யாருமற்ற பெருவெளியில் சுயம்பாய் கிடந்தார் முனி. பக்கத்துல ஓடும் வெண்ணாத்தங்கரை . நீண்டுயர்ந்ந அரசமரம் காலதேவனின் சாட்சியாக. வரும்போகும் தலைமுறைக்கு குலதெய்வம் குடியிருந்த ஊர்க்கதைகள் ஏராளம். சாராயம்,சுருட்டு பொங்க சட்டி, பொரியும் தான் முனிக்கு முடிகொடுத்து ஊர் திரும்பும் ஆசாமிகள். மரத்தசுத்தி மாடுமேய்கும் பெரிசுகளுக்கு கண் எல்லாம் படையல் மேல்தான். சாராய பாட்டில் தேடி கிடாய் கறிக்கும் பருந்தாய் சுற்றும் பரிதாபமாய்! – ஜெயானந்தன்
தி.ஜா.வின் மனதிலே குடமுருட்டி ஆற்றங்கரை வாழை,பலா,மா தோட்டங்கள் சத்திரம், பிள்ளையார் கோவில். வலப்பக்கம் அக்ரஹாரம் இடப்பக்கம் வேளாளர் தெரு மேற்கே காவிரி கிழக்கே அரிசன தெரு இத்தனை அழகோடு கீழவிடயல் அவரோட மனதினிலே அழியாக்கோலங்கள். நதியோடு விளையாடி ராகங்கள் பலபாடி மோகமுள் படைத்துவிட்டார். காலமெனும் நதியினிலே காவியப்படகில் ஏற்றிவிட்டார். காதலையும், காமத்தையும் கணக்கோடு கலந்துவிட்டார். இனிவரும் தலைமுறைக்கும் மோகதீப தரிசனத்தை காலவெளியில் கலந்துவிட்டார். ஜெயானந்தன்.
ஜெயானந்தன். அவரவர் வீட்டை திறக்க அவரவர் சாவி வேண்டும். எவர் மனம் திறக்கும் எவர் மனம் மூடும் எவருக்கும் தெரியாது. சில முகங்களில் – துன்ப ரேகைகள் ஓடும். பல முகங்களில் – இன்ப தூண்கள் தெரியும். யாரோடும் வீதியில் நடக்கலாம். வீதியெங்கும் காலடிச் சுவடுகள் ரேகையில் எத்தனை வாழ்க்கை கனவுகள். பேசிக்கொண்டே செல்லும் வழியில் நடைப்பிணங்கள் ஏராளம். இன்பமும் துன்பமும் நாடகம்தானே இதில் நீயும் நானும் விதிவிலக்கல்ல……………………..!
ஜெயானந்தன். முப்பாட்டன் வீடு பாட்டனிடம் இல்லை. பாட்டன் வீடு தாத்தனிடம் இல்லை. தாத்தன் வீடு தந்தையிடம் இல்லை. தந்தை வீடு என்னிடம் இல்லை. என் வீடு உன்னிடம் இல்லை. உன் வீடு என்னிடம் இல்லை. உன் வீடு என் வீடு எவன் வீடு ! மலையெல்லாம் அவன் வீடு மனமெங்கும் அருள்வீடு. பிறவிதொறும் வீடுவீடாய்………, பிறவா வீடு வேண்டும். பிறப்பை அறுக்கும் பேரின்பேச் சுடரே ! பேரோளியே!!! ஜெயானந்தன்.
அந்த குழந்தை கையில் பையுடன் ஓடியாடி விளையாடியது. முற்றத்து தண்ணீரில் நிலவை பிடித்தது வானத்து நட்சத்திரங்களையும்தான் ! மேகத்தில் வெள்ளிமலையோ, பீமரதமோ எல்லாம் அந்த பைக்குகள் போட்டது. மீண்டும் சிரித்துக்கொண்டே முற்றத்தில் ஓடியது. அப்பா வாடிய முகத்துடன் திண்ணையில கொட்டாவிவிட்டார். நாளை விடியலுக்கு சட்டைப்பையில், பீடியுடன் சில்லறையை தேடினார்!. ஜெயானந்தன்.
ஜெயானந்தன் முன்பெல்லாம் சாப்பாட்டு நேரம் ஆனந்தமாய் இருந்தது. அம்மா ,அவித்தசோறு சட்டியை ஆவிபறக்க, பெரிய கூடத்தில் வாழைத்தண்டு சாம்பாரும், கத்திரிக்காய் கூட்டோடு கூப்பாடு போடுவாள். காக்கை கூட்டம்போல், நானும்,அண்ணாவும், அக்காவும் தம்பியுமாய், அத்தை பிள்ளைகளோடு, பதினான்கு உருப்படிகள், தட்டில்தாளமிட, பாட்டி அன்போடு பரிமாறுவாள். கடைக்குட்டி தம்பிக்கு, கதைசொல்லி, அன்பையும் பால்சோறு அன்னத்தை, ஆடிப்பாடி ஊட்டிடுவாள். இன்று, வயதான பருவத்தில், புதுமைப்பித்தன் துணையாக காலம் என்னை நகர்த்த, ஆர்டர் கொடுத்த, ஐந்து நிமிடத்தில், ஸ்வக்கி சோமட்டோ, டப்பாவில் பீட்சா […]
ஜெயானந்தன். அ.மங்கையின் புதிய நாடகப் படைப்பாக “ ஸ்தீரி பருவம், மலர்ந்துள்ளது. போரின் கொடூரத்தையும், பேரழிவையும் பெண்களின் பார்வையில் பார்க்கப் படுகின்றது. மகாபாரத்தின், ஸ்தீரி பருவத்தின் காட்சிகளை மேடையின் பின்புறத்தில் டிரஸ்கி மருதுவின் கைவண்ணத்தில் ஓவியங்களாக அமைத்து, நாடக நடிகர்கள் உடைகள் வெண்மையில் கொடுத்துள்ளனர். அமைதிக்கான நிறமாக வெண்மையே ஓளிரட்டும் என்ற எண்ணம் மேலோங்க வேண்டும் என்பதே , மங்கையின் எண்ணமாக தெரிகின்றது. மகாபாரதப்போர், இன்னும் முடியவில்லை. அது ஈழப்போராக, உக்ரைன்-ரஷ்யப் போராக, இஸ்ரேல்- காஸா போராக தொடர்கின்றது என்று சொல்லும், […]
_________________ எத்தனை நாள்தான் ஒரே மூஞ்சியை பார்ப்பது கண்ணாடியில். எத்தனை முறைதான்- தலை முடியை மாற்றி, மாற்றி, தாடிமீசையை மாற்றி, மாற்றி ஒரே மூஞ்சியை பார்ப்பது கண்ணாடியில். எத்தனை முறை பார்த்தாலும் அதே மூஞ்சி, அதே கண்ணாடிதான். எத்தனை முறை நடந்தாலும் அதேபாதை, அதே வாழ்க்கைதான்! ஜெயானந்தன்.
வானம்பாடி இயக்கியத்தின் மூலம், பிரபஞ்சன் , என்னும் இலக்கிய வானம்பாடி, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பறந்து, அதன் பயணத்தை முடித்துள்ளது .பிரபஞ்சன் , புதுமைப்பித்தனை பொய்யாக்கிவிட்டார். எழுத்தை நம்பி யாரும் வாழ்வை நடத்தமுடியாது என்ற நினைப்பை, அவர் கடந்து சென்றுவிட்டார், நமக்காக வாழ்ந்த நினைவாக,அவரது நிறைவான எழுத்து முழு நம்பிக்கையுடன் நம்மிடையே உலா வருகின்றது. புதுச்சேரி, பல சிறந்த படைப்பாளிகளை உருவாக்கியுள்ளது. பாரதி, தமிழ் நாட்டில் பிறந்து, புதுச்சேரியில், தஞ்சம் புகுந்து, அவரது […]
அலிசா அபீஸ். வாடகை வீட்டில் உனது கோட்டை கழட்டி துருபிடித்த ஸ்டாண்டில் தொங்கவிடு. அலுத்துப் போன காலனிகளை இங்கொன்றும் அங்கொன்றாய் வீசு. உடலை சாய்க்க மர நாற்காலியை தேடும் கண்களில் தெரிவது குவிந்து போன துணிகளின் கூட்டம். கவிதை எழுத எந்த வீட்டை தேட எல்லா வீடுகளிலும் குப்பைகள்தான் மிச்சம் ! தமிழில்;- ஜெயானந்தன்