வடக்குப் பிரதேசத்தில் மதுபுரம் என்ற நகரம் இருக்கிறது. அங்கு மதுசேனன் என்ற அரசன் இருந்தான். அவனுக்கு ஒரு சமயம் மூன்று ஸ்தனங்கள் உள்ள பெண் பிறந்தாள். அரசன் மூன்று ஸ்தனங்களுடன் அவள் பிறந்திருப்பதைக் கேட்டு மந்திரியை அழைத்து, ‘’இவளைக் காட்டில் கொண்டு விட்டுவிடு. அதனால் ஒருவரும் அறியமாட்டார்கள்’’ என்றான். அதைக்கேட்ட மந்திரி ‘’மஹாராஜா, மூன்று ஸ்தனங்களையுடையவள் குலத்திற்குக் கெடுதலை கொண்டு வருவாள் என்று அறிந்ததே. இருந்தாலும் பிராமணர்களை அழைத்துக் கேட்க வேண்டும். அதனால் இரு உலகங்களுக்கும் எதிராக […]
பிராமணனின் மனக்கோட்டை ‘’ஓர் ஊரில் சுபாவக்ருபணன் என்ற பெயருடைய பிராம்மணன் இருந்தான். அவன் பிச்சையெடுத்து வந்த மாவில் ஒரு பகுதியைச் சாப்பிட்டு மிகுதியை ஒரு பாத்திரத்தில் நிரப்பி வந்தான். அந்தப் பாத்திரத்தை ஒரு முனையில் தொங்கவிட்டு அதன் அடியில் கட்டிலைப் போட்டுக்கொண்டு எப்பொழுதும் ஒரு கண்ணால் அதைப் பார்த்துக்கொண்டே இரவில் யோசனை செய்தான்: ‘’இந்தக் குடமோ நிறைந்திருக்கிறது. எப்பொழுதாவது மாவுக்குப் பஞ்சம் ஏற்பட்டால் இதிலிருந்து நூறு ரூபாய் கிடைக்கும். பிறகு அதன்மூலம் இரண்டு ஆடுகளை வாங்குவேன். பிறகு […]
கல்வி கற்ற முட்டாள்கள் ஒரு ஊரில் நான்கு பிராமணர்கள் நண்பர்களாக இருந்தனர். அதில் மூவர் எல்லா சாஸ்திரங்களையும் நன்கு அறிந்து கரை கண்டவர்கள். ஆனால் புத்தியென்பது கிடையாது. ஒருவன் சாஸ்திரமே அறியாதவன். ஆனால் மிகவும் புத்திசாலி. ஒரு சமயம் அவர்கள் கூடி ஆலோசித்தனர். ‘’வெளிநாட்டிற்குச் சென்று அரசர்களைச் சந்தோஷப்படுத்தி பணம் சம்பாதிக்கா விட்டால் வித்தையால் என்ன பிரயோஜனம்! அதனால் எவ்விதமாகிலும் நாம் யாவரும் வேறு தேசம் செல்வோம்’’ என்று. அவ்விதமே புறப்பட்டுச் சிறிது தூரம் சென்றதும், அவர்களில் […]
புதையலைத் தேடிய நான்கு பிராம்மணர்கள் இப்பூவுலகில் ஒரு ஊரில் நான்கு பிராம்மணர்கள் பரஸ்பரம் திடமான நட்புடன் வசித்து வந்தனர். அவர்களும் மிகுந்த தரித்திரத்தால் பீடிக்கப்பட்டுத் தங்களுக்குள் யோசித்தனர். ‘’என்ன வறுமை இது?’’ நியாயமும் பராக்கிரமும் உள்ளவனானாலும் எந்த மனிதனிடம் தனம் என்பதில்லையோ அவனை, நன்கு பணிவிடை செய்தாலும் எஜமானர் வெறுக்கிறார். நல்ல உறவினர்கள் அவனை உடனே விட்டுவிடுகின்றனர், அவனுடைய குணங்கள் கோபிப்பதில்லை. குழந்தைகளும் அவனை திரஸ்கரிக்கின்றனர், ஆபத்துகள் அதிகமாகின்றன. உயர்குலத்தவளானாலும் மனைவி அவனைக் கவனிப்பதில்லை. நண்பர்களும் அணுகுவதில்லை. […]
முட்டாளுக்குச் செய்த உபதேசம் ‘’ஏதோ ஒரு காட்டில் மரக்கிளையில் கூட்டைக் கட்டிக்கொண்டு ஒரு பக்ஷ¢ தம்பதிகள் வசித்து வந்தன. ஒரு சமயம் தை மாதத்தில் காலமற்ற காலத்தில் பெய்த மழையில் நனைந்து இளம் காற்றினால் உடல் நடுங்கிய ஏதோ ஒரு குரங்கு அதே மரத்தடிக்கு வந்து சேர்ந்தது. பற்கள் வீணை வாசித்துக் கொண்டு, மிகவும் பரிதாபகரமாக கைகளையும் கால்களையும் ஒடுக்கிக்கொண்டு இருக்கும் அதனிடம் பெண் குருவி இரக்கத்துடன் சொல்லிற்று: கால்களையும் கைகளையும் பார்த்தால் மனிதனுக்கு இருப்பது போலிருக்கிறது. […]
பெண்டாட்டியாத்தாள் பெரியாத்தாள் புகழ்பெற்ற பலமும் வீரமும் பெற்றவனும், அநேக அரசர்களின் கூட்டத்தினர் வணங்குவதால் அவர்களுடைய கிரீடங்களின் ரத்தினங்களின் காந்திக் கிரணங்களால் ஜ்வலிக்கும் பாதபீடத்தையுடையவனும், சரத்காலத்துச் சந்திரனின் நிர்மலமான கிரணங்களைப் போன்ற கீர்த்தியுடையவனும், சமுத்திரம் வரையிலுள்ள பூமிக்கு அதிபதியுமான நந்தன் என்ற அரசனிருந்தான். அவனுக்கு எல்லா சாஸ்திரங்களின் தத்துவங்களை நன்கு அறிந்தவனான வரருசி என்ற மந்திரி ஒருவன் இருந்தான். அவனுடைய மனைவியும் காதல் சண்டையால் கோபித்துக் கொண்டாள். மிகவும் பிரியமான அவள் அநேக விதமாக திருப்திப்படுத்தப்பட்டும் கூட சந்தோஷமடையவில்லை. […]
சமயோசித புத்தியற்ற குயவன் ஒரு ஊரில் ஒரு குயவனிருந்தான். அவன் ஒரு சமயம் கவனமில்லாமல் வெகு வேகமாக ஓடி கூர்மையான நுனி உடைய ஒரு உடைந்த பாத்திரத்தின் மேல் விழுந்தான். அதன் கூரிய நுனி அவனுடைய நெற்றிக்கட்டை நன்கு கிழித்து விட்டது. ரத்தத்தினால் நனைந்த உடலுடன் எப்படியோ எழுந்திருந்தான். பிறகு சரியாக அதற்கு வைத்தியம் செய்யாததால் அந்தக் கூர்மையான அடி கோடுமான பெரிய வடுவாக ஆகிவிட்டது. ஒரு சமயம் ஊர் பஞ்சத்தினால் பீடிக்கப்பட்டபொழுது பசியால் […]
ஏதோ ஒரு கிணற்றில் கங்கதத்தன் என்ற பெயருடைய தவளையரசன் இருந்தது. அது ஒருநாள் தன் உறவினர்களால் துன்புறுத்தப்பட்டு, கிணற்றில் தொங்கிய வாளியில் ஏறி படிப்படியாக வெளியே வந்து சேர்ந்தது. ‘’இந்த உறவினர்களுக்கு தீங்கு செய்வதற்கு என்ன வழி? ஆபத்து வந்தபோது உதவி புரிகிறவனுக்கும், கஷ்ட தசையை எள்ளி நகையாடுகிறவனுக்கும் உதவி புரிந்தால் மனிதன் மறுபிறப்புப் பெறுகிறான். என்றொரு பழமொழி உண்டு என்று எண்ணமிட்டது. இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கும்போது ஒரு கருநாகம் புற்றில் நுழைவதைத் தவளையரசன் பார்த்துவிட்டது. அதைக் கண்டதும் […]
இங்கே அடைந்ததை அழித்தல் என்ற நான்காவது தந்திரம் தொடங்குகிறது. அதன் முதற்செய்யுள் பின்வருமாறு: கிடைத்த பொருளை முட்டாள் தனத்தினால் இழக்கிறவன் துயரப்பட வேண்டியதுதான். மூல முதலையைக் குரங்கு வஞ்சித்தது. அரசகுமாரர்கள், ‘’அது எப்படி?’’ என்று கேட்க, விஷ்ணுசர்மன் சொல்லத் தொடங்கினார்; ஒரு கடற்கரையிலே பெரிய நாவல்மரம் ஒன்றிருந்தது. அதில் எப்பொழுதும் பழங்கள் இருந்துகொண்டேயிருக்கும். அந்த மரத்தில் ரக்தமுகன் என்றொரு குரங்கு இருந்துவந்தது. ஒருநாள் கராலமுகன் என்ற பெரிய முதலை ஒன்று நீரிலிருந்து வெளிவந்து அந்த நாவல் […]
பாம்பின்மேல் சவாரி செய்த தவளைகள் ஒரு இடத்தில் மந்தவிஷன் என்றொரு கருநாகம் இருந்தது. அது வயதான பாம்பு. ‘’நான் சுகமாக வாழ்வதற்கு வழியென்ன?’’ என்று அது எண்ணிப்பார்த்தது. பிறகு, தவளைகள் நிறைய வசித்த ஒரு குளத்துக்கு அது போயிற்று. வாழ்க்கையில் வெறுப்படைந்தது போல் அது பாசாங்கு செய்தது. அம்மாதிரி காத்து நிற்கையில், நீர் ஓரத்துக்கு வந்த ஒரு தவளை அதைப் பார்த்து, “மாமா, முன்போல் நீங்கள் ஏன் இரைதேடித் திரியவில்லை?’’ என்று கேட்டது. அதற்குப் பாம்பு, ‘’நண்பனே, […]