எஸ்ஸார்சி அம்மா தெவெசத்துக்கு நான் தானமா குடுத்தேன். அந்த ஒன்பது அஞ்சி வேட்டிய இடுப்புல சுத்திண்டு இதோ என் முன்னாடி அந்த பிராம்ணன் நிக்கறான். அவனோடவே நான் இந்த க்ஷணம் ஓடிப் போயிடறேன்னா என்னப்பா கூத்து இது? அவள் பதில் எதுவும் பேசவில்லை.அண்ணனும் அண்ணியும் திகைத்துப்போய் நின்றார்கள்.அவளை அந்த அண்ணன் ஈரோட்டுக்குப் பக்கத்தில் வரன் பார்த்து ,முறைப்படி நன்றாகதான் திருமணம் செய்து கொடுத்தான்.மாப்பிள்ளையும் ஒரு ஆடிட்டர்.அது இருக்கட்டும். ‘ தெவசம் நடத்திவைக்க வந்த அந்த புரோகிதர் போயாச்சா?’ […]
-எஸ்ஸார்சி சுனில் கில்நானி ஆங்கிலத்தில்l எழுதியது ‘The idea of India’ என்னும் அற்புதமான நூல். இதனை ‘இந்தியா என்கிற கருத்தாக்கம்’ என்கிற ஆகப்பொருத்தமான தலைப்போடு அழகு தமிழில் தந்துள்ளார் மொழிபெயர்ப்பாளர் அக்களூர் இரவி. பெருமைக்குரிய சென்னை சந்தியா பதிப்பகம் இதனை கொண்டு வந்திருக்கிறது. இப்படி அரிய நூல்களைஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு கொண்டு செல்லும் மொழிபெயர்ப்பாளர்களின் அணிவரிசையில் அக்களூர் இரவி குறிப்பிடப்படவேண்டியவர்.மூல மொழியிலுள்ள நூலின் விஷயங்களை மிகக்கவனமாக உள்வாங்குதல், அதனைத் தெளிவுற மொழி பெயர்க்கப்பட வேண்டிய புதிய தளத்திற்குக் […]
-எஸ்ஸார்சி கவியரசர் கண்ணதாசனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட கலியுகன் கோபியின் கவிதை நூல் ‘மனச்சிற்பி’. இங்கே எளிமை,தெளிவு,செறிவு இவைகளின் எழுத்து வெளிப்பாடாக மலர்ந்துள்ளன கவிமலர்கள்.கவிஞருக்கு வாழ்த்து சொல்லும் கலை மாமணி சுரேந்திரன் கவிஞரின் பொதுவுடைமை எண்ணங்களை அழகாகவே சுட்டியுள்ளார். ‘குடிசைக்குள் கஞ்சி கொதிக்க வேண்டும் குழந்தைகள் பசியாறக் குடிக்க வேண்டும்’ இப்படி கவிதை சொல்லும் கலியுகன் நம் நெஞ்சைத்தொட்டுவிடுகிறார். பேராசிரியர் ஹரணி யின் அணிந்துரை எழுத்துத்தளத்தில் கவிஞரின் நம்பிக்கையை பறைசாற்றுகிறது. எளிமையே கவிதையின் மேன்மை என்பதை அற்புதமாகக்குறிப்பிடும் ஹரணி ஓர் […]
-எஸ்ஸார்சி பாவண்ணன் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.அவைகளை ஒரு தொகுப்பாய் வாசிக்க அவரின் படைப்பு மனம் பற்றியஒரு புரிதல் கூடுதலாய்ச் சித்திக்கும்.ஆக அவரின் கவிதைகள் வேண்டும்.எத்தனை புத்தகக்காட்சிகள் தேடினாலும் பாவண்ணனின் கவிதைத்தொகுப்பு கிடைக்கவில்லை.ஒன்று கிடைத்தது ‘பச்சைக்கிளியே பறந்துவா’ அது அவர் சிறுவர்கட்கு எழுதிய கவிதைகள். என்னுடைய தேடுதல் நிறைவடையவில்லை அவரிடமே தொலைபேசியில் விசாரித்தேன்.’எனக்குத்தங்களின் கவிதைத்தொகுப்பு வேண்டும்’ என்றேன். ‘நகலெடுத்து அனுப்பட்டுமா’ என்றார்.நான் நேரில் வந்து பெற்றுக்கொள்கிறேன் அவருக்குப் பதில் சொன்னேன்.2017 ஜூன் முதல் வாரம். பெங்களூரு மாநகரின் […]
( மூத்த தமிழ் எழுத்தாளரும், தீபம் இலக்கிய குடும்பத்தைச் சார்ந்தவரும் குறு நாவல் பரிசுகளை கணையாழியில் மூன்றுமுறை தொடர்ந்து வென்றவரும், ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது -என்னும் புதினம் வழி இலக்கிய அரங்கில் தடம் பதித்தவரும்,ஞானரதத்தில் ஜெயகாந்தன், கணையாழி படைப்புக்களில் பல தொகுப்புக்கள் வெளியிட்டவரும்,திண்ணையில் தொடர்ந்து பல கதைகளை கட்டுரைகளை க்கொடுத்து நிறைவு செய்தவரும், அவர் வாழ்ந்த பகுதியில் எழுதத்தொடங்கிய எழுத்தாளர்களின் உறுதுணையும்,கவி பழமலயின் ஆசிரியரும், ஜெயகாந்தனின் இனிய நண்பரும் என் சகிருதயருமான வே.சபாநாயகம் 04.07.2016 அன்று விருத்தாசலம் […]
ரகுவீரர் எழுதிய ‘ஒரு கல் சிலையாகிறது’ கட்டுரை நூல் படித்து முடித்தேன். ஆன்மீக இதழில் தொடராக வந்த 110 கட்டுரைகள் நூலாக மலர்ந்து தெய்வீக மணம் வீசுகிறது.ஆன்மீகப்புரட்சியாளர் ராமானுஜரை நினைவு க்கு கொண்டுவரும் ஒரு சமயப்பணியை ரகுவீர் நிகழ்த்திவருவது தெரிய வருகிற்து.அவரின் அயரா வைணவ உழைப்பு போற்றுதலுக்குரியது கூடவே தமிழ் மொழி மீது அவர் கொண்ட காதல் வாசகனை நெகிழ வைக்கிறது. அட்டைப்பட ஓவியம் அஜந்தா குகை அழகு ராமர் சிலை. நூலுக்கு வலு சேர்க்கிறது. நாராயணியமும் […]
-எஸ்ஸார்சி பட்டுக்கோட்டையிலிருந்து என் ஆருயிர் நண்பர் தான் கடிதம் எழுதியிருந்தார். ‘பட்னாகர் கவிதைகள் கொஞ்சம் மொழிபெயர்த்துக்கொடுங்க இலக்கியச்சிறகு இதழ்ல வெளியிடலாம்னு இருக்கேன் ‘ . நண்பர் ராமலிங்கம் பட்டுக்கோட்டையிலே இருந்துகொண்டு சிற்றிதழ்கள் ஆங்கிலத்தில் ஒன்றும் தமிழில் ஒன்றும் நிறைவோடு கொண்டு வருகின்றார். தமிழ் இலக்கிய இதழ் ‘இலக்கியச்சிறகு’..ஆங்கிலம் ‘ஷைன்’. பட்னாகரின் ஆங்கிலக்கவிதைகள் சில ஷைன் இதழில் வெளிவரவே அந்த ப்பிரதியோடு இலக்கியச்சிறகு ஒன்றும் அவருக்கு அனுப்பி விட்டார்கள். தவறுதலாகத்தான் இது நிகழ்ந்துவிட்டிருக்கிறது. அனேகம் பேருக்கு இப்படி இரண்டு […]
-எஸ்ஸார்சி .அவனக்கு அலுவலத்துப்பணியில் சமுத்திரகுப்பம் மாற்றல்.முதுகுன்ற நகரத்திலிருந்து ஒரு மணி பேருந்தில் பயணிக்க அந்த சமுத்திரகுப்பம் போய்ச்சேரலாம்.முதுகுன்ற நகரில் அவன் ஒரு வீடு சொந்தமாகக்கட்டி அதனில்தானே குடியிருந்தான். பணி இடம் மாற்றல் ஆக அவன் முதுகுன்ற வீட்டை வாடகைக்கு விடவேண்டும்.வீடு வாடகைக்கு -அடைப்பில் ‘வெஜ்’ என வெள்ளைத்தாளில் ஸ்கெச் பேனா கொண்டு எழுதி காம்பவுண்ட் சுவரில் ஒட்டினான்.மறக்காமல் தன் தொலைபேசி எண்ணையும் அதனில் எழுதி வைத்துவிட்டுத்தான் சமுத்திரகுப்பம் சென்றான். அவன் அலுவலகத்தொலைபேசி எண்ணை எழுதி உடன் பி […]
சைவம் -எஸ்ஸார்சி அவன் தன் வீட்டை வாடகைக்கு விட்டிருந்தான்.தனக்கு அலுவலத்துப்பணியில் சமுத்திரகுப்பம் மாற்றல்.முதுகுன்ற நகரத்திலிருந்து ஒரு மணி பேருந்தில் பயணிக்க அந்த சமுத்திரகுப்பம் போய்ச்சேரலாம்.முதுகுன்ற நகரில் அவன் ஒரு வீடு சொந்தமாகக்கட்டி அதனில்தானே குடியிருந்தான். பணி இடம் மாற்றல் ஆக அவன் முதுகுன்ற வீட்டை வாடகைக்கு விடவேண்டும்.வீடு வாடகைக்கு என வெள்ளைத்தாளில் ஸ்கெச் பேனா கொண்டு எழுதி காம்பவுண்ட் சுவரில் ஒட்டினான்.மறக்காமல் தன் தொலைபேசி எண்ணையும் அதனில் எழுதி வைத்துவிட்டுத்தான் சமுத்திரகுப்பம் சென்றான். அவன் அலுவலகத்தொலைபேசி எண்ணைத்தான் […]
எஸ்ஸார்சி நேற்று எம் ஜி ஆர் நகர் மாரி அம்மன் கோவில் பூசாரி எங்கள் வீட்டிற்கு வந்தார்.எம் ஜி ஆர் நகர் என்றால் அது ஒன்றும் சென்னையிலுள்ள அண்ணா நகர் போன்றது இல்லை.முதுகுன்றமே ஒரு சிறு நகரம்தான்.இப்போதுதான் அது தன் கால்களை அகலமாக்கி ‘இதோபார் என்னை ‘என்கிறமாதிரி வளர்ந்துவிட்டிருக்கிறது. அந்த முதுகுன்றத்து கிழக்குப்பகுதியில்தான் இருக்கிறது இந்த எம் ஜி ஆர் நகர். ஒரு நூறு சலைத்தொழிலாளர்க்கு அன்றைய முதல்வர் இனாமாக மனை ப்பட்டாவழங்கியதுதான் இதன் ஆரம்ப வரலாறு. […]