author

சங்க இலக்கியங்களில் கைம்பெண்கள்

This entry is part 5 of 34 in the series 6 ஜனவரி 2013

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com சங்க இலக்கியங்கள். உலக இலக்கியங்களோடு வைத்து எண்ணத்தக்க செவ்வியல் இலக்கியங்களாகத் திகழ்கின்றன. இவை பழந்தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்களது பழக்க வழக்கங்களையும் எடுத்துரைக்கும் காலப்பெட்டகங்களாக மிளிர்கின்றன. பழந்தமிழகத்தில் மகளிர் கல்வியறிவில் சிறந்து விளங்கினர். கவிபாடும் வல்லமை பெற்றுத் திகழ்ந்தனர். தங்களின் புலமையாற்றலால் பல புதுமைகளைப் படைத்த பூவையராகப் பல பெண்கள் திகழ்ந்திருக்கின்றனர். இவ்வாறு திகழ்ந்த மகளிரின் வாழ்க்கையை சங்க இலக்கியங்கள் காலக் கண்ணாடி போன்று […]

சங்க இலக்கியங்களில் அலர்

This entry is part 14 of 26 in the series 30 டிசம்பர் 2012

 இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com மனிதன் ஒருவருடன் இணைந்து வாழ்க்கை நடத்தும் பண்பினன். அவ்வாறு வாழ்கின்றபோது ஒருவருடைய செயல்பாடுகளைக் குறித்து மற்றவர்கள் குறையோ நிறையோ கூறுவது வழக்கம். ஒருவர் நல்லனவற்றைச் செய்கின்றபோது பாராட்டும், மற்றவருக்கு ஒவ்வாதனவற்றையோ அல்லது ஏற்றுக் கொள்ள இயலாதனவற்றையோ செய்கின்றபோது தூற்றுவர். இதனை விமர்சனம் என்று கூறலாம். இவ்வாறு பிறரால் கூறப்படும் விமர்சனத்தை சங்கச் சான்றோர் அலர் என்று குறிப்பிட்டனர். அலர் என்ற சொல் சங்கம் மருவிய காலம், […]

ஜெய்கிந்த் செண்பகராமன்

This entry is part 11 of 31 in the series 16 டிசம்பர் 2012

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com      1914-ஆம் ஆண்டு, ஜெர்மனியில் முதல் உலகப்போர் நடந்தபோதுஇந்தியா ஆங்கிலேயரின் அடிமைப்பிடியில் சிக்கியிருந்தது. அப்போது இந்தியாவிலுள்ள நாட்டுப்பற்றாளர்களை ஒருங்கு சேர்த்துப் படை திரட்டி இந்திய பிடுதலைக்குப் போராடியவர் டாக்டர் செண்பகராமர் ஆவார். அவரே வெளிநாட்டில் சுதந்திரப்போர் முழக்கம் செய்த முதல் தமிழ் வீரர் ஆவார். பிறப்பும் கல்வியும் டாக்டர் செண்பகராமர் 1891-ஆம் ஆண்டு செப்டெம்பர்த் திங்கள், 15-ஆம் நாள், கேரள நாட்டின் தலைநகராகிய திருவனந்தபுரத்தில் பிறந்தார். […]

பழமொழிகளில் விருப்பமும் விருப்பமின்மையும்

This entry is part 6 of 31 in the series 2 டிசம்பர் 2012

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com வாழ்வில் விருப்பம், விருப்பின்மை என்பது ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு செயலுக்கும் உண்டு. இவை இரண்டும் தனி நபர், மற்றும் குழுக்கள், சமுதாயம் சார்ந்தவையாக விளங்குகின்றது. சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலும் விருப்பமும் விருப்பின்மையும் தொன்று தொட்டு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. சர்க்ரை நோய் உள்ள ஒருவரைப் பார்த்து, ‘‘ஐயா இந்த இனிப்பை சாப்பிடுகிறீர்களா?’’ என்று கேட்டால் அவர், ‘‘எனக்கு இனிப்புப் பிடிக்காதப்பா. அதோடு மட்டுமல்லாது மருத்துவர் இனிப்பைச் சாப்பிடக் […]

பழமொழிகளில் காலம்

This entry is part 30 of 42 in the series 25 நவம்பர் 2012

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com      ‘‘காலம் நமக்குத் தோழன் காற்றும் மழையும் நண்பன்’’ என்ற பாடலை நாம் அனைவரும் கேட்ட பழைய திரைப்படப்பாடல் ஆகும். இப்பாடலில் வரும் காலம் அனைவரது வாழ்க்கையிலும் பல்வேறு தடயங்களை விட்டுச் செல்கின்றது. வலிமையானவர்கள் தவறுகள் செய்கின்றபோது அவரைத் தட்டிக் கேட்க முடியாத நிலைவரும்போது, ‘‘அவனுக்கெல்லாம் காலம்தான் பதில் சொல்லும். காலத்திடம் இருந்து யாரும் தப்பிக்க முடியாது’’ என்று பலரும் கூறுவதைக் கேட்டிருக்கின்றோம். இக்காலத்தை, ‘‘எனக்குப் போதாத காலம், கேடு காலம், […]

‘‘கண்ணதாசனின் கவிதைச் சிறப்புகள்’’

This entry is part 5 of 29 in the series 18 நவம்பர் 2012

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை E. Mail: Malar.sethu@gmail.com இருபதாம் நூற்றாண்டு கண்ட தமிழ்க் கவிஞர்களில் மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், கவியரசர் கண்ணதாசன் ஆகிய மூவரும் தலைசிறந்த கவிஞர்கள் ஆவர். இந்தப் புகழ்வரிசையில் மூன்றாவதாகத் தோன்றிய கண்ணதாசன் இன்றளவும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராய் நிலைத்த புகழுடன் விளங்கிக் கொண்டிருக்கிறார். முன்னவர்கள் இருவரும் தங்களது கவிதைகள் மூலமாகப் படித்தவர்களிடமும் அறிஞர்களிடமும் சென்று சேர்ந்தார்கள். ஆனால் கவியரசர் கண்ணதாசனோ படிக்காத பாமரர்களிடமும் சென்று சேர்ந்தார். […]

பழமொழிகளில் ‘காடு’

This entry is part 7 of 33 in the series 11 நவம்பர் 2012

 இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com      ஆதி மனிதன் காடுகளில் அலைந்து திரிந்தான். நாகரிகமற்ற சூழலில் விலங்களைப் போன்று வாழ்ந்தான். சிறிது சிறிதாக நாகரிகமடைந்த பின்னர் தனக்கேற்றவாறு வசிப்பிடங்களை அமைத்துக் கொண்டான். மலைக்குகைகள், மரப்பொந்துகள், மரத்தடிகள் என்று வாழ்ந்தவன் பின்னர் காடுகளை அழித்துத் தனக்கேற்ற வசிப்பிடங்களையும், விவசாயம் செய்வதற்குரிய நிலங்களையும் அமைத்துக் கொண்டு வாழ்ந்தான். அன்று முதல் இன்று வரை மனிதனின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் காடுகள் பின்னணியாக உள்ளன. காடு மனித […]

பழமொழிகளில் கல்லும் கல்லெறியும்

This entry is part 19 of 34 in the series 28அக்டோபர் 2012

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com      கற்களைக் குறித்த பல்வேறு கதைகள் மக்களின் வழக்காறுகளில் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு கல்லும் ஒரு கதையினை நமக்கு எடுத்துரைக்கின்றன. நடைபாதையில் இரு கற்களை நட்டு அதன் மீது ஒரு கல்லைப் படுக்க வைத்திருப்பார்கள். இது சூலோடு இறந்து போன பெண்ணின் நினைவாக நடப்பட்ட கல்லாகும். இதனைச் சுமைதாங்கிக் கல் என்று கூறுவர். நிலத்தின் நான்கு எல்லைகளைக் குறிப்பிட ஊன்றப்படும் எல்லைக்கல் அளவுக் […]

பழமொழிகளில் கனவும் நினைத்தலும்

This entry is part 22 of 41 in the series 23 செப்டம்பர் 2012

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com      மக்கள் கனவினை, ‘சொப்பனம்’ என்று வழக்கில் வழங்குவர். மனிதனின் ஆழ் மனதில் பதியும் நிறைவேறா ஆசைகளே கனவாகப் பரிணமிக்கின்றன என்று உளவியலறிஞர்கள் கூறுவர். மனதை உள்மனம், வெளிமனம், ஆழ்மனம் என்று பகுப்பர். இவ் ஆழ் மனதிலேயேஆசைகள், ஏக்கங்கள் உள்ளிட்டவைகள் பதிவுகளாகப் பதிகின்றன. இத்தகைய பதிவுகள் நாளடைவில் கனவுகளாக வெளிப்படுகின்றன. கனவுகள் சிலருக்கு எதிர்காலத்தில் நிகழும் நிகழ்வுகளை எடுத்துரைக்கும் சாதனங்களாகவும் அமைகின்றன. இலக்கியங்களில் இடம்பெறும் கனவுகள் அனைத்தும் இலக்கிய உத்தியாக இலக்கிய […]

பழமொழிகளில் கனவும் நினைத்தலும்

This entry is part 32 of 37 in the series 2 செப்டம்பர் 2012

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com      மக்கள் கனவினை, ‘சொப்பனம்’ என்று வழக்கில் வழங்குவர். மனிதனின் ஆழ் மனதில் பதியும் நிறைவேறா ஆசைகளே கனவாகப் பரிணமிக்கின்றன என்று உளவியலறிஞர்கள் கூறுவர். மனதை உள்மனம், வெளிமனம், ஆழ்மனம் என்று பகுப்பர். இவ் ஆழ் மனதிலேயேஆசைகள், ஏக்கங்கள் உள்ளிட்டவைகள் பதிவுகளாகப் பதிகின்றன. இத்தகைய பதிவுகள் நாளடைவில் கனவுகளாக வெளிப்படுகின்றன. கனவுகள் சிலருக்கு எதிர்காலத்தில் நிகழும் நிகழ்வுகளை எடுத்துரைக்கும் சாதனங்களாகவும் அமைகின்றன. இலக்கியங்களில் இடம்பெறும் கனவுகள் அனைத்தும் இலக்கிய உத்தியாக […]