Articles Posted by the Author:

 • குரான் – ஞானப் புகழ்ச்சி மொழிபெயர்ப்பின் அரசியல்

  குரான் – ஞானப் புகழ்ச்சி மொழிபெயர்ப்பின் அரசியல்

  ஹெச்.ஜி.ரசூல்   ஞானப்புகழ்ச்சி இறைவேதத்திற்கு ஒப்பாகுமா என்பது குறித்த கட்டுரையின் பின்னூட்டங்கள் தொடர்பாகவும் அவற்றில் முன்வைக்கப்பட்ட நண்பர்கள் குளச்சல் மு.யூசுப்,சுவனப்பிரியன்,ஓ.நூருல் அமீன்,காவ்யா,தங்கமணியின் இப்பொருள்தொடர்பான விவாதங்களுக்கு மட்டும் எனது சில நிலைபாடுகளை முன்வைக்கவிரும்புகிறேன்.   1)இணையத்தில் நிகழ்த்தப்பட்ட விவாத தலைப்பின் முதன்மை பீர்முகமது அப்பாவின் ஞானப்புகழ்ச்சி பாடல்கள் இறைவேதத்திற்கு ஒப்பாகுமா என்பதாக இருந்தது. எனவேதான் பீர்முகமது அப்பாவின் ஞானப்புகழ்ச்சி பாடல்கள் இஸ்லாத்தைப் பேசுகிறா,இறைவேதத்தின் சாரம் அதில் உள்ளதா இல்லையா என்பது பற்றி விவாதம் தொடர நேரிட்டது.   2) இறைவேதத்தின் […]


 • ஞானப்புகழ்ச்சி இறைவேதத்திற்கு ஒப்பாகுமா

  ஞானப்புகழ்ச்சி இறைவேதத்திற்கு ஒப்பாகுமா

  ஹெச்.ஜி.ரசூல் ஞானப்புகழ்ச்சி இறைவேதத்திற்கு ஒப்பாகுமா.. என்பது குறித்த உரையாடலை கவனிக்க நேர்ந்தது.பீர்முகமது அப்பாவின் பாடல்களைப் புரிந்து கொள்ளுதல் தொடர்பாக சகோதரர்கள் சாகிர் அலி,பஷீர்,சாஜித் அகமது, ஹாமீம்முஸ்தபா முஜிபுர் ரகுமான் உள்ளிட்ட நண்பர்களும் எதிர்தரப்பில் சகோதரர் கெளஸ்முகமது,அஸ்லம்,ஷறபு உள்ளிட்ட நண்பர்களும் விவாதம் புரிகின்றனர். இதில் எனது சார்பாக எனக்குத் தென்பட்ட சில கருதுகோள்களை முன்வைக்கிறேன். 1) இறைவேதத்தின் சாரமான சூரத்துல் பாத்திஹாவை முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் தமிழில் ஞானப்புகழ்ச்சியின் துஆஇரப்பாக நெஞ்சுருகச் சொல்லித்தந்தது சூபிஞானி பீர்முகமது அப்பா […]


 • பிறைகாணல்

  பிறைகாணல்

  பிறையின் முகங் காண தினந்தோறும் ஆசை அது தேயும்போதும் வளரும் போதும் இரவின் தனிமையில் மேகங்கள் விலகியும் விலகாமலும் அதன் மெளனப்பார்வை என்னில் பதிவதாய் உணர்வேன். மழைநேரம் தூறலின் அசட்டுத்தனம் துயர்ப் படுத்தும்போது பார்க்கமுடிவதில்லை. மீறி மழையில் நனைந்து பார்த்தாலும் வானில் நெளியும் மின்னலைமட்டும் காணமுடிகிறது. இருள் சூழ்ந்து மழையைத்தவிர எதுவுமற்றிருக்கும் வானம்.


 • இதயத்தின் தோற்றம்

  இதயத்தின் தோற்றம்

  அழகற்ற்வை மெள்னங்கள் என்பதுணர்ந்து உதறி வீசி எறிகிறேன் அது பலி கொண்டவற்றில் என் நேசமும் ஒன்று. சிறுகச் சிறுக சேமித்த கனவுகளின் ஊர்கோலம்பற்றிய மயக்கங்களும் இப்போது இல்லை மழையைப் போலவோ காற்றைப் போலவோ விடுதலை பெற்று வாழ விருப்பம். கசக்கி வீசிய தொட்டு துரத்தும் ஞாபகங்கள் அவற்றில் தெரிகிறதே மங்கலாகிப் போன மக்கிப்போன சிதைவுற்றுப் போன என் இதயத்தின் தோற்றம்


 • வாப்பாவின் மடி

  வாப்பாவின் மடி

  ஹெச்.ஜி.ரசூல் எனக்கு தொப்புள் கொடியறுத்த அம்மச்சியைப் பார்த்ததில்லை … கர்ப்பப் பையிலிருந்து கிழித்தெடுக்கப்பட்டு பூமியின் முதற்காற்றை சுவாசித்தபோது என்காதுகளில் பாங்கு இகாமத் சொன்ன எலப்பையின் குரல் ஓர்மையில் இல்லை… சுட்டுவிரலால் சேனைதண்ணி தொட்டுவைத்தபோது அந்த முதல்ருசி எப்படி இருந்திருக்கும்… நோட்டுப் புத்தகங்களின் பக்கங்களில் பாதுகாப்போடு வைத்திருந்த மயிலிறகு இன்னமும் குட்டிப் போடவில்லை நாலெழுத்து படிக்கவும் நாலணாசம்பாதிக்கவும் சொல்லித்தந்த வாப்பா ஒரு துறவி போல உறவுகடந்து கடல்கடந்து கண்ணுக்கெட்டாத தூரத்தில் என்றேனும் ஒருநாள் வாப்பாவின் மடியில் தலைவைத்து ஓர் […]


 • இரவுதோறும் கரும்பாறை வளர்கிறது

  இரவுதோறும் கரும்பாறை வளர்கிறது

  ஹெச்.ஜி.ரசூல் ஒரு புல்லின் நுனி கரும்பாறையை சுமந்திருந்த்து சொட்டுச் சொட்டாய் உள்ளிறங்க வழியற்று அதில் விழுந்த மழைத் துளிகள் பெருநதியாகப் பாய்ந்தோடுகிறது ஆயுள் பூராவும் சேமித்த சூட்டின் தகிப்பு தன்னுணர்ச்சியை இழக்க விரும்பவில்லை. பகலுறக்கம் தீய்ந்து இரவுதோறும் கரும்பாறை வளர்வதை கண்ணாப்பா சொல்லியிருக்கிறார் கருகிவிடாது ஒற்றைப்புல் வேர்பிடித்திருக்க குறு குறுவென ஊதிப் பெருகிய கரும்பாறையைப் பார்க்க கூட்டம் அலைமோதியது. சாயங்காலமொன்றில் மகுடியெடுத்து பாம்புப் பிடாரன் ஊதிய இசை பட்டு தடுமாறத்துவங்கியது கரும் பாறை எத்தனை நாள் உள்ளிருப்பது […]


 • மூன்று தலைமுறை வயசின் உருவம்

  மூன்று தலைமுறை வயசின் உருவம்

  1)மூன்றுதலைமுறைவயசிருக்கும் இதன் பிரம்மாண்டமான உருவத்தை யாரும் கவனித்ததாய் இல்லை. எவருக்கும் தெரிந்ததுவுமில்லை இது முளைத்து வளர்ந்தவிதம்பற்றியும் வான் நோக்கி நிமிர்ந்தும் மண்ணுக்குள் வேர்பாய்ச்சி நிற்கும் வேப்பமரம்தான் என்றாலும் முன்காமிகளும் சொன்னதில்லை இத்தனை ஆண்டுகளாய் இது உதிர்க்கும் பச்சை இலைகளுக்கு புனிதம் சேர்ந்த வரலாறு குறித்தும் மூலிகை காற்றாய் சுவாசத்திற்கு இதமளிக்கும் இதன் அகவிலாசம் பற்றியும். 2)ஒவ்வொரு இலைகளும் தாழ்வாரங்களில் சமாதிகளின் பூக்களோடு பேசிக் கொண்டிருக்கும் ரகசியம் பிடிபடவில்லை. கசக்கும் வேப்பிலைகளை வாயில் போட்டால் இனித்துக் கிடக்கிறதென்ற இன்னொரு […]


 • ஒரு படைப்பாளியின்வலியை தன்வலியாய் உணர்ந்து எழுதிய எழுத்து

  ஒரு படைப்பாளியின்வலியை தன்வலியாய் உணர்ந்து எழுதிய எழுத்து

  ஹெச்.ஜி.ரசூல் காலச்சுவடு செப்டம்பர் 2011 இதழில் ‘தனிமனித உரிமையை நிலைநாட்டிய தீர்ப்பு’ என்னும் தலைப்பிலான களந்தை பீர்முகம்மதுவின் எழுத்துப் பதிவு மிகவும் நியாய பூர்வமாக அமைந்திருந்தது. ஒரு படைப்பாளியின் வலியைத் தனது வலியாக உணர்ந்து எழுதியதாக உணர்கிறேன். சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்குள் நிலவும் அதிகாரத்தின் வன்மத்தை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுவந்த காலச்சுவடுக்குப் பாதிக்கப்பட்டவன் என்ற நிலையிலிருந்து உள்ளபடியே நன்றி கூறிக்கொள்கிறேன். இப்பிரச்சினை குறித்து இன்னும் சில கூடுதலான தகவல்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். பத்மநாபபுரம் உரிமையியல் நீதிமன்றத் தீர்ப்புக்குப் […]


 • மிம்பர்படியில் தோழர்

  மிம்பர்படியில் தோழர்

  ஹெச்.ஜி.ரசூல் கட்சித்தலைவர்களும் தொண்டர்களும் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக் கூட்ட அரங்கில் ஸப்புகளில் வரிசையாய் அணிவகுக்க இருபத்துமூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோன ஹாமீம் ஆலிம்சா இமாமாக நின்று நேற்றைய தொழுகையை நடத்திக் கொண்டிருந்தார் அலைமோதிய மனம் பதைப்புக் கொள்ளத் துவங்கியபோது ஜும்மாமசூதியின் கடைசிவரிசையில் நானிருந்தேன் மிம்பர்படியில் கையிலொரு வாளோடு நூற்றுக்கணக்கில் குழுமியிருந்த தொழுகையாளிகளிடம் தோழர் நல்லக்கண்ணு மார்க்ஸிய வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்


 • பீமாதாயி

  பீமாதாயி

  என்னிடம் தொலைவிலிருந்து பேசிய குரல் ஆணா பெண்ணாவென தெரியவில்லை. என் கைவசமுள்ள ஓலைச்சுவடி ஒன்றை முன்னூறு வருடங்களாக தேடித் திரிந்ததாகவும் தற்போது அதன்விவரம் தெரியவந்ததாகவும் மிகவும் தணிந்தகுரலில் சொல்லி அதை கொடுத்துதவ வேண்டியது. அந்த ஓலைச் சுவடியில் வாழ்ந்து கொண்டிருந்த பீமாதாயிடமிருந்து தெரியவேண்டிய கதைகள் மிச்சமிருப்பதாகவும் என்னிடமிருந்து பீமாதாயை மீட்க உத்தேசித்தே இதை கேட்பதாகவும் சற்று சூடேறிய குரலில் திரும்பவும் சொன்னது அந்தகுரல். எனது பரண்களில் கேட்பாரற்று போட்டிருந்த அந்த ஓலைச் சுவடி கட்டுகளிலிருந்து அர்த்த ஜாமங்களில் […]