This entry is part 6 of 9 in the series 17 மே 2026

தொட்டால்தான்

புரிகிறது

அந்த ரோஜா

செடியில் பறித்ததா

செயற்கையா என்று

***

பெயரே முகவரியான

தலைவர்களை

முகவரியற்றோர்

வென்றனர்

***

பரம்பரை

பரம்பரையாய்ய்

கட்டிக்காத்த வீட்டை

பேரர்கள் விற்றுவிட்டனர்

***

சுற்றியுள்ளதைத்

தெளிவாய்க் காண

உச்சியில் நில்

அமீதாம்மாள்

Series Navigationதவம்மழை புராணம் : 31