இரா. ஜெயானந்தன். சாதிமத பேதங்கள் வேரோடு களைய மாமழையே வருக ! மனிதமன மாசுகள் முற்றிலும் அகல மாமழையே வருக ! ஏழை பணக்காரன் எண்ணங்கள் ஒழிய மாமழையே வருக ! இந்து முஸ்ஸீம் கிருத்துவம் இணய மாமழையே வருக ! இளைய நெஞ்சங்களின் இணப்பகம் அறிய மாமழையே வருக போலி அரசியல் முகமூடிகள் கிழிய மா மழையே வருக ! உண்மை அரசியல்தோன்றி ஊழ்கள் ஒழிய மா மழையே வருக ! மனிதம் என்றொரு மாமேரு […]
(`வெளிச்சம் படாத நிகழ்கலைப் படைப்பாளிகள்` தொகுப்புக்கு(அடையாளம் வெளியீடு) பீமா இலக்கிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.ராஜ பாளையத்தில் இயங்கும் பீமராஜா ஜானகிஅம்மாள் அறக்கட்டளை சார்பாக இந்த விருது வழங்கப்படுகிறது. ரூ.10000/- மதிப்புள்ள இந்த விருது கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.இந்த விருதை இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள நிகழ்கலைக் கலைஞர்களுக்கு முக்கியமாக அகாலத்தில் மறைந்த ஒப்பனைக் கலைஞர் வேலாயுதம் அவர்களுக்கு வெளி ரங்கராஜன் அர்ப்பணித்திருக்கிறார்.) வெளிச்சம் படாத நிகழ்கலைப் படைப்பாளிகள். ஆசிரியர்; வெளி ரங்கராஜன். நம்மோடு வாழ்ந்து, பல நிகழ்கலைப் படைப்பாளிகள், […]
ஜெயானந்தன். இந்திய நாட்டின் ” புது அவதாரமாக ” மோடியை ஏற்று, இந்திய மக்களில் 30% மக்கள், வாக்களித்து, தங்களின் வாழ்க்கையை அர்பணித்துள்ளனர். மீதம் 70% மக்கள், ஒருவித குழப்பதோடும்,பயத்தோடும் , எட்டி நின்று வேடிக்கை பார்க்கின்றனர். நமது புதிய பிரதமர், இந்த 70% சதவிகத மக்க்ளின், நம்பிக்கை சின்னமாக் மாற வேண்டும், அதற்கு , காவி மனது , மாற வேண்டும். டீக்கடைக்காரர்எனற முத்திரை, அவருக்கு, இந்த தேர்தலில், காங்கிரஸ் கொடுத்த கொடை.இது, இவருக்கு, கோடான்கோடி […]
ஜெயானந்தன். எல்லாமாய் நின்றேன் எனக்கு பசி கிடையாது எனக்கு ஆசை கிடையாது. மோகம் கிடையாது, காமம் கிடையாது. யாருமற்ற அநாதையாய் வானாந்தரத்தில் நின்றேன். மீண்டும் மீண்டும் சூரியனும், சந்திரனும் காற்றும் மழையும், புயழும், பூகம்முமாய் என்னை தீண்டிச் செல்லும். எல்லாமுமாய் நின்றேன் யாருமற்ற அநாதையாய் ..! – ஜெயானந்தன்.
ஜெயானந்தன். எத்தனென்று , பித்தனென்று, சித்தனென்று, யார் உளரோ ? – பூவுலகில், நித்தம் பிடிச்சோற்றை தின்பதற்கே நாயாய், பேயாய், நரியாய் திரிபவர்தான் நடுச்சபையில் நிற்பவரோ ! எள்ளாய், முள்ளாய் , எரிமலையாய் போனபின்பு திருநீராய் தேகமெங்கும் பூசி ஓதி தெய்வத்தை தேடுவதால் யாது பயன் ?
இரா.ஜெயானந்தன். இனிய நிலவே ! இன்று நீ, என் நிலா முற்றத்தில் மலர்ந்து விட்டாய் ! உன் வரவிற்காக காத்திருந்து – நான் மல்லிகை பந்தல் வளர்த்திருந்தேன். பூக்கள் மலர்ந்த, மணந்த போது உன்னை மணம் முடித்தேன்! அதோ பார் ! அந்த மொட்டுக்குள் எத்தனை வசந்தங்கள் ! – நீயோ உன் இதழ் மொட்டால் – என்னை உயிர்த்தெழ வைத்தாய் ! உன் சிரிப்பை பிரித்து – என் கவிதைக்குள் வைத்தேன் ! நீயோ ! […]
என்னை சுவாசி என்னை சுவாசி நான் தான் உன் மறுபாதி ! என்னை அணை என்னை அணை நான் தான் உன் வாழ்க்கை! வாலிபத்தை கரைத்து வானாந்தரத்தை தேடுகின்றாய்.! வற்றிய சமுத்திரத்தில் வழிதேடி அலைகின்றாய் ! மெளனத்தில் அமர்ந்து அகிலத்தை சுருக்கி- எதை தேடி அலைகின்றாய் எதிலும் நான் தான் ! உதிர விளையாட்டிற்கு உனக்கு தேவை – நான் தான் ! என்னை சுவாசி என்னை சுவாசி நான் தான் பெண் ! – ஜெயானந்தன்.
இரா ஜெயானந்தன் மன்னர் அச்சுதப்பா நாய்க்கர் வயிற்று வலியால் அவதிப்படும் செய்தி, தஞ்சை மாநாகரெங்கும் ஒரே செய்தியாகப் பேசப்பட்டது. மக்களும் துயரத்தில்தான் வாழ்ந்துக் கொண்டிருந்தனர். ராஜ வைத்தியர்கள், பல்வேறு மூலிகைச் சாறுகளால். தினமும் வெவ்வேறு வகையான வைத்தியங்களை செய்து வந்தனர். தஞ்சையின் அனைத்துக் கோவில்களில் இருந்தும், பிரசாதங்கள் வந்த வண்ணம் இருந்தன். முக்கியமாக பெரியக் கோவில் , புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் பிரசாதங்கள், மன்னனுக்கு அளிக்கப்பட்டது. அரசாங்க கோப்புகள் முடங்கி கிடந்தன. வேற்று நாட்டு […]
இரா. ஜெயானந்தன். கூரைவேய்ந்த பள்ளியைக் காணோம் குடுமி வைத்த வாத்தியைக் காணோம் உயர்ந்து வளர்ந்த மரங்களைக் காணோம் ஏறி விளையாடிய கிளைகளைக் காணோம். ஈமொய்த்த எலந்தை பழங்களைக் காணோம் தோல் சுருங்கியை பாட்டியைக் காணோம் டவுசரில் ஒட்டுப்போட்ட சுகுமாரானைக் காணோம் இங்கு படிந்த ஓட்டைப் பேனாக்களை யும் காணோம். கிட்டிபுல் விளையாடிய மைதானத்தைக் காணோம் கிளிக்கொண்டைப் போட்ட கிரிஜாவைக் காணோம் தேடி தேடி, ஓடி ஓடி பார்த்தேன் உன்னையும், என்னையும் காணோம்.
இன்று நாம் பல புரட்சிகளைக் கண்டுள்ளோம். விவசாயப் புரட்சி, விஞ்ஞான புரட்சி, தொழிற் புரட்சி, கடைசியில், கைக்குள் உலகையே கொண்டு வரும் கனணி புரட்சியிலும் புகுந்து விட்டோம். ஆனாலும், உறவு, பாசம், குடும்பம், கணவன் – மனைவி பந்தம்-பாசமெல்லாம் நம் மண்ணின் பெருமையென சொல்லிக்கொண்டுதான் திரிகின்றோம். ஆனால், இன்றைய இளம் தலைமுறையின் ஆண்- பெண் உறவு முறைகளில், மேலை நாட்டு கலாச்சார மோகம் கண்டுள்ளதாக தெரிகின்றது. இதுவரை, நாம் ஆண்- பெண் உடலுறவை, திருமணத்திற்கு பின் தான், […]