author

நெருப்பின் நிழல்

This entry is part 17 of 33 in the series 12 ஜூன் 2011

ஒற்றை மெழுகுவர்த்தி பிரகாசமான சுடர்.   . காற்றின் அசைவுக்கு சுற்றி சுழன்று அணைகிற போக்கில் சப்பனமிட்டு -பின் நிலைபடுத்தி நெடுநெடுவென்று அலைஅலையாய்… வாழ் சூட்சம  நெளிவுகள் .   . சூட்சமங்களின் அவசியமற்று மெழுகுவர்த்தியின் காலை சுற்றி வட்டமாய், நீள்வட்டமாய்,நெளிநெளியாய் மோன நிலையில் அசைவற்று – படுவேகமாய்,படுவேகமாய், உருமாறி திளைப்பில் துள்ளுகிறது நெருப்பின் நிழல்.   . அணைந்த நெருப்பு, தன் மரணத்திற்கு ஒப்பாரி வைக்கிறது கருகிய வாசனையுடன் மெலிந்த புகையுடன்.   . மறைந்த […]

ஓரு பார்வையில்

This entry is part 31 of 46 in the series 5 ஜூன் 2011

கிறுக்கலற்ற வெண்தாளை கண்டதும் வரைய தோணுவதை போல .. . கறைகளற்ற அடுப்பறையை கண்டதும் சமைக்க தோணுவதை போல .. . பறக்க தோன்றவில்லை, களங்கமற்ற வானத்தை கண்டதும் ! . ஏனோ தெரியவில்லை!! அக்கணத்தில் , அவ்வொரு பார்வையில் .. சிலிர்க்க வைக்கும் மத்தாப்பு பூக்கள் தெரித்தது உடலெங்கும்.. . தெரித்தது தளும்ப தொடங்க .. மொட்டை மாடியிலிருந்து தடதடவென்று கீழிறங்கி குழந்தையை கட்டி முத்தமிட்டு நிலை பற்றாமல் சுற்றினேன் அங்குமிங்கும்.. . ஏனோ தெரியவில்லை!! […]

திரிநது போன தருணங்கள்

This entry is part 10 of 42 in the series 22 மே 2011

மலர் கண்காட்சியில் சிவப்பு நிறத்தில் சின்னதாய் வெள்ளை நிறத்தில் வெகுளியாய் மஞ்சள்  நிறத்தில் மகிழ்வாய் … அத்தனையும் அழகு !! எதை பார்ப்ப்து எதை விடுவதென்ற தவிப்பை தவிர்க்க தெரியாமல் லயிக்க நேரமும் இல்லாமல் …       கால்பாத வளைகுழியில் பிடிக்க நினைத்தும் கடல் அலை இழுக்க … உருளை உருளையாக நகரும் மணல் துகல்கள் வியப்பான கிச்சுகிச்சு …       பிடிக்க நினைத்த தருணங்கள் உருளையாக கிச்சுகிச்சு மூட்டாமல் விசுக் […]

தொடுவானம்

This entry is part 26 of 48 in the series 15 மே 2011

  ரோட்டோர பிளாட்பாரத்தில்  ஒரு தொழுநோயாளனும் ஒரு தொழுநோயாளியும் அவர்களைத் தாண்டி கால்கள் போகிற போது கைகளை நீட்டி பிச்சை கேட்கிற நேரம் தவிர சுவாரஸ்யமான சம்பாஷனை ஒயாமல்.. பிச்சை விழும் காசில் போட்டியில்லை – எனில் தம்பதியனரோ ? ஓப்பந்தமின்றி சேர்ந்து உள்ளனரோ ? நோய் சந்தித்த பின்பா ? முன்பா ? பின் எனில் உன்னிடமிருந்து தொற்றியதென்ற குற்றபதிவு கண்களிலில்லை முன்பே எனில் ஒருவருக்கொருவர் ஆறுதலோ ? ஆறுதலோ ஆர்வமோ அகநானூறு படலங்களை தீர்மானிப்பது […]