்களுக்கான வசதியோ இல்லாதது பற்றி
author

ஹேமா(சுவிஸ்)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *