இரா.ஜெயானந்தன். இனிய நிலவே ! இன்று நீ, என் நிலா முற்றத்தில் மலர்ந்து விட்டாய் ! உன் வரவிற்காக காத்திருந்து – நான் மல்லிகை பந்தல் வளர்த்திருந்தேன். பூக்கள் மலர்ந்த, மணந்த போது உன்னை மணம் முடித்தேன்! அதோ பார் ! அந்த மொட்டுக்குள் எத்தனை வசந்தங்கள் ! – நீயோ உன் இதழ் மொட்டால் – என்னை உயிர்த்தெழ வைத்தாய் ! உன் சிரிப்பை பிரித்து – என் கவிதைக்குள் வைத்தேன் ! நீயோ ! […]
என்னை சுவாசி என்னை சுவாசி நான் தான் உன் மறுபாதி ! என்னை அணை என்னை அணை நான் தான் உன் வாழ்க்கை! வாலிபத்தை கரைத்து வானாந்தரத்தை தேடுகின்றாய்.! வற்றிய சமுத்திரத்தில் வழிதேடி அலைகின்றாய் ! மெளனத்தில் அமர்ந்து அகிலத்தை சுருக்கி- எதை தேடி அலைகின்றாய் எதிலும் நான் தான் ! உதிர விளையாட்டிற்கு உனக்கு தேவை – நான் தான் ! என்னை சுவாசி என்னை சுவாசி நான் தான் பெண் ! – ஜெயானந்தன்.
இரா ஜெயானந்தன் மன்னர் அச்சுதப்பா நாய்க்கர் வயிற்று வலியால் அவதிப்படும் செய்தி, தஞ்சை மாநாகரெங்கும் ஒரே செய்தியாகப் பேசப்பட்டது. மக்களும் துயரத்தில்தான் வாழ்ந்துக் கொண்டிருந்தனர். ராஜ வைத்தியர்கள், பல்வேறு மூலிகைச் சாறுகளால். தினமும் வெவ்வேறு வகையான வைத்தியங்களை செய்து வந்தனர். தஞ்சையின் அனைத்துக் கோவில்களில் இருந்தும், பிரசாதங்கள் வந்த வண்ணம் இருந்தன். முக்கியமாக பெரியக் கோவில் , புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் பிரசாதங்கள், மன்னனுக்கு அளிக்கப்பட்டது. அரசாங்க கோப்புகள் முடங்கி கிடந்தன. வேற்று நாட்டு […]
இரா. ஜெயானந்தன். கூரைவேய்ந்த பள்ளியைக் காணோம் குடுமி வைத்த வாத்தியைக் காணோம் உயர்ந்து வளர்ந்த மரங்களைக் காணோம் ஏறி விளையாடிய கிளைகளைக் காணோம். ஈமொய்த்த எலந்தை பழங்களைக் காணோம் தோல் சுருங்கியை பாட்டியைக் காணோம் டவுசரில் ஒட்டுப்போட்ட சுகுமாரானைக் காணோம் இங்கு படிந்த ஓட்டைப் பேனாக்களை யும் காணோம். கிட்டிபுல் விளையாடிய மைதானத்தைக் காணோம் கிளிக்கொண்டைப் போட்ட கிரிஜாவைக் காணோம் தேடி தேடி, ஓடி ஓடி பார்த்தேன் உன்னையும், என்னையும் காணோம்.
இன்று நாம் பல புரட்சிகளைக் கண்டுள்ளோம். விவசாயப் புரட்சி, விஞ்ஞான புரட்சி, தொழிற் புரட்சி, கடைசியில், கைக்குள் உலகையே கொண்டு வரும் கனணி புரட்சியிலும் புகுந்து விட்டோம். ஆனாலும், உறவு, பாசம், குடும்பம், கணவன் – மனைவி பந்தம்-பாசமெல்லாம் நம் மண்ணின் பெருமையென சொல்லிக்கொண்டுதான் திரிகின்றோம். ஆனால், இன்றைய இளம் தலைமுறையின் ஆண்- பெண் உறவு முறைகளில், மேலை நாட்டு கலாச்சார மோகம் கண்டுள்ளதாக தெரிகின்றது. இதுவரை, நாம் ஆண்- பெண் உடலுறவை, திருமணத்திற்கு பின் தான், […]
அசோக மித்ரனின், 82வது வயதில், அவர் பிறந்த தெலுங்கு பூமி,தனது என்டிஆர் இலக்கிய விருதை கொடுத்து கொளரவித்துள்ளது. அசோகமித்ரனை, நினைக்கும் போது, பழக இனிமையானவர், எளிமையானவர், எல்லாவற்றிக்கும் மேலாக, அவர் இன்றுவரை நல்ல மனிதவராகவே வாழ்ந்து வருகின்றார். ஆந்திர மண்ணில் விழுந்த விதை, வாழ்வில் பல இடர்பாடுகளை தாண்டி, சென்னைக்கு வந்தவர். எல்லோரையும் வாழ வைத்த சென்னை, அசோகமித்ரனையும், கைவிடவில்லை. இன்று, தழிழ் மண்ணையும்-தெலுங்கு தேசத்தையும் இலக்கிய மூலமாக இணைத்தவர். சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை […]
( ஆண்கள் படிக்க வேண்டிய கதை.) மாதவ் ராவ், சென்னைவாசியாக இருந்தாலும், தஞ்சாவூர் ஞாகபமாகவே இருப்பார். அவர், சக்கா நாய்க்கன் தெருவில் சுற்றியதும், திரு.வி.க. பள்ளியில் படித்ததையும், நீடா மங்கலத்தில், பெண் பார்த்து, ஜமுனா பாயை கட்டியதையும், பெண் வீட்டில், மாமியார் செய்து போட்ட* கோளா குழம்பைப் பற்றியும்தான் அவர் வேலை செய்யும் இடத்தில் பேசிக் கொண்டே யிருப்பார். அவரின் மகன், சுப்புராவ், பீஇ படித்துவிட்டு, தற்போது, ஒரு சாப்ட்வேர் வேலையாக இருப்பதிலும் அவருக்கு பெருமை. […]
ஆர்யா பட்டாவின், விதை இந்திய மண்ணில், கிமு 476ல் விழுந்தது. அவர், தனது 23 வயதில், ஆர்யபாட்டியம் எழுதினார். கணக்கின் சுவாசக்குழுக்குள் விரலைவிட்டு ஆட்டியவர். அல்ஜீப்ராவின் இதய ஒலியை கேட்டறிந்தவர். வான சாஸ்த்திரத்தின் இலக்கணத்தை வகுத்துக் கொடுத்தவர். பிரம்ம குப்தா, வான சாஸ்த்திரத்தின் நூலை எழுதி, ஆர்யபட்டாவின் அறிவு தளத்தில் புகுந்து, வானசாஸ்திரத்தை உலகிற்கு எடுத்து சொன்னவர். பாஸ்கர ஆச்சார்யா கிமு 1114 ல், இந்திய மண்ணில் பிறந்தவர்.இவர், ஆர்யபட்டாவின், விதிகளை கடைப்பிடித்து, பூஜ்ஜியத்திற்கு, விடைக்கண்டுப்பிடித்து, இந்தியாவின் பெருமையை, […]
அன்புள்ள ஆர்.கோபால், சமீபத்தில் வந்த, ஒரு சில மருத்துவ கட்டுரைகளில், மிகவும் கவனிக்கத்தக்கது உங்களதும். தாதவேஸ்கிக்கும், இது போன்ற கடவுளைக்கண்டேன் எனற உணர்வு வ்ந்ததாக, அவருடைய நண்பர்கள் எழுதியுள்ளனர். மனமும் அதன் தர்க்க ரீதியான சிந்தனைகளும், மூளையின் டெம்பொரல் லோப் சம்பந்தப்ப்ட்டது. இதே போல், கடவுள் சிந்தனையும்- மதரீதியான கோட்பாடுகளை ஏற்றுக் கொள்வதும், மூளையின், இந்தப்பகுதிதான் என்று, நரம்பியல் நிபுணர்கள் கூறுகின்றனர். *** note: Is it possible that Adam, in the Garden of […]
இந்த நிமிடம் நிஜம். அடுத்த நொடியைப் பற்றி எனக்கு தெரியாது. நான், சென்னையில் , ம்யிலையில் 2.30 மதியம்( 11.04.2012) சுனாமியின் அலைகளால், பீதி உணர்வு ஏற்பட்டு, ஆபிஸ் விட்டு, வெளியே ஓடிவர, எனக்கு முன், பலர், அதே பீதியில் படியிறங்கி, ஓடிக்கொண்டிருந்தனர். மதியம் , டீக்காரனையும் காணவில்லை. ஏதோ கடைசியாக, பால் குடித்துவிட்டு, ஒரே கும்பலாக சாகலாம் என்ற எண்ணம் வேறு ஓடிக்கொண்டிருந்தது. மேனஜருக்கு, முடிக்க வேண்டிய பைலைப்பற்றி கேட்டார்.ஒரே எரிச்சலாக வந்தது. சுனாமில் செத்தால், […]