இந்த நேரத்தில் ஏமப் பெருந்துயில் மண்டபத்தின் எட்டாவது படுக்கையில், என்றால் விருந்தினர் பேழையில் மிக்க மரியாதைக்கும் அன்புக்கும் உரிய ஒருவர் வந்திருக்கிறார். தேளரசு செய்யும் உன்னதமான 50வது நூற்றாண்டில்லை. அதற்கு மிகப் பிந்தைய, மூன்றாம் நூற்றாண்டு மனிதர். கவிஞர் அவர். மருத்துவர். மருத்துவர் நீலனார் என்னும் கவிஞர். ஆயுள் நீடிக்க அவர் காலத்துக்கும் முற்பட்ட ஓலைச்சுவடியில் பதிந்து வைத்த அறிவைக் கெல்லி எடுத்துக் கொண்டு வந்தவர். சுவடி சொற்படி மூலிகைகளைத் தேடித் தெளிவுற்று இனம் […]
நீலன் வைத்தியரின் உடல் காலப் படகில் நாற்பத்தேழு நூற்றாண்டுகள் கடந்து போவதை மிகுந்த சிரமத்தின் பேரில் ஏற்று ஐம்பதாம் நூற்றாண்டு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. நுன்துகள் <-> முழுத்திரள் இயந்திரம் மூலம் ஆப்பிள் பழங்களின் நுண்துகள்கள் பிரபஞ்சத்தில் எங்கோ இருந்து வரவழைக்கப்பட்டு, அவை முழுப் பெருந் திரளாக்கப்பட, ஆப்பிள்களாயின. சுவை இல்லாத அந்த ஆப்பிள்களை பேனாக்கத்தி கொண்டு கர்ப்பூரமய்யன் பவ்யத்தோடு நறுக்கி குயிலி கொடுத்த ஒளிரும் வெள்ளித் தட்டில் நிரப்பி நீலன் வைத்தியர் முன் வைத்தான். […]
’உங்கள் காலப்படகில் ஏற்பட்ட பழுது நீக்குதல் இதுவரை எண்பது விழுக்காடு முடிந்துள்ளது. செலவான பொதுக் காலம் நான்கு மணி நேரம். இன்னும் நாற்பத்தைந்து நிமிடங்களில் பணி முழுக்க நிறைவேறும். இனி அனுப்பப் போகும் வருடம் மாதம் நாள் மணி நிமிடம் வினாடிக்கு உங்கள் கடியாரங்கள் மற்றும் கணினிகளில் காலத்தை நகல் செய்து கொள்வது அவசியம்’. படகின் சுவர் அதிர்ந்து தகவல் உரைத்து ஓய்ந்தது. ’என் கணக்குப்படி ஆறு தனித்தனி நாட்கள் பழுது திருத்தச் செலவாகி உள்ளன. […]
இரண்டாம் நாள் மாநாடு. ராத்திரி எட்டு மணிக்கு பட்டப்பாவின் கிருஷ்ணலீலா நாடகம். நாடகத்துக்கு முன் அரைமணி நேரம் போல் பூரணி கச்சேரி என்று ஊர் எல்லாம் தமுக்கு அடித்து விளம்பரம். பூரணியைத் தெரியாதவர்கள் கூட யாரது என்று ஆர்வத்தோடு விசாரிக்கிற அளவு பிரபலம் நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டு போவதை கர்ப்பூரமய்யன் கவனிக்கத் தவறவில்லை. வெள்ளிக்கிழமை ஒரு பிரார்த்தனைப் பாட்டு. ரெண்டு பாரதியார் பாட்டு. ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு மணி நேரக் கச்சேரி என்று பெரிய […]
மதுரைப் பட்டணம் களைகட்டியிருந்தது. வழக்கமாகவே இருபத்து மணி நேரமும் கோவிலுக்கு தரிசனம் செய்யத் தேசம் முழுவதிலிருந்தும் வந்திருக்கும் யாத்ரீகர்கள் ராத்திரி ரெண்டு மணிக்கு மதுரை மண்ணில் கால் பதித்தாலும், அடுத்த பத்தாவது நிமிடம் கோவிலுக்குப் போகவும் அப்புறம் பலகாரம் பண்ணவும் ஏகப்பட்ட ஆர்வம் காட்டுவார்கள். ராத்திரி ஒரு மணிக்கு இட்டலி அவித்து விற்கிற தெருக்கடைகளை வேறு எங்கும் பார்க்கமுடியாது. அப்படியான இட்டலிக்கடையில் ஓரமாக மரமுக்காலி போட்டு ஒரு பெண் உட்கார்ந்திருக்கிறாள். சுடச்சுட இட்டலியும் கூடக் கருவாட்டுக் […]
நாவல் தினை அத்தியாயம் இருபத்தொன்று காலப்படகு காலத்தில் முன்னும் பின்னும் பத்து நாள் போகுமளவு பழுது திருத்தியிருந்தது. முழுக்க முன்னே, பின்னே நூற்றாண்டுகள் போய்வர இன்னும் நிறையச் செய்ய வேண்டியது உண்டு. வேறு கால ஓடத்தை அனுப்பி வைத்து நம்மை இந்த இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்து மீட்டுப் போனால் என்ன? வானம்பாடி குயிலியைக் கேட்டாள். செய்யலாம் தான். ஆனால் வருஷம் – மாதம் – வாரம் –நாள் –மணி-நிமிடம் […]
கபிதாள். கர்ப்பூரய்யனின் இல்லத்தி பெயர் அது. கபிதா என்று பகு பிரியத்தோடு கர்ப்பூரய்யன் கூப்பிடுவான். கவிதா என்ற பெயரை வங்காளி உச்சரிப்பில் கொபிதா என அழைக்க ஆசை அவனுக்கு. கொபிதாளே! பௌர்ணமி, அமாவாசை ராத்திரிகளில் எல்லாம் சேர்ந்து வந்தால் இரண்டு பேரும் ராத்திரி தந்த சுத்தி செய்து, குளித்து வாசனை திரவியங்களை தாராளமாக உடம்பில் வாரியெடுத்துப் பூசி மெல்லிய கருத்த ஆடை தரித்து கதவடைத்துக் கட்டிலுக்கு பரஸ்பர அணைப்பில் விரைவார்கள். அது இரண்டு வருஷத்துக்கு முன். […]
* எங்கே வந்திருக்கிறோம் என்று புரியவில்லை. இருட்டு மூடியிருந்தாலும் பகலா இரவா என்ற அடுத்த கேள்விக்கும் குயிலியிடம் பதில் இல்லை. ஒரு சௌகரியத்துக்காகக் கற்பித்துக்கொண்ட காலக் கணக்கு எங்கோ நின்று இயக்கம் நிலைத்து விட்டது. இறங்க வேண்டாம் காலப் படகு பழுது நோக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று சுவர் சற்று வெளிச்சத்தோடு அறிவித்து அதே தகவலை இயந்திரக் குரலில் சகஜமான குரலில் பரத்துகின்றது. இருட்டில் மருத்துவர் நீலர் ஏ பெண்களா என்னை விட்டுவிடுங்கள், நான் போகிறேன் என்று […]
வழுக்குப் பாறைக் குகைகள் முன்னே இந்தப் பெண்கள் நின்றபோது மழை அடித்துப் பெய்து கொண்டிருந்தது. வெள்ளமெனப் பெருகிய மழைநீர் குகையின் வாயிலில் பெரிய பாறையை உருட்டிப் போய் அடைத்திருந்தது. குகைத் தொகுப்பில் மழை நீர் புகுந்து தேங்கி நிற்பது போல சுற்று வட்டார கிராமங்களுக்கு தொல்லை உண்டு பண்ணும் சங்கதி வேறேதுமிலலை. நீர்க் கசிவில் இழைந்து வரும் விஷப் பிராணிகள் வீடுகளுக்குள் புகுந்து கடித்தும் கொடுக்கு கொண்டு கொட்டியும் துன்பம் தரும். தேள்களை இழிந்த விஷப் […]
ஏமப் பெருந்துயில் மையத்தில் மொத்தம் எட்டு பேழைகள் மின்சாரக் குளிரை உயிர்த் தேனாகக் கொண்டு கிட்டத்தட்ட இறப்பு நீக்கி உறைந்து கிடந்தன. எட்டில் ஒன்று மட்டும் பாதி தேளுடல் கொண்ட மாற்றுடல் பெண். இடுப்புக்கு மேல் மனுஷி உடல் வனப்பாக மலர்ந்திருந்தது. கீழே சிவப்பு உக்ரமாக உயிர் பறிக்கும் செந்தேளுடலோடு கால்கள் சிறு மயிர் பூத்து மூடித் தளர்ந்து கிடந்தன. கண்ணாடியும் தேறலியமுமாக*** நீண்டிருந்த பெட்டிக்குள் தேள்ப்பெண் உடலின் உறுப்புகள் ஓய்வெடுத்தபடி அவசியமான அளவு மட்டும் இயங்கின. […]