Hello sir I have to convey the good news to you thinnai and thank u for your notification on your magazine. Even before one month is completed from the date of release from the link www.scribd.com/doc/88128740 குகைமனிதனும் கோடிரூபாயும் நூல் 1000 வாசகர்களுக்கு மேல் வாசிக்கப்பட்டுள்ளது This is the first step before it reaches 1,000,000 readers Only English […]
பனசை நடராஜன், சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் கால் வைத்ததும் ஏதோ ஒரு புது கிரகத்தில் இறங்கியது போலிருந்தது மூன்று பேருக்கும். சிவா, குமரேசன், சேதுராமன். தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் வசித்தாலும் படித்தது ஒரே தொழிற்கல்வி நிலையத்தில் (ஐடிஐ)., வெவ்வேறு காரணத்துக்காக இங்கே வந்திருக்கிறார்கள். அவர்களோடு வந்த மற்ற இருவரும் சிங்கப்பூரில் முன்பே வேலை பார்த்த அனுபவசாலிகள். அதனாலேயே கொஞ்சம் அதிகமாகவே எல்லாவற்றையும் விளக்கி சொல்லிக் கொண்டு வந்தார்கள். காலால்தான் நடக்கணும் வாயால்தான் சாப்பிடணும்னு மட்டும்தான் சொல்லலை. […]
இந்தி : மகாஸ்வேதா தேவி தமிழில் : முனைவர் தி.இரா.மீனா [ ஆங்கில மூலம்] குந்தியும் அந்த மலைவாழ் பெண்ணும் ஆசிரமத்தில் திருதராட்டினனையும் , காந்தாரியையும் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு குந்திக்கு இருந்தது. இந்தக் கடமையை குந்தி விரும்பியே செய்தாள்.வனத்தின் மத்தியிலான ஆசிரமம் இது. அன்றாட வழிபாட்டிற்காக தினமும் காட்டுக்குச் சென்று சுள்ளிகளை எடுத்து வருவது அவள் பணி. மதியம் தான் அவளுக்கு பிடித்த பொழுது. சுள்ளிகளைப் பொறுக்கி விட்டு சிறிது நேரம் அங்கேயே சுற்றி […]
வணக்கம் நண்பரே மலைகள்.காம் malaigal.wordpress.com இலக்கியத்திற்கான இணைய இதழ் மலைகள்.காம் முதல் இதழ் வெளி வந்துவிட்டது மலைகள் முதல் இதழில் ஆத்மார்த்தி,பாவண்ணன்,கலாப்ரியா,ரவிக்குமார்,வித்யாஷங்கர், ந.பெரியசாமி,சம்பு… ஆகியோரின் படைப்புகளுடன் வெளி வந்துவிட்டது
இடம்: Don Bosco Institute of Communication Arts (DBICA), டைலார்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம் நாள்: மே 11 & 12 நேரம்: காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை. அனுமதி: அனைவருக்கும் இலவசம். பெரிதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும் வணக்கம் நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் நீண்ட நாள் கனவான சிறுவர்களுக்கான திரைப்பட திருவிழாவை இந்த ஆண்டு நடத்துவதில் முதலில் பெருமை கொள்கிறோம். மாற்று திரைப்படங்களுக்கான ரசனை சிறு வயதில் இருந்தே […]
பூமிபாலகன் திண்ணையில் கால்களை நீட்டி உட்கார்ந்து கொண்டு, முறத்திலிருந்த கம்பில் கல் பார்த்துக் கொண்டிருந்தாள் கிழவி. சந்தைக்குப் போய்விட்டு வந்த தன் மகனை ஏறிட்டுப் பார்த்தாள். பையைத் திண்ணையில் வைத்து விட்டு ஒன்றும் பேசாமல் வீட்டின் உள்ளே சென்று கை, கால்களை அலம்பிக்கொண்டு உட்கார்ந்தான் மகன். அவன் மனைவி சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க, அதை வாங்கிக் குடித்தான். “ ஏண்டா முத்து, வித்துட்டியா? “ என்றாள் கிழவி. “ ஆமாம்மா.” வைகாசி மாசம் முழுக்க […]
வெடிக்க வெடிக்க வீழ்ந்தார்கள் வீழுந்து துடிப்பவர்களைத் தொட்டுத்தூக்க ஓடினார்கள் கேட்பாரற்றவர்களை காப்பாற்ற வருபவர்களென்று காத்திருந்து காத்திருந்து வெடிக்கிறது வெடிக்கிறது வெடித்ததே வெடிக்கிறது குருதியில் சதசதக்க சதை சகதியில் கொத்தணிக்குண்டு விதை விதைக்கயிலேயே அறுவடை உயிர் உயிராய் அறுவடைக்குப் பின்னும் அறுவடை அந்த கொத்துக்குண்டின் மிச்சம் தன் கூட்டத்தை இழந்த ஒரு குழ்ந்தையை கொன்றுப்போட்டிருகிறது இன்று. இருந்தவரை கொன்று இடம் பிடிக்க நாளை விதைத்தவனுக்கா அறுவடை? எவரும் வெடிக்க வெடிக்க விழ வேண்டம். போருக்கு பின் அமைதியில் சத்தமாய் […]
‘ஆறாவடு ’ சயந்தனின் ‘ஆறாவடு’ என்கிற நல்ல நாவலின் வரவுபற்றி ஊடகங்களில் அறிந்தபோதும், அவ்வப்போ நினைவூட்டப்பட்டபோதும் சந்தோஷமாக இருந்தது. ஆனாலும் நான் நாவலைப்படிக்கும்வரையில் மேற்கொண்டு பிரதி பற்றிய விமர்சனங்களைப் படிப்பதில்லை என்று இருந்தேன். என்இயல்பான மெத்தனத்தால் இப்போதுதான் நாவல் எனக்குக் கிடைத்தது. (நான் கேட்டதால் சயந்தனே எனக்கொருபிரதியை அனுப்பிவைத்தார்.) என் எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் வீண்போகவில்லை. அத்தனை நம்பிக்கை தருகிறது பிரதி. (அநேகமான சில குறிப்புகளில் தொனிப்பதுபோல) ‘எமக்குத்தெரியாத என்னத்தை இவர் புதிதாகச் சொல்லிவிட்டார்’ என்றகோணத்தில் பிரதியை அணுகுவது […]