பூர்வ பூமியை வால்மீன்கள் தாக்கி உயிரின மூலவிகள் வீழ்ந்ததற்குப் புதிய சான்றுகள் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா வால்மீன்கள் தென்படா யாசிப்போர் மரித்தால் ! வானகமே மின்னி முழக்கும் மாவேந்தர் சாவை ! வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்] காலவெளிப் பிரபஞ்சத்தில் வால்மீன்கள் பால் ஒளிவீசும் விந்தையாய் ! பரிதி ஈர்ப்பு வலையில் ஈசலாய்த் திரிபவை வால்மீன்கள் ! வையகத்தில் உயிரினம் வளர விதை யிட்டவை ! பரிதியை நெருங்கும் போது […]
மகமூது தர்வீஷ் இஸ்லாமிய தொன்மங்களின் உலகை மிகச் சிறப்பாக பயன்படுத்திய அல்லாமா இக்பால், நஸ்ருல் இஸ்லாம்,நஸீம் இக்மத் அண்மையில் மறைந்துபோன மகமூது தர்வீஷ்மற்றும் பலஸ்தீன கவிகள் போராளிப் பெண்கவிகள், குர்திஷ் இனமக்களின் வாழ்வியலைப் பேசும் கவிதைகள் என முஸ்லிம்களின் படைப்புலகம் விரிந்து கிடக்கிறது. அண்மையில் நான் வாசித்த பாலஸ்தீனத்தின் செகுவரா என அழைக்கப்படும் மஹ்மூத் தர்வேஷின் ஒரு கவிதை இது. திருக்குரானில் இடம்பெறும் யூசுப் நபியின் வரலாற்றை ஒரு தொன்மமாக மாற்றி தனது கவிதையை […]
ஆனாலும் ஒரு ஐம்பது ரூபாயை நான் அவன் கையில் வலியத் திணித்து விட்டுத்தான் வந்தேன். அப்பொழுதுதானே என் மனதுக்கு சமாதானம் ஆகும். அந்தக் கண்ணுக்குத் தெரியாத சாட்சிக்கு யார் பதில் சொல்வது? நான்தானே சொல்லியாக வேண்டும். இல்லையென்றால் பொழுது பொழுதாய் அறுத்துக் கொண்டிருக்குமே? ஏற்கனவே என்னைப் பாடாய்ப் படுத்தியது போதாதா? அதற்காக இப்படியா வருவார்கள் என்று கேட்குமே? காசு மிச்சம்னுட்டு வந்திட்ட! அதானே? சரியான ஆள்டா நீ? அன்னைக்கு உங்கப்பா நாள் பூராவும் நெருப்புல கிடந்து, அடுப்பு […]
புதுவையைச் சேர்ந்த பொறியாளர் பாலசுப்ரமணியம் 5 நூல்கள் வெளியிட்டுள்ளார். தன் பிள்ளைகள் இளம்பரிதி, அன்பன் ஆகியோரின் பெயரை இணைத்து பரிதியன்பன் என்ற புனைபெயரில் எழுதியுள்ளார். புதுவை அரசால் இவரது புத்தகங்கள் விருதுகள் பெற்றுள்ளன. குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவிற்குப் பிறகு நான் இவரின் சிறுவர் பாடல்கள் புத்தகம் படித்து மகிழ்ந்தேன். சிறுவர் பாடல்கள் ”சிட்டுக் குருவி, நடைவண்டி” என இரண்டு புத்தகங்களும். ”அரைக்கீரை விற்கிறான் அம்பானி” என்ற ஒரு துளிப்பா புத்தகமும்., வாழப்பிறந்தோம் மற்றும் வெள்ளைத்திமிர் என்ற […]
வாழிய தோழி கடலின்மேல் அடிவானில் கரும்புள்ளியாய் எழுதப்படும் புயற் சின்னம்போல உன் முகத்தில் பொற்கோலமாய் தாய்மை எழுதப்பட்டு விட்டது. உனக்கு நான் இருக்கிறேனடி. இனியுமுன் ஆம்பல் கேணிக் கண்களை உப்புக் கடலாக்காதே. புராதன பட்டினங்களையே மூடிய மணல் மேடுதான் ஆனாலும் தேர்ந்த கள்ளியான ஆமையால்க்கூட இங்கு தன் முட்டைகள நெடுநாள் மறைக்க முடியாதடி. விரைவில் எல்லாம் அறியபடா திருந்த திமிங்கிலம் கரை ஒதுங்கியநாள் போலாகிவிடும் அதனால் என்னடி இது நம் முதுகரைக்குப் புதிசல்லவே. அஞ்சாதே தோழி முன்பு […]
தோழி காலமாய் நுரைகள் உடைகிற மணலில் சுவடுகள் கரைய சிப்பிகள் தேடிய உலா நினைவிருக்கிறதா? கடலிலிலும் வானிலும் தொடர்கிற நீலமாய் நம்மிலும் எதோ படர்கிற தென்றேன். மீன்கொத்திய நாரையாய் நிமிர்ந்தாய் உன் கண்களில் எனது பிம்பம் அசையும். ஆண்டு பலவாகினும் நரையிலா மனசடா உனக்கென்றாய். தோழி இளமை என்பது வாழும் ஆசை. இளமை என்பது கற்றிடும் வேட்கை. இளமை என்பது முடிவிலா தேடல்; இளமை பிறரைக் கேட்டலும் நயத்தலும். இளமை என்பது வற்றாத ரசனை இளமை என்பது […]
உழைத்துச் சேர் உறிஞ்சிச் சேர்க்காதே கன்றுண்ட மிச்சமே கற செயலால் நில் செல்வத்தால் நிற்காதே சுமையாய் இராதே சுமைதாங்கியாய் இரு ஈந்து கொண்டிரு எறிவதை ஈயாமலிரு அந்நியமாக்காதே சொந்தங்களை சொந்தமாக்கு அந்நியங்களை முகமறிய மோதினால் முத்த மிடு துரோகிகளைக் துரத்தி விடு புகழ் அதுவாக வந்தால் எடு வராவிட்டால் விடு உன்னால் அழுதோரை உனக்காக அழுவோரைத் தொழு ஒன்றுக்கு நூறு தரும் மண் அந்த மண் உனைத் தின்னுமுன் மண்ணாகு இத்தனைக்கும் சொல் ‘சரி’ இறக்கும்போதும் சிரி […]
வடமொழி நாடக ஆசிரியர் பாசாவின் பதிமூன்று நாடகங்கள் கேரளத்தைச் சேர்ந்த கணபதி சாஸ்திரியால் கண்டு பிடிக்கப் பட்டு அறிமுகம் செய்யப் பட்டுள்ளன.பாசாவின் காலத்தைப் பற்றிய கணிப்புகள் பலவாக இருந்தாலும் சாகுந்தல காளிதாசனுக்கு முற்பட்டவர் என்பதில் கருத்து வேறுபாடில்லை. மாளவிகாகினிமித்திரத்தில் பாசாவைப் போற்றி காளிதாசன் எழுதியுள்ள குறிப்பு இதை உறுதி செய்கிறது. நல்ல சிற்பங்களையும் ,ஓவியங்களையும் செதுக்கிய கலைஞனை விட அவன் படைப்புகளே சாஸ்வதமாகி நிற்கின்றன. இந்தியச் சிந்தனையைப் பொறுத்தவரை படைப்பாளியின் சுய வரலாற்று விளக்கங்கள் முக்கிய இடம் […]
உம் தேவைகளுக்கான கற்பகவிருட்சமாய் உம் நண்பன் நேசமெனும் நல்வித்தை விதைத்து பாசமெனும் அறுவடையைக் கண்டவன். உம்முடைய தீக்கரும்பும் அவன்தான் உம் தீக்காய்தலுக்கான தளமும் அவ்னேதான் அமைதியின் நாட்டம் கொண்டு அதன் வேட்கையுடன் அவனை நாடுகிறீர் நீவிர் மனம் திறக்கும் உம் தோழமையின் குணம் அறிந்து அச்சம் கொள்ளாதே எதிர்வினையோ, உடன்படுதலோ போன்ற எண்ணத் தோற்றம் ஏதும் இல்லாதிருக்கட்டும் அவனுடைய மௌனத்தினூடே உம் இதயத்தின் கவனம் உட்புகாதிருக்கட்டும் வார்த்தைகளற்ற மௌனமான நேசம் அனைத்து எணணங்கள், விருப்புகள், எதிர்பார்ப்புகளின் பிறப்பிடமாகவும் […]
பாகங்களாக உடைந்திருக்கிறது அவ் வனத்தின் பட்டுப்போன மரமொன்றினூடு தென்படும் முழு நிலவு விருட்சங்களால் ஈரலிப்போடு உறிஞ்சப்படுகின்றன வனத்தின் எல்லை மர வேர்களை தழுவும் சமுத்திரத்தின் அக் கணத்து அலையில் இருளை ஊடறுத்துச் சிதறும் ஒளிக் கிரணங்கள் காற்று அணைக்கப் பாடுபடும் அந்த ஓடத்து விளக்கினை ஏற்றியவன் கரங்களிலிருந்து விசிறப்படும் வலையினில் சிக்கிக் கொள்கிறது தண்ணீரில் முளைத்த பௌர்ணமி வேட்டைக்காரனுக்குத் தப்பிய தேன்கூடொன்று ஒளிந்திருக்கும் மலைக்குன்று இதுவல்லவோ எந்தப் பாதச் சுவடுகளும் தொட்டிராச் சருகுக் குவியல் சலசலத்து எழுப்பும் […]