டாக்டர் ஜி. ஜான்சன் மதுரை மறை மாவடடத்தின் கூ,ட்ட அறிக்கை வந்தது. மதுரை மறை மாவடடத்தில் திருப்பத்தூர், காரைக்குடி, மதுரை, திண்டுக்கல், போடிநாயக்கனூர், , கொடை ரோடு, கொடைக்கானல், ஆனைமலையான்பட்டி ஆகிய சபைகள்.அடங்கும். ஒவ்வொரு சபையிலுமிருந்து மூவர் இதில் பங்கு பெறுவார்கள். இதில் பங்கு பெறும்போது மதுரை மறை மாவட்டத்தின் முக்கிய தலைவர்களைச் சந்திக்கலாம். அவர்களிடம் பழகிய பின்பு அடுத்த முறை நான் மறை மாவட்டத் தேர்தலில் நின்று வெற்றி பெறலாம். என்னுடைய குறிக்கோள் மதுரை மறைவாட்டத்தின் […]
டாக்டர் ஜி. ஜான்சன் மருத்துவர்கள் மருத்துவமனைகளிலும் கிளினிக்குகளிலும் நோயாளிகளிடையே பரவலாக காணும் பிரச்னை உறக்கமின்மை. முதியோர்களில் பாதிக்கு மேலானோர் எப்போதாவது இந்த உறக்கமின்மை பிரச்னையை எதிர்நோக்கியிருப்பார்கள்.. உறக்கமின்மை பல்வேறு விளைவுகளைக் கொண்டது அவை வருமாறு: * தூக்கம் வருவதையும் வந்தபின்பு அதை நிலைநிறுத்துவதிலும் பிரச்னை .பகலில் அதிகமான தூக்கமும், களைப்பும் உண்டாவது. * தூங்கும்போது மனநிலையில் மாற்றமும், தூக்கத்தில் நடப்பதும், கால்கள் அசைவதும் போன்றவை. * தூக்க நேரத்தில் உண்டான மாற்றத்தால் தூக்கமின்மை. ஒருவர் எவ்வாறு தூங்குகிறார் […]
மருத்துவ வார்டில் நான் தனியாகவே பணியாற்றினேன். வார்டில் இருந்த நோயாளிகளை இரவு பகலாகப் பார்த்தேன். அவர்களைக் காப்பாற்றி மீண்டும் சுகத்துடன் வீடு திரும்ப ஆவன செய்தேன். அவர்கள் பெரும்பாலும் திருப்பத்தூரின் சுற்றுவட்டார கிராமங்களின் மக்கள். திருப்பத்தூரில் ஓர் அரசு மருத்துவமனை இருந்தாலும் அங்கு அவர்கள் செல்லாமல் இங்கு வருவது ஒரு நம்பிக்கையில்தான். மிஷன் மருத்துவமனையில் நல்ல கவனிப்பும் சிறந்த சிகிச்சையும் பெறலாம் என்றுதான் இங்கு வந்தனர். அரசு மருத்துவமனையில் அனைத்துமே […]
மூட்டு அழற்சி பெரும்பாலும் வயதானவர்களை ( 60 வயதுக்கு மேலானவர்கள் ) பாதிப்பது இயல்பு. உலகில் இது பரவலாக காணப்படுகிறது. பெரும்பாலும் 60 வயதுக்குமேலுள்ள பெண்களை இது அதிகம் பாதிக்கிறது. துவக்க காலத்தில் வீக்கம் இருந்தாலும் வலி இருக்காது. போகப்போக வலி கடுமையாகும்.உடல் பருமன் அதிகமுள்ள பெண்களையும் இது தாக்கலாம். […]
ஆரோக்கியநாதர் ஆலயத் திறப்பு விழாவுக்கான சிறப்பு மலருக்கு வாழ்த்துச் செய்திகள் வந்துகொண்டிருந்தன. சுவீடன் ஜெர்மனி நாடுகளிலிருந்து இன்னும் பதில் வரவில்லை. அப்போது திருச்சபையின் சினோடு தொடர்புக் கூட்டம் பற்றிய சுற்றறிக்கை வந்தது. சினோடு என்பது திருச்சபையின் பேரவை எனலாம்.இது வருடத்தில் இருமுறை கூடும். தமிழகத்தின் பல ஊர்களில் பரவியுள்ள லுத்தரன் திருச்சபையின் ஆலயங்களின் பிரதிநிதிகள் இதில் அங்கம் வகிப்பார்கள். அதற்கு அந்தந்த ஆலயத்தில் […]
ஒரு சிலரின் கைகளில் அல்லது உடலின் இதர பகுதிகளில் நிறைய கட்டிகள் உள்ளதை நீங்கள் பார்த்திருக்கலாம். இவை வலி தராத கட்டிகள். இவை கொஞ்சங்கொஞ்சமாக வளரும் கட்டிகள்.இவற்றைப் பிடித்து அழுத்தினாலும்கூட வலிக்காது. இதை ” நீயூரோபைரோமா ” என்று அழைப்பார்கள். இதை நாம் நரம்பு நார்க் கழலை என்று கூறலாம். இவை நரம்பு நார்களில் தோன்றும் கட்டிகள். நரம்பு நார்க் கழலைகள் பல வகையானவை.இவை தோலில் எழும் கட்டிகள். இவற்றை விரலால் அழுத்தினால் குழி போன்று […]
ஆரோக்கியநாதர் ஆலயத்தின் புதுக் கட்டிட திறப்பு விழாவின் நினைவு மலர் தயார் செய்யும் பணியில் மன மகிழ்ச்சியுடன் ஈடுபட்டேன். சபைச் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வென்று ஆலயத்தின் பொருளாளர் ஆனதால் இந்த அருமையான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதற்காக கடவுளுக்கு நன்றி சொன்னேன். நினைவு மலரை மிகவும் சிறப்பாகச் செய்வது என்று முடிவு செய்தேன்.பால்ராஜ் நன்றாக டைப் செய்வார்..கிறிஸ்டோபர் பொதுத் தொடர்புக்கு உகந்தவர். […]
கழுத்தில் வீக்கம் அல்லது கட்டி உள்ளதை நாம் எளிதில் கண்ணாடியில் பார்த்தாலே தெரியும். அல்லது நம் நண்பர் அல்லது உறவினர் அது பற்றி கூறலாம். அதை உடன் மருத்துவரிடம் காட்டி ஆலோசனைப் பெறுவது முக்கியமாகும். காரணம் எந்த கட்டியானாலும் அது புற்று நோய்க் கட்டி இல்லை என்பதை முதலில் நிர்ணயம் செய்தாக வேண்டும். அதற்கு தற்போது எளிமையான பரிசோதனை முறைகள் வழக்கில் உள்ளன. […]
கொனோரியா ஒரு பாலியல் நோய். இதை மேகவெட்டை நோய் என்று அழைப்பார்கள். இது தகாத உடல் உறவு மூலம் பரவும் தொற்று நோய். இது கோனோகக்காஸ் எனும் கிருமியால் உண்டாகிறது.இது பாலியல் நோயாதலால் உலகளாவிய நிலையில் காணப்படுகிறது.தொழில் மயமான நாடுகளில் இது அதிகமாகவே காணப்படுகிறது.பாதுகாப்பற்ற பாலியல் உறவுகளால் இந்த நோய் எளிதில் பரவிவருகிறது. 15முதல் 19 வயதுடைய பெண்களுக்கும், 20 முதல் 25 வயதுடைய ஆண்களுக்கும் அதிகமாகவே பரவி வருகிறது.விலை […]
முதல் சபைச் சங்கக் கூட்டம். ஒன்பது உறுப்பினர்களும் ஆலயத்தில் ஒரு மாலையில் கூடினோம். சபைகுருவின் ஜெபத்துடன் கூட்டம் தொடங்கியது. தேர்ந்தெடுக்கப்பட ஒன்பது புதிய உறுப்பினர்கள் அனைவரும் வந்திருந்தனர். ஜெயராஜ் வயதில் மூத்தவர். அவர் முன்பிருந்த சபைத் சங்கத்தில் உறுப்பினராக இருந்தவர். மருத்துவமனையில் அறுவை சிகிச்சை வாட்டில் நிவாகப் பொறுப்பில் உள்ளவர். அவ்வளவு சுறுசுறுப்பு இல்லாதவர்.இருந்தாலும் பரவாயில்லை. அவரை செயலராக வைத்துக்கொண்டு நானே செயல்படலாம். […]