இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com மனிதர்கள் பலவிதம். மனிதர்கள் ஒருவருக்கொருவர் மாறுபடுவர். சிலர் நடத்தையில் வேறுபடுவர். பழக்கவழக்கங்களில் சிலர் வேறுபடுவர். பேச்சாலும், செயலாலும் வேறுபடுவர். ஆனால் எந்நிலையிலும் மாறாது உண்மையாளராக நடப்பவர் சிலரே ஆவார். இவர்களை நீதிமான்கள், அறவோர் என்றும் பழிபாவத்திற்கு அஞ்சுபவர் என்றும் வழங்குவர். சிலரோ, பழிபாவங்களுக்கு அஞ்சாது இழிவான செயல்களில் ஈடுபடுவர். தாம் தவறு செய்தாலும் அதனை ஒத்துக் கொள்ளாது அதற்கு வேறொருவர்தான் காரணம் என்று கூறுவர். தவறினைச் […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com இன்றைய உலகில் இருபெரும் நிலைமைகள் காணப்படுகின்றன. ஏழ்மைநிலை, பணம் படைத்த நிலை என்பவையே அந்நிலைமைகள். உண்மையில் ஏழ்மை, ஏழை என்பன பல பொருண்மைகளில் வழங்கப்பட்டு வருவது நோக்கத்தக்கது. செல்வம் இல்லா வறுமைநிலையினை ஏழ்மைநிலை என்பர். ஏழ்மை நிலையில் இருப்பவனை ஏழை என்று அழைத்தனர். இவ்வேழை என்ற வறுமைநிலை குறித்து பல்வேறு கருத்துக்களை நமது முன்னோர்கள் வழங்கியுள்ளனர். ஏழை – பொருள் விளக்கம் ‘ஏழை’ என்பது செல்வமில்லா […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com மனிதனின் வாழ்வு சுற்றுச் சூழலைப் பொருத்தே அமைகின்றது. மனிதன் சூழலைக் கெடுக்காது இயற்கையுடன் இயைந்து இணைந்து வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால்தான் மனிதன் இவ்வுலகில் மகிழ்வான வாழ்வை வாழ இயலும். நம்மைச் சுற்றியுள்ள சுற்றுச் சூழலைப் பா பாதுகாத்து நிறைவான வாழ்வை வாழ வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்ட நம்முடைய முன்னோர்கள் அத்தகைய நற்சிந்தனைகளைப் பழமொழிகள் வாயிலாகப் பாங்குற மொழிந்துள்ளனர். வீடும் வெயிலும் மண்ணிற்கு அழகு […]
முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com மனித வாழ்க்கை உயர்வானது, அரிதானது. வாழ்தல் என்பது இயற்கை மனிதனுக்கு அளித்த பெருங்கருணை. காற்றும் நீரும், வெப்பமும் அள்ளக் குறையாமல் காலம் காலமாக வழங்கிவரும் இயற்கைப் பேராற்றல்கள். அவற்றின் வழி அனைத்து வசதிகளும் பெற்ற மானுடரிடம், இவ்வியற்கை ஆற்றலைச் சமமாகப் பகிர்ந்து வாழ்வை அனுபவித்து வாழாமல், தங்களுக்குள் சமயம், மொழி, இனம். சாதி போன்றவற்றால் வேறுபட்டு மனித உறவுகளைப் பிரித்தனர். வாழ்தல்; என்பதன் பொருள் […]
முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com இறைவன் படைத்த உயிரினங்களுள் மிகவும் உன்னதமானவன் மனிதனாவான். அம்மனிதன் பண்பாலும், நடத்தையாலும் உயர்நிலையை அடைதல் வேண்டும். இறைவன் மனிதன் உயர்ந்த வாழ்வு வாழ வேண்டும் என்று விரும்பியே உலகில் அவனுக்கு உதவியாக இயற்கையையும், உயிரினங்களையும் படைத்தான். ஆனால் மனிதன் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு அவற்றையெல்லாம் விடுத்துப் பல்வேறு கீழான குணங்களைக் கைக்கொண்டான். இத்தகைய கீழான எண்ணங்கொண்ட மனிதனை நல்வழிப்படுத்த நமது முன்னோர்கள் […]
முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பல பொருள்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன. பூ-நார், நகம்-சதை, அண்ணன்-தம்பி, நெருப்பு-புகை, என்பன போன்று பல ஒன்றுடன் ஒன்று இணைந்து வரும். மேற்கூறிய சொற்களைப் போன்றே பல்லும் சொல்லும் என்ற இரு சொற்களும் ஒன்றற்கொன்று தொடர்புடையனவாக அமைந்துள்ளன. இவ்விரு சொற்களையும் பழமொழிகளில் வைத்து நமது முன்னோர்கள் வாழ்க்கைக்கு உரிய பல்வேறு கருத்துக்களையும் நமக்கு வழங்கியுள்ளனர். பல்லும்-சொல்லும் ஒரு மனிதனின் வாயில் பல் […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com சமுதாய வாழ்வு மேம்பாடு அடைவதற்குச் சமய வழிபாட்டு முறைகள் வழிகோலுகின்றன. எவ்வண்ணம் வழிபாடு செய்தல் வேண்டும் என்பதை நம் முன்னோர் வரையறை செய்துள்ளனர். யாருக்கெல்லாம் வழிபாடு செய்தல் வேண்டும் என்பதை விரிவாக எடுத்துக் கூறியுள்ளனர். இறைவனை வணங்குதல், அரசன் சான்றோர் ஆகியோருக்கு வணக்கம் செய்தல், பெரியவர்களை வணங்குதல் ஆகிய வழிபாட்டுப் பண்பாடுகளை வகுத்துக் கூறியுள்ளனர். நெடுந்தொகை என்று வழங்கப்படும் அகநானூற்றில் வழிபாடு குறித்த பல்வேறு செய்திகள் […]
முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com ‘‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது அதனினும் அரிது கூன், குறளு, செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது’’ என்று ஔவையார் மனிதப் பிறவியின் உயர்வைப் பற்றிப் பாடும்போது குறிப்பிடுகின்றார். பிறவியில் இறுதியானது மனிதப் பிறவியே என்பர். உயிர்கள் செய்யக் கூடிய நல்வினைப் பயன் காரணமாகவே உயர்வான மனிதப் பிறவியாக பிறக்கின்றது என்று அறிஞர்கள் கூறுவர். அதில் எந்தக் குறைபாடும் இல்லாது பிறப்பது […]
முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com ‘‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’’ என்பர் தொல்காப்பியர். தமிழில் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு பொருள் உண்டு. காலத்திற்கேற்ப சூழல், இடத்திற்கேற்ப அச்சொற்களுக்குப் பொருள் உண்டு. ஒரே சொல் ஓரிடத்தில் ஒரு பொருளையும் பிறிதோரிடத்தில் வேறொரு பொருளையும் தரும் இது தமிழ் மொழிக்கே உரிய சிறப்பாகும். அவ்வகையில் அறுத்தல், உரித்தல் ஆகிய இரு தொழிற்சொற்களையும் பழமொழிகளில் பயன்படுத்தி அதன் வாயிலாகப் பல்வேறு பண்பாட்டு நெறிகளை […]
E. Mail: Malar.sethu@gmail.com தமிழ்ப் புலவர்களில் காலந்தோறும் தாக்கத்தை ஏற்படுத்தி வருபவர் திருவள்ளுவர் ஆவார். தாம் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்லாது அடுத்தடுத்து வரும் காலங்களிலும் திருவள்ளுவரின் கருத்துக்கள் செல்வாக்குப் பெற்றுத் திகழ்வது நோக்கத்தக்கது. காப்பியங்களிலிருந்து தற்காலம் வரை தோன்றியுள்ள இலக்கியங்கள் அனைத்திலும் திருக்குறட் கருத்துக்கள் விரவிக் காணப்படுவது கண்கூடாகும். ஒவ்வொரு புலவரும் திருவள்ளுவர்மேல் தணியாத பற்றுக் கொண்டிருந்தனர் என்பதற்கு திருக்குறளையும் அதன் கருத்துக்களையும் உள்ளடக்கி அவர்கள் படைத்த இலக்கியங்களே சான்றுகளாக அமைந்திலங்குகின்றன. காலந்தோறும் திருக்குறள் தாக்கத்தை ஏற்படுத்தி […]