Articles Posted by the Author:

 • பஞ்சதந்திரம் தொடர் 48

  பஞ்சதந்திரம் தொடர் 48

  பொன் எச்சமிட்ட பறவை ஒரு மலைக்கருகில்  பெரிய மரம் ஒன்று இருந்தது. அதில் ஒரு பறவை இருந்து வந்தது. அதன் எச்சத்திலிருந்து தங்கம் உற்பத்தியாகி வந்தது. ஒருநாள் அந்த இடத்துக்கு ஒரு  வேடன் வந்தான். அந்தப் பறவை அவன் எதிரிலேயே எச்சம் இட்டது. அது விழுகையிலேயே தங்கமாக மாறுவதை வேடன் கண்டான். ஆச்சரியமடைந்து போனான். ‘’ஆஹா, குழந்தைப் பருவத்திலிருந்து நான் பறவைகளைப் பிடித்து எட்டு வருஷங்கள் ஆகின்றனவே! ஒரு நாளாவது பறவையின் எச்சத்தில் பொன்னைக் கண்டதில்லையே!’’ என்று […]


 • பஞ்சதந்திரம் தொடர் 47

  பஞ்சதந்திரம் தொடர் 47

    மூடத் தச்சன் ஒரு ஊரில் ஒரு தச்சன் இருந்தான். அவன் மனைவி ஒரு வேசி என்பது ஊரறிந்த சங்கதி. அவள் நடத்தையைச் சோதிக்க நினைத்தான் தச்சன் ‘’இவளை எப்படிச் சோதிப்பது? பெண்களின் கற்பின் முன்னே நெருப்பு குளுமையடையும், நிலா நெருப்பாகிவிடும், கெட்டவன் நல்லவனாவான். என்றொரு பழமொழி உண்டு. ஊர் ஜனங்கள் பேசிக்கொள்வதிலிருந்து இவள் ஒரு வேசி என்று எனக்குத் தெரியும். வேதத்திலோ சாஸ்திரத்திலோ காணாததையும் கேளாததையும், பிரபஞ்சம் முழுவதிலுமுள்ள சகல விஷயங்களையும், ஜனங்களிடமிருந்து தெரிந்து கொள்ளலாம். […]


 • பஞ்சதந்திரம் தொடர் 46

  பஞ்சதந்திரம் தொடர் 46

  கிழவனும் குமரியும் ஒரு ஊரில் காமாதுரன் என்றொரு கிழட்டு வியாபாரி இருந்தான். அவன் மனைவி இறந்து போய்விட்டாள். அவனுக்குக் காமத்தால் அறிவு மழுங்கி விட்டது. நிறையப் பணம் கொடுத்து ஒரு ஏழை வியாபாரியின் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டான். அந்தப் பெண்ணுக்கு ஒரே துக்கமாயிருந்தது. அந்தக் கிழட்டு வியாபாரியை ஏறெடுத்துப் பார்க்கவும் அவளுக்கு முடியவில்லை. அது நியாயந்தானே? இறந்த சடலங்களைக் கொலையாளி எறிந்து விட்டதால் வெள்ளெலும்புகள் நிறைந்து கிடக்கும் ஒரு கிணறு போலத்தான் தலைநரைந்த பேர்வழிகளும் காணப்படுகிறார்கள். […]


 • பஞ்சதந்திரம் தொடர் 45

  பஞ்சதந்திரம் தொடர் 45

  பொன் தந்த பாம்பு ஒரு ஊரில் ஒரு பிராம்மணன் இருந்தான். உழுவதே அவன் தொழில். அதில் ஆதாயம் ஒன்றும் அவனுக்குக் கிடைக்காமல் இருந்து வந்தது. ஒருநாள், கோடைக்கால முடிவில், வெய்யில் தாங்க முடியாமல் அவன் தன் வயல் மத்தியிலே ஒரு மரத்தின் நிழலில் சிறிது கண்ணயர்ந்தான். அப்போது கொஞ்சதூரம் தள்ளி இருந்த ஒரு எறும்புப் புற்றின் மேல் பயங்கரமான ஒரு பெரிய பாம்பு படமெடுத்து ஆடுவதைக் கண்டுவிட்டான். உடனே அவன், ‘’இது கட்டாயம் இந்த வயலைக் காக்கும் […]


 • பஞ்சதந்திரம் தொடர் 44 – வேதியனும் திருடர்களும்

  பஞ்சதந்திரம் தொடர் 44 – வேதியனும் திருடர்களும்

  ஒரு ஊரில் மித்ரசர்மா என்றொரு பிராம்மணன் இருந்தான். அவன் விடாமுயற்சியோடு அக்கினிஹோத்திரங்களைச் செய்துகொண்டு இருந்துவந்தான். தை மாதத்தில் ஒரு நாள். இளங்காற்று வீசியது. வானத்தை மேகங்கள் மறைத்தன. மழை சிறு தூறலாகப் பெய்தது. அந்த வேளையில் பசுதானம் கேட்பதற்காக அந்தப் பிராம்மணன் வேறொரு கிராமத்துக்குச் சென்றான். அங்கே வேறு ஒரு பிராம்மணனிடம், ‘’பிராம்மணா! வரும் அமாவாசையன்றைக்கு நான் யாகம் செய்யப் போகிறேன். அதற்கு ஒரு பசுவை எனக்குக் கொடு!’’ என்றான். சாஸ்திரம் சொல்லியபடி அவன் மித்ரசர்மாவுக்கு ஒரு […]


 • பஞ்சதந்திரம் தொடர் 43 – பூனை வழங்கிய தீர்ப்பு

  பஞ்சதந்திரம் தொடர் 43 – பூனை வழங்கிய தீர்ப்பு

  ஒரு காலத்தில் ஒரு மரத்தில் நானே இருந்துவந்தேன். அதே மரத்தடியில் இன்னொரு பறவை, ஒரு தித்திரிப்பறவை, இருந்து வந்தது. அண்டை வீட்டுக்காரர்களாக இருந்ததால் எங்களிடையே பிரிக்க முடியாத அன்பு ஏற்பட்டது. சாப்பாடும், விளையாட்டும் முடிந்த பிறகு ஒவ்வொரு நாளும் நாங்கள் இருவரும் ஒன்று கூடுவோம். பிற்பகல் வேளையில் பல நீதி வாக்கியங்களைச் சொல்லிக் கொள்வோம். புராணம் முதலிய கதைகளைச் சொல்வோம். விடுகதை புதிர் போட்டுக் கொள்வோம். ஒருவர்க்கொருவர் பரிசு கொடுத்துக் கொண்டு விநோதமாகக் காலம் கழித்து வந்தோம். […]


 • பஞ்சதந்திரம் தொடர் 42- அரசனைத் தேர்ந்தெடுத்த பறவைகள்

  பஞ்சதந்திரம் தொடர் 42- அரசனைத் தேர்ந்தெடுத்த பறவைகள்

  முன்பு ஒரு சமயம் அன்னப்பறவை, கொக்கு, குயில், மயில், சாதகப் பறவை, ஆந்தை, மாடப்புறா, புறா, நீலக்குயில், கழுகு, வானம்பாடி, நாரை, மைனா, மரங்கொத்திப் பறவை, இன்னும் பல பறவைகள் எல்லாம் ஒன்றுகூடி யோசனை செய்யத் தொடங்கின. ‘’நமக்குக் கருடன் தான் ராஜா. ஆனால் அவரோ மகாவிஷ்ணுவுக்குப் பணிவிடை செய்து வருகிறார். நம்மைக் கவனிப்ப தில்லை. ஆகவே அப்படிப்பட்ட போலி ராஜாவால் நமக்கு என்ன லாபம்? வலையில் சிக்கிவிடுவது போன்ற துக்கங்கள் நமக்கு ஏற்படும்போது அது நம்மைக் […]


 • பஞ்சதந்திரம் தொடர் 41-காக்கைகளும் ஆந்தைகளும்

  பஞ்சதந்திரம் தொடர் 41-காக்கைகளும் ஆந்தைகளும்

  இங்கே, காக்கைகளும், ஆந்தைகளும் என்ற மூன்றாவது தந்திரம் ஆரம்பமாகிறது. அது போரும், சமாதானமும் பற்றியது. அதன் முதற் செய்யுள் பின்வருமாறு: ஏற்கனவே பகைவர்களாயிருந்து பின்னால் நேசம் பாராட்டுகிறவர்களை நம்பவேண்டாம்! ஆந்தைகள் கூடிவாழ்ந்த குகைக்குக் காக்கைகள் நெருப்பு வைத்து எரித்துவிட்டன. ‘’அது எப்படி?’’ என்று அரசகுமாரர்கள் கேட்க, விஷ்ணு சர்மன் சொல்லத் தொடங்கினார்: தென்னாட்டில் பிருதிவிப்பிரதிஷ்டானம் என்றொரு நகரம் இருக்கிறது. அதன் அருகாமையிலே பல கிளைகளுள்ள பெரிய ஆலமரம் ஒன்றிருக்கிறது. அதில் மேகவர்ணன் என்ற காக்கையரசன் இருந்து வந்தது. […]


 • பஞ்சதந்திரம் தொடர் 40 – யானைகளை விடுவித்த எலிகள்

  பஞ்சதந்திரம் தொடர் 40 – யானைகளை விடுவித்த எலிகள்

  மக்களும், வீடுகளும், கோவில்களும் க்ஷ£ணித்துப்போன வட்டாரம் ஒன்று ஒரு காலத்தில் இருந்தது. அதன் பழங்குடிகள் அங்கிருந்த எலிகளே. பிள்ளை, பேரன், பேத்தி, கொள்ளுப்பேரன் கொள்ளுப்பேத்தி என்றபடி அவை பெருகிவளர்ந்தன. பெரிய வீடுகளின் தரையிலுள்ள துளைகளில் அவை இருந்துவந்தன. குடும்பம் பெருகப் பெருக ஒவ்வொரு அரண்மனையையும் அடைந்து வசிக்கலாயின. பல விழாக்கள், நாடகங்கள், விவாகங்கள், விருந்துகள், பானங்கள் முதலியவற்றைக் கொண்டு ஆனந்தம் கொண்டாடி அவை காலம் கழித்து வந்தன. இப்படி அவை இருந்து வருகையில், ஏரியில் நீர் இருக்கிறது […]


 • பஞ்சதந்திரம் தொடர் 39 – நரியும் காளையும்

  பஞ்சதந்திரம் தொடர் 39 – நரியும் காளையும்

  ஏதோ ஒரு ஊரில் பிரலம்பவிருஷணன் என்றொரு காளை இருந்தது. அது மதம் பிடித்துப்போய் தன் மந்தையை விட்டுவிட்டுக் காட்டுக்குப் போய் விட்டது. காட்டில் ஆற்றங்கரையைக் கொம்புகளால் முட்டிக் கிளறிக் கொண்டும், இஷ்டம்போல் மரகதம் போன்ற புல்லை மேய்ந்து கொண்டும் அது திரிந்து வந்தது. அந்தக் காட்டில் பிரலோபிகன் என்றொரு நரி இருந்தது. அது தன் மனைவியோடு ஒருநாள் நதிக்கரையில் இன்பமாய் உட்கார்ந்திருந்தது. அந்த நேரத்தில் காளை நீர் குடிப்பதற்காக அந்த மணற்பரப்பிற்கு வந்து சேர்ந்தது. காளையின் இரண்டு […]