என் புதிய வெளியீடுகள்

This entry is part 29 of 29 in the series 12 ஜனவரி 2014

அன்பின் ஆசிரியர் அவர்களுக்கு. இதைத் திண்ணையில் வெளியிட வேண்டுகிறேன். என் இரண்டு புதினங்கள், ஒரு சிறு கதைத் தொகுப்பு ஆகியவற்றோடு, முக்கியமான படைப்பாகிய மணிக்கொடி – யின் இரண்டாம் பதிப்பு கவிதா பதிப்பகத்தின் ஸ்டாலில் – நந்தனத்தில் நடைபெறும் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.  இது இந்திய விடுதலைப் போராட்டப் பின்னணி நாவலாகும். இது  இரண்டு பரிசுகள் பெற்றதோடு அனைத்திந்திய வானொலியில் ஒலிபரப்பப்பட்டதும் ஆகும். ஜோதிர்லதா கிரிஜா

மாற்றுப் படங்களும் மாற்று சிந்தனைகளும் – சென்னை புத்தக கண்காட்சியில் இன்று வெளியாகிறது

This entry is part 28 of 29 in the series 12 ஜனவரி 2014

    இந்நூல் சினிமாவின் உன்னத கலைப்படைப்புகள், புதிய தடம் பதித்த பெரு வழக்குப் படங்கள் அவற்றிற்கான  இயக்குனர்களின் பங்களிப்பு ஆகியவற்றை முன்னிலைப்படுத்துகிறது. திரைப்படங்கள் மீதான இலக்கியத்தாக்கம், புலம் பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள் , திரைப்படங்களில் தலித்துகள் சித்தரிப்பு, ஆவணங்கள் காக்கப்படுதலின்  அவசியம், திரைப்பட ரசிகர்களின் மனோபாவம் மற்றும் சுதந்திர செயல்பாடுகள் ஆகியன ஆய்வு நோக்கில் அணுகப்பட்டுள்ளன. பவள விழா ஆண்டு  கொண்டாடிய சாப்ளினின் மாடர்ன் டைம்ஸ், வெள்ளிவிழா ஆண்டு கொண்டாடிய பாலு மகேந்திராவின்  வீடு, மகேந்திரனின் […]

சீதாயணம் நாடகப் படக்கதை – 1 ​5

This entry is part 27 of 29 in the series 12 ஜனவரி 2014

சீதாயணம் நாடகப்  படக்கதை – 1 ​5​ சி. ஜெயபாரதன், கனடா [சென்ற வாரத் தொடர்ச்சி] சீதாயணம் படக்கதை -1 ​5 நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு :  வையவன் ஓவியம் :  ஓவித்தமிழ் படம் : ​30​  & படம் : ​31​   [இணைக்கப் பட்டுள்ளன] தகவல் 1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958] 2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved […]

நியூட்டன் காலத்தில் வாழ்ந்த வானியல் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி [சீராக்கிய மீள் பதிப்பு]

This entry is part 4 of 29 in the series 12 ஜனவரி 2014

[Giovanni Cassini] (1625-1712) சி. ஜெயபாரதன் B.E. (Hons), P.Eng. (Nuclear) கனடா “காஸ்ஸினி அறிவுத் தேடல் பயிற்சியில் வேட்கை மிக்கவர்.  குறிப்பாகக் கவிதை, கணிதம், வானியலில் ஈடுபாடு மிக்கவர்.  அவர் வெறும் விஞ்ஞானக் கோட்பாட்டில் மட்டும் விரும்பம் உள்ளவர் அல்லர்.  தொலைநோக்கிகள் மூலம் உளவும் கூர்மை யான விண்ணோக்காளர். மறுக்க முடியாத அவரது கண்டு பிடிப்புகள் மட்டுமே நியூட்டனுக்கு முன் தோன்றிய வானியல் விஞ்ஞானிகள் வரிசையில் அவருக்கு ஓர் உன்னத இடத்தை அளிக்கப் போதுமானவை.” டேடன் […]

இலக்கியத்தில் காலனித்துவம்: புதிய காலனித்துவத்தின் கொடூரம்

This entry is part 15 of 29 in the series 12 ஜனவரி 2014

க.பஞ்சாங்கம் புதுச்சேரி-8 1947-க்கு முந்தைய காலனித்துவத்தின் ஆதிக்கம் என்பது அரசியல், பண்பாடு, கல்வி, பொருளாதாரம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் நீக்கமற நிறைந்திருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது. ஆனால் இன்றைய புதிய காலனித்துவச் சூழலில்  காலனித்துவ ஆதிக்கம் அதேபோல் ஒவ்வொரு துறையிலும் ஒரு சிறிதும் குறையாமல் மேலும் வலுவாகி இருக்கிறது என்றாலும் அன்றுபோல் இந்த ஆதிக்கம் வெளிப்படையாக பெருவாரி மக்களுக்கும் புலப்படும்படியாக இல்லை. இது மிகப்பெரிய சூழ்ச்சி வலையாகப் பின்னப்பட்டுள்ளது. தனது ஆதிக்க வலைக்குள் வெளியே எந்தவொரு நாடும், எந்தவொரு […]

வளவ. துரையனின் “சின்னசாமியின்கதை”

This entry is part 14 of 29 in the series 12 ஜனவரி 2014

  மதிப்புரை:கவிமுகில் திருவானைக்காவல்தாமரைச்செல்வன் பொய் சொல்ல விரும்பாத ஒரு புலவரின் –வளவ.துரையனின் புதிய புதினம் ‘சின்னசாமியின் கதை’. இக்கதையின் நாயகனைத் தேடவேண்டிய அவசியமே இல்லை. மாதவனா? முருகனா? சின்னசாமியா? மதியழகனா? என்னும் கேள்விகளுக்கு இடமே இல்லை. ஆம்! அத்துணை பேரும் இப்புதினத்தில் சம பங்கு வகித்து நம்முள்ளத்தில் சம்மணமிட்டு உட்கார்ந்து கொள்கின்றனர். இப்புதினத்தில் யதார்த்தம், எளிமை, எதையும் தேடி அலைந்து இதில் இடம் பெறச் செய்யா முழுமைப் பொதிப்பு, தெளிந்த நீரோடை போன்று விளங்கும் தெளிவு  யாவும் […]

கவிதைகள்

This entry is part 17 of 29 in the series 12 ஜனவரி 2014

நிந்தனை   ஒன்றுக்கிருக்க தெருவோரத்தில் ஒதுங்கியவனின் காலில் நரகல் பட மலம் கழித்தவனின் வம்சாவளியை திட்டியபடியே சைக்கிளை மிதிப்பான். ——————————-   விலை   சுவரொட்டியைத் தின்னும் பசுக்களுக்குத் தெரியாது அவள் ஆடை குறைப்புக்கு எவ்வளவு வாங்கினாலென்று. ———————-   பாவமூட்டை   தேவாலயத்தில் பாவிகள் ஒன்று கூடி பாவமூட்டையை விட்டுச் செல்வர் குட்டி தேவதைகளை பிரிய முடியாத கர்த்தர் வாசல் வரை வந்து வழியனுப்புவார்.

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 57 ஆதாமின் பிள்ளைகள் – 3

This entry is part 12 of 29 in the series 12 ஜனவரி 2014

  (Children of Adam) சுயத்துவ இயக்கம் எனக்கு ..!    (1819-1892)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா              சுயத்துவ இயக்கவாளி நான் இயற்கை சுபாவம் அது ! இன்ப நாட்கள், புலர்ந்து மேலேறும் பரிதி, இனிமை யான என் நண்பர்கள், மலைக் குன்று அடிவாரத்தில் மலர்ந்து விரிந்த வெண்மைப் பூக்கள் , இலையுதிர் காலத்து பன்னிறப் பசுமை இலைகள், விலங்கினம், பறவை இனங்கள், வெட்டாத […]

நாணயத்தின் மறுபக்கம்

This entry is part 16 of 29 in the series 12 ஜனவரி 2014

1. ஒரே சமயத்தில் பல மேடைகளில் முழங்கிக்கொண்டிருக்கிறார்கள்; உலகின் பல மூலைகளிலும் கூட….. ”தமிழ்க்கவிதை வெளியில் எமக்கு முன்பிருந்தோரெல்லாம் தாந்தோன்றிகள், தனாதிபதிகள் [தமிழ்க்கவிதையெழுதி சம்பாதித்ததை ஸ்விஸ் வங்கியில் சேமித்திருக்கக்கூடும்]. துட்டர்கள், தட்டுக்கெட்டவர்கள் தொடைநடுங்கிகள் சீக்காளிகள், ஷோக்காளிகள் சமூகப்பிரக்ஞை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர்கள்” _ முழக்கத்தின் உக்கிரத்தில் உதிரும் ஒவ்வொரு சொல்லும் வாள்வீச்சாக தன் சிறு அறையில் அமர்ந்தபடி அன்பால் பிரியமாய் கவிதையெழுதிக்கொண்டிருந்தவர்களையெல்லாம் ஆண்டைகளாக்கி அவர்களுடைய தலைகளைக் கொய்தபடியே தாரை தம்பட்டம் அதிர அடுத்தடுத்த […]

தாகூரின் கீதப் பாமாலை – 97 உன் இன்னிசை எதிரொலி .. !

This entry is part 18 of 29 in the series 12 ஜனவரி 2014

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.      வார்த்தைகள்  என்னிட மில்லை ஆசைப் பட மட்டும் நான் அறிந்தவன்  ! உறைந்து போன  இதயத்தை முறையாக விரிவாக்க வேண்டும், ஒளி படாமல் போன கரு நிலவின் ஓர் இரவுப் பொழுது நான்  !  கண்கள் போல் எண்ணற்ற விண்மீன்கள் வானில் மின்னிடும் ! முடிவிலா நீண்ட பாதையை நோக்குவேன் வீணான நம்பிக்கையில்  !   ஆழ்ந்த அமைதியில் அலை […]