தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

9 டிசம்பர் 2018

அன்பளிப்பு

அமீதாம்மாள்

அந்தக் கவிஞனின்
உறுப் பெல்லாம் யாப்பு
நரம்பெல்லாம் மரபு

அசையும் சீரும்
அடி தொழும்
துடிக்கும் அவன் எழுத்தில்

அந்த வெல்லக் கவிஞனுக்கு
பிள்ளைத் தமிழ் எழுத
கொள்ளை ஆசை

தமிழையே
தண்ணீராய்ப் பருகும்
தன் தலைவன் மீதே
பிள்ளைத் தமிழ் பாடினான்
தன் பொன்விழாவில் தந்தான்

ஐநூறு பேரை அழைத்தான்
மூந்நூறு பேரே வந்தனர்
நூலை வாங்கியோர் நூறு பேர்

நூலுக்குத் தந்த
சில காகித உரைகளில்
காசே இல்லை

இடுக்கண் களைபவனே
உடுக்கை பறிப்பதா?
அன்பளிப்பாக அவமானமா?
எனக்கா தமிழுக்கா

அடுத்த நாள்
ஊடகங்கள் கேட்டன
கவிஞனை

‘உன் பிள்ளைகளுக்குப்
பொன்விழாச் செய்தி சொல்
பிள்ளைத் தமிழே’

கவிஞன் சொன்னான்

‘அவமானங்கள்
எனக்கென்றால் சகிப்பேன்
தமிழுக்கென்றால் சாவேன்’

அமீதாம்மாள்

Series Navigationநாடகத்தில் சொதப்பாதிருப்பது எப்படி ?நவீன புத்தன்

One Comment for “அன்பளிப்பு”

  • jayashree says:

    அன்பளிப்பு….புதுமையான கவிதை..
    அமீதாம்மாள் …அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள்.
    ///இடுக்கண் களைபவனே உடுக்கை பறிப்பதா? ///
    அருமையான சொற்களின் தேர்வு….!!


Leave a Comment

Archives