இந்நூல் சினிமாவின் உன்னத கலைப்படைப்புகள், புதிய தடம் பதித்த பெரு வழக்குப் படங்கள் அவற்றிற்கான இயக்குனர்களின் பங்களிப்பு ஆகியவற்றை முன்னிலைப்படுத்துகிறது. திரைப்படங்கள் மீதான இலக்கியத்தாக்கம், புலம் பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள் , திரைப்படங்களில் தலித்துகள் சித்தரிப்பு, ஆவணங்கள் காக்கப்படுதலின் அவசியம், திரைப்பட ரசிகர்களின் மனோபாவம் மற்றும் சுதந்திர செயல்பாடுகள் ஆகியன ஆய்வு நோக்கில் அணுகப்பட்டுள்ளன. பவள விழா ஆண்டு கொண்டாடிய சாப்ளினின் மாடர்ன் டைம்ஸ், வெள்ளிவிழா ஆண்டு கொண்டாடிய பாலு மகேந்திராவின் வீடு, மகேந்திரனின் […]
திகார் சிறையில் அவரை அடைத்துவிட்டு உடனேயே தொடை நடுங்கியபடி மத்திய அரசு விடுதலை செய்த பிறகும் அன்னா ஹாசாரே சிறையை விட்டு வெளியேறாமல் தனது நிபந்தனைகளை முன்வைத்து அங்கேயே உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். அந்தக் காட்சி மட்டும் தொலைக்காட்சி சேனல்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் அவர் அதன்பிறகு உண்ணாவிரதத்தை ராம் லீலா மைதானத்தில் தொடர்ந்து பன்னிரெண்டு நாட்களுக்குப் பிறகு நிறைவு செய்யும் வரையிலும் அதற்கு அப்பாலும் ஒவ்வொரு நிமிடத்தையும் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிய வண்ணம் இருந்தன. முதன் முதலாக பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி […]