அரவிந்தனி’ல் தொடங்கி ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’-ல் வெகுவாகப்பேசப்பட்ட யுவன் கடந்து வந்திருக்கும் தூரம் மிக அதிகம். தீபாவளி, மௌனம் பேசியதே, இரண்டு பில்லா’க்கள், 7G ரெயின்போ காலனி, ராம், கற்றது தமிழ்,மன்மதன்,புதுப்பேட்டை,பருத்திவீரன், என இன்னும் எத்தனையோ அற்புதமான ஆல்பங்களை கொடுத்து இன்னமும் இப்போது வந்திருக்கும் அனைத்து இளம் இசையமைப்பாளர்களுக்கும் சவால் விட்டுக்கொண்டு புதுசு புதுசாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் யுவன். ‘ஆரண்ய காண்டம்’ போன்ற ஒரு சப்ஜெக்ட் ராஜாவுக்கோ ஏன் ரஹ்மானுக்கோ கூட கிடைக்கவில்லை. அத்தனை அற்புதமான இசை எங்கும் […]
பிரச்சார நெடியின்றி சொல்ல வந்ததை,அழுத்தமான வசனங்களாலும் , இயல்பாகவே அமைந்து விட்ட காட்சிகளைக்கொண்டும்,காட்சிகளுக்கு பொருந்தும் அளவான இசையோடும் என இவ்வளவையும் வைத்துக்கொண்டு கூடவே ஒரு செய்தியும் சொல்லவேண்டும் என நினைத்து எடுத்துக்கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஆனந்த் காந்தி. செண்ட்டிமெண்ட்டலாக K Series-ல் ஆரம்பிக்கும் ‘ஏக்தா கபூரின்’ டீவி சீரியல்களுக்கென வசனம் எழுதிக்கொண்டிருந்த இவரிடமிருந்து இப்படி ஒரு நம் மனதில் அழுந்தப் பதியவைக்கும் படம், முதலில் ஒரு சபாஷ் போட்டுவிட்டுத்தான் விமர்சனம் எல்லாம். தொடர்ந்து கேள்விகள் கேட்டுக்கொண்டேயிருக்கிறான் அந்தப்பையன் […]
பள்ளியில் பத்தாவது வரை படித்த அனைத்தும் விக்கிபீடியா’வில் பார்த்து ஒரு வாரத்தில் கற்றுக் கொள்ளலாம் என்றாகிவிட்டது போல,பழைய ஜாம்பவான்கள் நாற்பது வருடங்களாக இழைந்து இழைந்து கொடுத்தவற்றை நேற்று வந்த அநிருத் மூன்றாவது படத்திலேயே கொடுத்திருக்கிறார். பாம்பேயில் கூட பல வருடங்களாக தனியான ஆல்பம் என்ற விஷயங்கள் பரவலாக ஆரம்பித்து விட்ட போதும் இன்னும் தமிழுக்கு அந்த இசைக்கோர்வைகள், தனியான ஆல்பங்கள் , சினிமா சேராத ஆல்பங்கள் என்றவை வர இன்னமும் காலம் பிடிக்கும், தமிழன் இந்த விஷயங்களில் […]
முதலைக்கு நீரில் தான் அத்தனை பலமும் , வெளியே எடுத்துப்போட்டால் என்ன செய்வதெனத்தெரியாது அலைந்துகொண்டிருக்கும், சொறிநாய்கள் கூடச்சீண்டிப்பார்க்கும். கடல் கடந்து போய் வணிகம் செய்தது போய் இப்போது கடல் கடந்து போய் பணி செய்யவேண்டியிருக்கிறது. ஒட்டுப்பொறுக்கி சமுகத்திலிருந்து எப்போது தான் விடுதலை கிடைக்கும் தமிழனுக்கு ? ஆர்ப்பரிக்கும் கடல் , வலையைத்தொட்டாலே கொன்று போடும் சிங்களவன். தமிழ்நாடு இலங்கைக்கு அருகில் இருப்பதால் தான் இத்தனை பிரச்னைகளும்.கொஞ்சம் நகர்த்தி ஆந்திரா பக்கம் தள்ளிக்கொண்டு போய்விட்டால் சூடுபடுவதாவது குறையும். […]
வழக்கமாக பாம்பேயின் புறநகர் பகுதிகளில் ‘டைம்ஸ் ஆஃப் இண்டியா’வின் சில சிறப்புப்பகுதிகள் கிடைப்பதேயில்லை. எனக்கென பேப்பர் போடும் ஒரு முதியவர் , அவரின் மனைவியுடன் ஸ்டேஷன் செல்லும் வழியில் கடை பரப்பி வைத்திருப்பார். சில சமயங்களில் நேரம் கடந்து விட்டால் நேரே சென்று பேப்பர் வாங்கிக்கொண்டே ட்ரெயினைப்பிடிப்பது வழக்கம். அங்க்கிள் ‘பாம்பே டைம்ஸ்’ என்று இழுப்பேன். போரிவில்லி’க்கபுறம் யாருக்குமே கொடுக்கிறதில்ல தம்பி, இருந்தாலும் இங்க எல்லாருமாச்சேர்ந்து கேட்டுக்கிட்டிருக்கோம். கிடைக்க ஆரம்பிச்சவுடனே உங்களுக்கு மட்டும் தனியா கொடுக்கிறேன் […]
இந்த வெய்யில் காலம் வந்துவிட்டால் எங்கிருந்தோ வந்துவிடுகின்றன மைனாக்கள். கூடவே சில குயில்களும் , அவ்வப்போது இன்னெதென்று அறியாத பறவைகளும் வந்து அமர்ந்து கொள்கின்றன. என் வீட்டின் பின்னால் நந்தினி பால் கழகத்தின் ( நம்ம ஊர் ஆவின் போல இங்கே பெங்களூரில் நந்தினி ) பெரிய காலி இடம் இருக்கிறது. பயன்படுத்தாது விட்டதால் செடி கொடிகளும் கொஞ்சம் பெரிய மரங்களுமாக சின்னக் காடு போலவே தோற்றமளிக்கும். அதற்குப்பிறகு ஒரு சர்ச்சும் அதனுள்ளேயும் பிரார்த்திக்க வருபவர்களுக்கென […]
‘கற்றது தமிழ்’ போலவே வரிகளுக்கும் ராகத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து அத்தனை பாடல்களிலும், பின்னணி இசை அடக்கியே வாசிக்கிறது. தெரியாத இசைக்கருவிகள் கொண்டு இசைக்காது எப்போதும் வழமை போல இருக்கும் சாதாரண கருவிகள் கொண்டே இசைக்கப்பட்டிருக்கிறது. மெல்ல இறங்கும் விஷம் போல தன்னையறியாமல் எனக்குள்ளே இறங்கிக் கொண்டிருக்கிறது. உள்ளுக்குள்ளே ஊறிப்போய் வழியும்போது புறங்கையை கொஞ்சம் சுவைத்துப்பார்க்கவே தோணும் தேன் குடித்தவன் நிலையில் இப்போது நான், இது ஒரு புதிய அவதாரம் யுவனுக்கு. ‘கற்றது தமிழ்’, ‘பருத்திவீரன்’, […]
எல்லோருக்கும் பிடித்த சுஜாதா பின்னர் எல்லோருக்கும் பிடித்த அவரது தேசிகன் மற்றும் நேசமிகு ராஜகுமாரன் ( என்ன அருமையான பெயர் ), மணிகண்டன், ரா.விநோத் பின்னர் ஞானுமாக எல்லாருமாச்சேர்ந்து கப்பன் பூங்காவில் ஒரு மூலையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம் நேற்று 28 ஏப்ரல் 2013, மங்கிய மாலைப்பொழுது , வெய்யில் முற்றுமாகத்தணிந்து குளிர்ந்துகிடந்தது புல்தரை. வழக்கம் போல வட்டமாக அமர்ந்து பேசத்தொடங்கினோம். எனக்கு கொஞ்சம் வந்து சேர்வதற்கு நேரமாகிவிட்டது. ஆச்சரியம் 6-7 பேர்களே வந்திருந்த கூட்டம் […]
காற்றின் கரங்களைக் கேட்கலாமென்றால் அது கரைந்து செல்லவே எத்தனிக்கிறது ஃபீனிக்ஸின் இறகுகளைக்கேட்கலாமென்றால் முழுதும் எரிந்தபின்னரே அவை கிடைக்குமெனத் தெரிகிறது. சாதகப்பறவையைக் கேட்கலாமென்றால் பெருமழை வேண்டிக்காத்துக்கிடக்கச் சொல்கிறது அன்னப்பறவையைக் கேட்கலாமென்றால் நீரிலிருந்து பிரித்தெடுக்கும் வரை காத்திருக்கச் சொல்கிறது மானின் விழிகளைக்கேட்கலாமென்றால் அதன் மருட்சியில் மனமே துவண்டு கிடைக்கிறது உன் மனத்தைக் கேட்கலாமென்றால் அது நொடிக்கொருதரம் மாறிக்கொண்டேயிருக்கிறது – சின்னப்பயல் (chinnappayal@gmail.com)
கவ்வும் இசை ( சூது கவ்வும் ) அட்டக்கத்தி’யிலேயே தன்னைக்கொஞ்சம் திரும்பிப்பார்க்க வைத்தவர் சந்தோஷ் நாராயணன். பின்னர் பிஸ்ஸா’வில் மோகத்திரை’யில் நம்மை மயக்கிவிட்டு இங்கு முழுக்க ஒரு கலவையாக ஜூகல்பந்தி வைத்திருக்கிறார். மெலிதான ராப், கொஞ்சம் ட்விஸ்ட்டும், கொஞ்சம் Yodelingம் கலந்து, ஒரு பாடல் முழுக்க பழைய பாடலை ஞாபகப்படுத்துவதாகவும், இன்னொன்று ஜேம்ஸ்பாண்டின் பின்னணி இசைக்கலவையோடு விருந்து படைத்திருக்கிறார், யுவன் “ஆரண்ய காண்டத்தில்” பரீட்சித்துப்பார்த்து வெற்றி பெற்றது போல இங்கும் வென்றிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். ஒவ்வொரு […]