உலகின் பிறபகுதிகளைப்போலவே பிரான்சுநாட்டிலும் இந்திய நாட்டின் பன்முகத்தன்மையை எதிரொலிக்கும் வகையிற் சங்கங்கள் நூற்றுக் கணக்கில் செயல்படுகின்றன. தமிழர், மலையாளி, தெலுங்கர், பஞ்சாபியர், குஜராத்தியரென குழுச்சமுதாயமாக இயங்குவதும், அவரவர் வட்டார குறியீடுகளை நினைவூட்டும் வகையில் பண்டிகைகள், மொழி வகுப்புகள், பரதநாட்டியம், மோகினி ஆட்டமென்று நற்காரியங்களில் அக்கறைகாட்டுவதும் இச்சங்கங்களின் பொதுகோட்பாடுகள். எனினும் இந்திய துணைக்கண்டத்தைச்சேர்ந்த பிற மக்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்ட போலிவுட்டையும், தீபாவளியையும் மறப்பதில்லை. பொதுவாக நமது மக்களுக்கென சில பிரத்தியேகக் குணங்களுண்டு, அவற்றையெல்லாம் தவிர்த்து ஒரு சிலரேனும் இப்படி […]
-ஆதிமூலகிருஷ்ணன் இரவு பதினொரு மணி. அவசரகோலமாக சில உடைகளையும், இரண்டு புத்தகங்களையும், செல்போன் சார்ஜரையும் கையில் கிடைத்த ஒரு பையில் போட்டு எடுத்துக்கொண்டேன். இந்த மனநிலையிலும் புத்தகங்களை ஏன் எடுத்துவைத்துக் கொள்கிறேன் என்று புரியவில்லை. மஞ்சு எதையும் கவனிக்காமல் மூலையில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தாள். கதவை அறைந்து சார்த்திவிட்டு படிக்கட்டுகளில் இரண்டிரண்டாக தாவி இறங்கி கீழே வந்தேன். இந்த நேரத்தில் எங்கே போவது? வண்டியை எடுத்துக்கொள்ளவா? வேண்டாமா? பைக்கை வெளியே எடுத்து கேட்டை சார்த்திவிட்டு அந்த இரவு நேர […]
-ஆதிமூலகிருஷ்ணன் பித்துப்பிடிக்கும் நிலையிலிருந்தேன். எப்படித்தான் இந்த பிரச்சினை வந்து உட்கார்ந்துகொள்கிறதோ? கல்யாணம் என்றதுமே கொஞ்சம் அவநம்பிக்கையும், ‘நமக்கா?’ என்ற ஆச்சரியமும் ஏற்படுகிறது. ஆனால் இந்தக் காதலுக்கு மட்டும் இந்தத் துவக்கநிலை பிரச்சினையெல்லாம் இருப்பதில்லை போலும். ’இம்’ என்பதற்குள் தோன்றி இதயம் படபடக்க மிதக்கவைத்துவிடுகிறது. ம்ஹூம்.. எப்படிப்பார்த்தாலும் சாதுவாக இந்தப்பிரச்சினை முடியும் என்று தோன்றவில்லை. நாம்தான் ஏதும் புதுமை பண்ணிப்பார்க்கலாம் என்றால் அதற்கு வாய்ப்பில்லாமல் வீட்டில் ஏதாவது ஒன்று இருந்து தொலைத்துவிடுகிறது. பாருங்கள், என் அண்ணன் நன்றாக சம்பாதிக்கிற […]