ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 2

This entry is part 21 of 29 in the series 12 ஜனவரி 2014

க்ருஷ்ணகுமார்   வன்தாளி னிணைவணங்கி வளநகரம்  தொழுதேத்த மன்ன னாவான் நின்றாயை* அரியணைமே லிருந்தாயை நெடுங்கானம் படரப் போகு என்றாள்*எம் இராமாவோ! உனைப்பயந்த கைகேசி தன்சொற் கேட்டு* நன்றாக நானிலத்தை யாள்வித்தேன் நன்மகனே! உன்னை நானே.     …….. இந்தியவியலாளர்களின் ஆக்ஷேபங்களும் அதற்கெதிரான சமாதானங்களும்   5. மதம் மற்றும் புராணக் கட்டமைப்பு சார்ந்த விஷயங்கள் பால மற்றும் உத்தரகாண்டங்களில் மற்றும் ராமாயணத்தின் மற்ற காண்டங்களிலிருந்து வேறுபடுதல்   டாக்டர் எம்.விண்டர்னிட்ஸ் (Dr.M.Winternitz) மற்றும் டாக்டர் […]

மருமகளின் மர்மம் -11

This entry is part 20 of 29 in the series 12 ஜனவரி 2014

11. பைக்கிலிருந்து இறங்கியதும் சோமசேகரனும் நிர்மலாவும் அந்தப் பெரிய ஓட்டலுக்குள் நுழைந்தார்கள். “அதோ, அந்த மூலை டேபிளுக்குப் போய்டலாம்மா! ரெண்டே பேருக்கானது. வாம்மா,” என்ற சோமசேகரன் சொல்ல, “சரி, மாமா,” என்றவாறு நிர்மலா அவரைப் பின்தொடர்ந்தாள். இருவரும் உட்கார்ந்ததும் வந்த பணியாளிடம், முதலில் இரண்டு குலாப் ஜாமுன், பின்னர் இரண்டு மசால் தோசை என்று, அவளது சம்மதம் கேட்டுப் பணித்தபின், சோமசேகரன் தொண்டையைக் கனைத்துக்கொண்டார். “முதல்ல, நான் என்னோட கதையைச் சொல்லிடறேம்மா. . . கற்பூரம் வாங்கப் […]

ஒன்றுகூடல் ( தொடர்ச்சி )

This entry is part 19 of 29 in the series 12 ஜனவரி 2014

                               முன்பெல்லாம் நாங்கள் ஒன்றுகூடியபோது ஒரு சிலர் மருத்துவ அனுபவங்களைப் பற்றி பேசுவதுண்டு. ஆனால் இந்த முறை மருத்துவம் அல்லாத வேறு வித்தியாசமான பொருள் பற்றி பேசவேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். மருத்துவத்திலேயே அனுதினமும் உழன்றுகொண்டிருக்கும் நாங்கள் இந்த மூன்று நாட்களும் அதிலிருந்து விலகி இருக்க எண்ணினோம். முதல் பேச்சாளர் ஏபெல் ஆறுமுகம். இவன் கோலாலம்பூரில் சுபாங் ஜெயா மருத்துவ மையத்தில் ( Subang Jaya Medical Centre ) இரு துறைகளில் அறுவை சிகிச்சை நிபுணராக […]

திண்ணையின் இலக்கியத் தடம் – 17

This entry is part 13 of 29 in the series 12 ஜனவரி 2014

மே 5, 2002 இதழ்: தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்- ஜெயமோகன் தமிழிசை மேற்கத்திய இசை இரண்டையும் கற்றுத் தேர்ந்த ஆபிரகாம் பண்டிதர் தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தில் தமிழிசைக்கு என ஒரு இயக்கத்தைத் தோற்றுவித்தவர். அவர் மறக்கப் பட்டதும் அவரது பங்களிப்பு மறைக்கப் பட்டதும் வருத்தத்துக்குரியவை.( www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20205053&edition_id=20020505&format=html ) பிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்து- (obession)- ஜே.கிருஷ்ணமூர்த்தி- தமிழில்- பி.கே.சிவகுமார்- புறமனம் கவலைகளாலும் அமைதியின்மையாலும் பாதிக்கப் படும் போது அகமனம் வெளிப்படாது ஏற்படும் முரண்பாடு துன்பத்தை விளைவிக்கும். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20205054&edition_id=20020505&format=html […]

எனது இதயத்தின் எவ்விடத்தில் நீ ஒளிந்திருந்தாய்?

This entry is part 10 of 29 in the series 12 ஜனவரி 2014

  நீ எடுத்துச் சென்ற உன்னுடையவற்றிலிருந்து தவறுதலாக விடுபட்ட ஏதோவொன்று என்னிடத்தில்   தென்படாத வர்ணக் கறையைப் போல மிகப் பெரிதாகவும் கருங்கல்லைப் போலப் பாரமானதாகவும் இதயத்துக்குள் ஆழ ஊடுருவிய நானறியாத ஏதோவொன்று என்னிடம்   இந்தளவு தனிமை எங்கிருந்துதான் உதித்ததோ எனக்குள்ளே மூழ்கிப் போன ஒன்று எப்படி உனக்குரியதாயிற்றோ   எனது இதயத்தின் எவ்விடத்தில் நீ ஒளிந்திருந்தாய் இந்தளவு துயர் தந்து போக?   – காஞ்சனா அமிலானி தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

மலரினும் மெல்லியது!

This entry is part 11 of 29 in the series 12 ஜனவரி 2014

  ஜி.மீனாட்சி   சந்தனமும், சென்ட்டுமாக கல்யாண வீடு கமகமத்தது. பட்டுப் புடவை சரசரக்க, மல்லிகைச் சரமும், வளையல்களுமாக பெண்களின் வர்ணஜாலம். சுடிதாரில் துள்ளித் திரியும் வண்ணத்துப் பூச்சிகள். ஷெர்வானியிலும், பைஜாமாவிலும் கண்களால் வலைவீசும் இளைஞர்கள். முகூர்த்தத்துக்கு இன்னும் நேரமிருந்தது. மணவறைக்கு மாப்பிள்ளை பையன் வந்துவிட்டான். அவனுடன் இளவட்டங்கள் நான்கைந்து பேர். நண்பர்களாக இருக்கவேண்டும். சிரிப்பும், கேலியுமாக அரங்கத்தை மறந்து தனி உலகில் லயித்திருந்தனர். பெற்றவர்களின் ஒப்புதலுடன் நடக்கும் காதல் கல்யாணம் என்பதால் கூடுதல் குதூகலம். “ரொம்ப […]

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் : அத்தியாயம்-17

This entry is part 3 of 29 in the series 12 ஜனவரி 2014

ஸ்ரீ கிருஷ்ண தூது-பகுதி-1 தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் வண்ணம் ஸ்ரீ கிருஷ்ணர் அத்தினாபுரம் நோக்கி புறப்பட்டார். அவரை வழி அனுப்பும் முன்னர் பாண்டவர்களும் திரௌபதியும் நிறைய கோரிக்கைகளையும் கேள்விகளையும் முன் வைக்கின்றனர். ஸ்ரீ கிருஷ்ணர் அத்தனை கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் அளிக்கிறார். இருப்பினும் இந்த உரையாடல்களை நாம் வரலாற்று தகவல்களாக கொள்ள முடியாது. ஆனால் இந்த உரையாடல்கள் கற்பனையாக இருப்பினும் இதன் ஆசிரியர் ஸ்ரீ கிருஷ்ணர் என்பவர் யார் அவர் எடுத்த நிலை என்ன என்பதை […]

பெண்ணிய உரையாடல்கள் – ஈழம், தமிழகம், புலம்பெயர் சூழல்

This entry is part 2 of 29 in the series 12 ஜனவரி 2014

திண்ணை ஆசிரியருக்கு, வணக்கம். பெண்ணிய உரையாடல்கள், ஈழம், தமிழகம், புலம்பெயர் சூழலில் நடந்த கருத்தரங்கம் குறித்த சுற்றறிக்கை: பெண்கள் சந்திப்பு சார்பாக மும்பையிலிருந்து நான் அனுப்புகின்றேன். திண்ணையில் வெளியிடும்படி பெண்கள் சந்திப்பின் அ. மங்கை, வ. கீதா, மற்றும் ரேவதி சார்பாக… புதியமாதவி   கருத்தரங்கு அறிக்கை   இலங்கையின் மறக்கப்பட்ட பகுதி. மலையகம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தேயிலை பச்சை. நடுநடுவே சாக்கு அணிந்து, வெடவெடக்கும் குளிரில், அட்டைக் கடியையும் குளவிக் கொட்டுதலையும் சகித்துக் […]

பிரம்ம லிபி

This entry is part 1 of 29 in the series 12 ஜனவரி 2014

கபாலி தன் வீட்டின் வாயில் கதவைத்தட்டினான்.தட்டும் போதே அது டபக்கென்று திறந்து கொண்டது. குற்றம் அதன் மீது இல்லை.தாழிப்படாத வாயிற் கதவு. கபாலியின் மனைவி  தருமை நாதன் கோவிலுக்குச்சென்றிருப்பாள் இன்று சனிப் பிரதோஷம். . பரமசிவக்கடவுள் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே ஆனந்தமாய் நர்த்தனம்  செய்யும் புண்யகாலம் காலம்தான் அது என்று  விஷயம் தொ¢ந்தவர்கள் சொல்கிறார்களே. ஆகத்தான். கபாலியின்.மகள் அருணா வீட்டில்தானே இருக்கவேண்டும்.’எங்கே அவள்? அருணா என ஓங்கி அழைத்தான் கபாலி.பதில்  ஏதும் இல்லை. கொஞ்சம் குழப்பம். வாயில் […]

கடிதம்

This entry is part 5 of 29 in the series 12 ஜனவரி 2014

மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியருக்கும், ஆசிரியக் குழுவினருக்கும் வாசகர்களுக்கும் வணக்கம் எல்லோருக்கும் இனிய பொஙகல் வாழ்த்துக்கள் சில அலுவல்களுக்காகவும் சிகிச்சைக்காகவும் இம்மாதம் சென்னைக்குச் செல்கின்றேன். ஜனவர் 25 முதல் மூன்று மாதங்கள் சென்னையில் இருப்பேன். என் அலைபேசி எண் 9940213031 என்னுடன் பேச நினைப்பவர்கள் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் கணினியில் குழுமங்களீல், இணைய இதழ்களீல் 12 வருடங்கள் உறவு. பல குழுமங்கள் உங்களின் அன்பு எனக்கு சக்தியைக் கொடுத்து எழுத வைத்தது அதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் […]