Articles Posted by the Author:

 • குந்துமணியும் கறுப்புப் புள்ளியும்

  குந்துமணியும் கறுப்புப் புள்ளியும்

  தெலுங்கு மூலம் :சாரதா(Australia) தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மெல்போர்ன்லிருந்து அடிலைட்க்கு ஆபிஸ் வேலையாய் போகணும் என்று தெரிந்ததுமே குதித்து கும்மாளம் போடாத குறையாய் சந்தோஷப்பட்டான் ஸ்ரீதர். நிம்மதியாய் தங்கை சுநீதாவுடன் ஒரு மாதம் சேர்ந்து இருக்கலாம். சுநீதாவின் கணவன் மதுவும் ஸ்ரீதரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள் மட்டுமே அல்லாமல் நல்ல நண்பர்களும் கூட. திருமணம் ஆகி நாடு விட்டு நாடு வந்த பிறகு இப்படி ஒருத்தர் வீட்டில் ஒருத்தர் நிறைய நாட்கள் சேர்ந்து இருப்பது […]


 • மாமியார் வீடு

  (திருமதி ஒல்கா அவர்களின் “அத்தில்லு ” என்ற சிறுகதையை ‘மாமியார் வீடு” என்ற தலைப்பில் அனுப்பி உள்ளேன். ஒல்கா வின் புகைப்படத்தை இணைத்துள்ளேன். ‘தொடுவானம் தொட்டுவிடும் தூரம்’ என்ற தொடர் திண்ணையில் வெளிவந்துள்ளது, ஒல்காவின் படைப்புதான்.) தெலுங்கு மூலம் : ஓல்கா தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் மின் அஞ்சல் : tkgowri@gmail.com இப்போதுதான் செய்தி வந்தது, ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி அன்று அனுப்பி விடுவார்கள் என்று. சுதந்திர தினத்தன்று எனக்கு சுதந்திரம். சிறுவயதில் பார்த்த வண்ண வண்ண […]


 • நான் ‘அந்த நான்’ இல்லை

  நான் ‘அந்த நான்’ இல்லை

  தெலுங்கில் :B. ரவிகுமார் தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com இதோ பாருங்கள்! நீங்க இப்போது திடீரென்று எங்கள் வீட்டுக்குள் நுழைந்து, என்னை இந்த கோலத்தில் பார்த்தீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். கட்டிய ஆடையுடன் தலையில் குடத்தால் அப்படியே தண்ணீரை அபிஷேகம் செய்துக் கொண்டிருப்பதாக நினைப்பீர்கள். விஷயம் எதுவாக இருந்தால் என்ன? என்னைத் தவறாகப் புரிந்துக் கொண்டவர்களில் நீங்களும் ஒருத்தர் என்று கணக்கிட வேண்டியது தான். ஆனால் நான் ரொம்ப நேரமாய் வியர்வை ஆறாய் வழிய எதையோ […]


 • அவன் – அவள் – காலம்

  தெலுங்கில் :G.S. லக்ஷ்மி தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com நேரம் – இரவு பத்துமணி. இடம் – பிரைவேட் நர்சிங் ஹோமில் ஒரு ஸ்பெஷல் ரூம். அவன் : மருந்து மயக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த அவளைப் பார்க்கும் போது அவன் மனம் எங்கேயோ சஞ்சரிக்கத் தொடங்கியது. ஏதேதோ நினைவுகள், அனுபவங்கள். முப்பது வருட தாம்பத்திய வாழ்க்கை அவன் கண் முன்னால் நிழலாடியது. முப்பது வருடங்களுக்கு முன்னால் வாழ் நாள் முழுவதும் பத்திரமாக பார்த்துக் கொள்வான் என்ற […]


 • மறுபடியும்

  மறுபடியும்

  தெலுங்கில்: ஸ்ரீ வல்லி ராதிகா தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com அடிக்கடி கனவுலகில் நழுவிப் போவதற்கும், இதழ்கள் மீது இடை விடாமல் முறுவல் தவழ்வதற்கும், அரக்க பறக்க ஓடிக்கொண்டே, திடீரென்று ஏதோ நினைப்பில் அப்படியே நின்று விடுவதற்கும் சுனந்தாவின் வயது பதினாறு இல்லை, நாற்பத்தியாறு. தன்னுடைய நிலை ரொம்பவும் வெளிப்படையாக தென்படுகிறது என்றும், சந்தோஷத்தை தன்னால் மறைக்க முடியவில்லை என்றும் தெரிகிறது. அந்த சந்தோஷத்தைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைப் படுவார்களோ, கண்பட்டு விடுமோ என்றும் ஒரு […]


 • பங்கு

  தெலுங்கில் :பி.சத்யவதி தமிழாக்கம் :கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com வீட்டு வேலைகள் எல்லாம் எப்போதும்போல் இயந்திரகதியில், நேரத்திற்கு ஏற்ப, கணினியில் புரோக்ராம் செய்து வைத்தது போல் நடந்தேறிக் கொண்டிருந்தன ரொம்ப நாளாகவே. அதனால் யோசிப்பதற்கோ, புதிதாக எதையாவது செய்வதற்கோ சாரதாவுக்கு எதுவும் எஞ்சி இருக்காது. காலை எழுந்தது முதல் ஹார்மோனியம் வாசிப்பது போல் வரிசையாய் அந்தந்த கட்டையை அழுத்திக் கொண்டு போக வேண்டியதுதான். இன்று காலை அழுத்த வேண்டிய கடைசி கட்டை கணவனை, மகளை அவரவர்களின் பணிகளுக்கு அனுப்பி […]


 • பணம்

  பணம்

    தெலுங்கில் : ரங்கநாயகம்மா தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com கோடி! கோடி!! என்ன கோடி? பணம்! சொத்து ! ரூபாய்க்கள் ! கோடி ரூபாய் !! வரதட்சிணை !! பெரியபடிப்பு படித்த அந்த இளைஞன் கேட்டான் வரதட்சிணை ! கோடி ரூபாய் வரதட்சிணை !! வியப்பாக இல்லையா? “வியப்பு எதற்கு? கொடுப்பவர்கள் இருந்தால் கேட்பதற்கு என்ன வந்தது? ஒரு கோடி என்ன, இரண்டு கோடி கேட்கலாம்! நான்கு கோடிகள் கூட கேட்கலாம்! நூறு கோடியும் […]


 • புரட்சி

  (கௌரி கிருபானந்தன்) தெலுங்கு மூலம் : ஸ்ரீ வல்லி ராதிகா தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “இருந்தால் என்ன?” நான் அடிக்கடி பயன்படுத்தும் கேள்வி இது. இந்த வார்த்தைகளை நான் முதல் முதலாக எப்பொழுது உச்சரித்தேனோ, யாரிடம் எப்படி கற்றுக் கொண்டேனோ தெரியாது. ஆனால் எல்லோரையும் சிலையாக நிற்க வைக்கும் அந்தக் கேள்வியை பல சந்தர்ப்பங்களின் நான் பயன்படுத்தி இருக்கிறேன். எனக்கு நன்றாக நினைவு இருக்கும் சம்பவம், நான் நான்காவது வகுப்பில் படிக்கும் போது நடந்தது. […]


 • நன்றிக்கடன்

  நன்றிக்கடன்

  தெலுங்கு மூலம்: D.காமேஸ்வரி தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “என்னங்க! உங்க அம்மா பெட்டி படுக்கையை பேக் செய்துகிட்டு இருக்காங்க. எங்கேயாவது போகப்போவதாக உங்களிடம் சொன்னாங்களா?” சாவகாசமாக பேப்பர் பார்த்துக்கொண்டிருந்த செஷாத்ரியிடம் வந்த பத்மா பதற்றத்துடன் கேட்டாள். பேப்பரிலிருந்து தலையை உயர்த்திய சேஷாத்ரி “என்னிடம் ஒன்றும் சொல்லவில்லையே? எங்கே போகப்போகிறாளாம்? நீயே கேட்டுப் பாரேன்?” என்றான். ”எனகென்ன தெரியும்? அத்தை என்னிடம் ஒன்றுமே சொல்லவில்லை. நீங்களே கேளுங்கள்.” நெற்றியைச் சுளித்தாள் பத்மா. “என்ன நடந்தது? மறு […]