பூப்போலத் தூங்குமென்னை பூகம்பமாய் எழுப்பியது… இன்று போய் நாளை வாருங்களென்றே என் உறக்கத்தை உடுத்திக் கொண்டேன். தூக்கத்திலே மொட்டுவிட்ட வரிகள் அதிகாலையில் துகிலுரித்துக் கிடந்தன வெந்நீரில் விழுந்து விட்ட கிருமியாய் சொற்கள் கரைந்தே போயின வெள்ளம்போல் பொங்கி வந்த பாட்டு விடிந்ததும் வடியக் கண்டேன் வெங்காயம் போல் உரித்து வந்த கற்பனை வெந்தயம் போல் கசக்கக் கண்டேன் பசுமையிலே ஓரிரவு பறிபோனாலும் இன்பா நளினமாய் வருவதை இப்போதெல்லாம் நசுக்கிடாமல் பேனாமுட்களில் கோர்த்துக் கொள்கிறேன் பொங்கிவரும் கவிதை பொசுங்கிவிடாமல்…
ஊனத்தின் நிழல் படிந்த மங்கலான இடத்தில் எழுதப்பட்டுள்ளது, எனக்கான கேள்விகள் ஆனால்? விடைஎழுத யார்யாரோ! ஒளிபுக முடியாத ஒரு இருள் பேழைக்குள் அடைக்கப்பட்டுள்ளுது எனது பகல்கள்! வியர்க்காத ஒரு மனிதனின்ஊனில் மாட்டிக்கொண்டுள்ளது என்னது தாகத்தின் தண்ணீர்! ஏனோ? சலித்து போகாத எனது விடைத்தாள்களில் மட்டும் எப்போதும் பிழைதிருத்தம்!
சென்னை புத்தகக் கண்காட்சி கடை எண் : 119 ‘கறுப்பு பிரதிகள்’ பதிப்பகத்தோடு வல்லினமும் இணைந்து மலேசிய படைப்பிலக்கியங்களை தமிழகத்திற்கு அறிமுகம் செய்யும் திட்டத்தை முதலில் வகுத்துக்கொடுத்தவர் ஷோபா சக்திதான். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இத்திட்டம் குறித்து தோழர் நீலகண்டனிடம் பேசியபோது அவரும் உற்சாகமாக ஆமோதித்தார். முதலில் சீ. முத்துசாமியின் சிறுகதை தொகுப்பை வெளிகொணர்வதென முடிவானது. அதற்கான அடிப்படை வேலைகளையெல்லாம் செய்துமுடித்துவிட்ட நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் அத்திட்டம் கைவிடப்பட்டது. கடந்த ஆண்டு தமிழகப்பயணத்தின் போது தோழர் […]
நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை, குறும்பட போட்டி்கள் புத்தாண்டில் முதல் முயற்சியாக புற்றுநோய்விழிப்புணர்வு குறித்த இந்த போட்டிகளுடன் நேசம் தன் பணியை துவங்குகிறது. மார்பகம், கர்ப்பபைவாய், ரத்தம், எலும்பு, நரம்பு, தொண்டை, நுரையீரல் என்று உடம்பில் எந்த பாகத்திலும் புற்றுநோய் வரலாம். இதை கண்டறிவது என்பது கொஞ்சம் சிரமமான காரியம் என்றாலும் சில சோதனை அல்லது அறிகுறிகள் மூலம் ஸ்க்ரீனிங் எனப்படும் புற்றுநோய்கண்டறிதல் சோதனையை செய்வது நல்லது. 40 வயதுக்கு மேல் […]
_____ குருசு.சாக்ரடீஸ் நேற்று பெய்தது பாலைவனத்து மழை விரட்டி சேகரிக்கிறது என் பால்யம் சிரட்டையில் நிரம்புகிறது மழை ஏக்கத்தில் ததும்பும் துளிகளாய் நீ கொண்டுதந்த ஈரத்தில் வெக்கையின் உதிர்ந்த சிறகுகள் பூப்பெய்திய பெண்ணின் தொடக்க பருவத்திலிருக்கிறது பாலை நான் புரண்ட மணல்வெளிகளில் ஈரம் தருவித்த பெண்ணின் வாசம் வந்துபோன தடங்களற்ற பாலைமழையை கொண்டாட நீ அனுப்பி தந்த பைரிகள் உச்சந்தலையை கொத்துகின்றன தப்பித்தோடும் மணல்வெளியில் தனிமையின் கதவுகளை என் மரணத்தின் முன் தட்டுவேன் அது தன் முகங்களை […]
ஏக்கக்கண்கள் விளையாட்டுப் பொருட்களின் மீதே அம்மாவின் தோள்களில் கனவைச் சுமந்துகொண்டே ஊமையாகிறாள் ரத்தம் கசியும் தொடையின் கிள்ளலுக்கு அஞ்சியபடியே குழந்தை கோ.புண்ணியவான் Ko.punniavan@gmail.com
நா . தில்லை கோவிந்தன்} விவசாயி “பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு எங்கள் மூதாதையர்கள் ஆயிரம் ஆண்டு வாழ்ந்து மறைந்ததும் இந்நாடே” இதேபோன்று ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஆறுகளில் மணல் எடுத்தோம் கட்டிடங்கள் கட்ட கழல்நிலங்களை சீர்த்திருத்த , தென்னை மரங்கள் நட, ஆறுகளில்தானே மணல் எடுத்தோம். அப்பொழுதெல்லாம் ஆறுகளில் பள்ளங்கள் ஏற்படவில்லையே, எந்த ஒரு பிரச்சினையுமில்லையே. இப்பொழுது சென்ற மூன்று ஆண்டுகளாகத்தானே பிரச்சினை. பிரச்சினை என்றால் சாதாரணமானது அல்ல . […]
காரைக்குடி கம்பன் கழகத்தில் மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளை சார்பில் வ்ரும் 7.1.2012 ஆம் நாளில் மாலை ஆறுமணியளவில் கம்பன் மணிமண்டபத்தில் முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள் கம்பர் போற்றிய கவிஞர் என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்கள். இவ்வுரை வரும் 3-3-2012 அன்று நடைபெறவுள்ள கம்பன் விழாவில் நூல்வடிவாக வெளியிடப் பெறஉள்ளது. அனைவரும் வருக. அழைப்பிதழ் இணைக்கப் பெற்றுள்ளது. இவ்விழாவிற்கு அழகப்பா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் திருமதி கா. மணிமேகலைஅவர்கள் தலைமையேற்க உள்ளார். வரவேற்புரையாற்ற திரு. கம்பன் அடிசூடி அவர்களும் […]
சற்றுமுன் வம்சி பதிப்பகத்தின் சார்பில் சிறுகதைப் போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. (நடுவர்கள்: எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன், பிரபஞ்சன், தமிழ்நதி) முதல் பரிசுக்குரிய சிறுகதை: (பரிசுத் தொகை ரூ.10000) காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் – எம்.ரிஷான் ஷெரீப் இரண்டாவது பரிசுக்குரிய சிறுகதைகள்: (ஒவ்வொன்றுக்கும் பரிசுத் தொகை ரூ.5000/-) 1.இரைச்சலற்ற வீடு – ரா.கிரிதரன் 2. யுகபுருஷன் – அப்பாதுரை தொகுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் (ஒவ்வொன்றுக்கும் பரிசுத் […]
தமிழ்ஹிந்து நடத்தும் உடையும் இந்தியா? புத்தக வெளியீட்டு விழா ஜனவரி-3, 2012 (செவ்வாய்க் கிழமை) மாலை 6 மணிக்கு சென்னையில் நடக்கிறது. இடம்: தேவநேயப் பாவாணர் அரங்கம் (எல்.எல்.ஏ பில்டிங்), 735, அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை – 600002. அரவிந்தன் நீலகண்டன் (நூலாசிரியர்), பத்ரி சேஷாத்ரி (கிழக்கு பதிப்பகம்), கிருஷ்ண பறையனார் (பறையர் பேரவை), எழுத்தாளர் ஜோ டி குரூஸ், எஸ்.இராமச்ச்சந்திரன் (கல்வெட்டு ஆய்வாளர்), டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் (பா.ஜ.க), டாக்டர் தியாக சத்திய […]