author

மயிலிறகு…!

This entry is part 18 of 33 in the series 6 அக்டோபர் 2013

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி பத்திரமாக வைத்துக்கொள்ள மயில் இறகின் ஒரு இழை இருந்தது என்னிடத்தில் நீளமான இழையைச் சரிபாதியாய்க் கிள்ளி ஒன்றை என் சிநேகிதி கொடுத்தது.புத்தகத்தின் நடுவிலே வைத்து பென்சிலை திருவின தூளை அதற்கு உணவாக கொடுத்து நாளையோ நாளை மறுநாளோ குட்டி போடும் என்று தவிப்போடு காத்திருந்த நாட்கள் !புத்தகம் திறக்கப்படும் ஒவ்வொரு நாளும் ஒரு குட்டி மயிலிறகைத் தேடும் மனம் ! வருடப்படும் நட்புணர்வில் நட்பை தேடுகிறது கடந்து போன நிகழ்வின் நினைவுத் துளிகளில்என்றோ […]

பொய் சொல்லும் இதயம்

This entry is part 17 of 33 in the series 6 அக்டோபர் 2013

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு     ஒருபோலி முகத்திற்குள் கண்ணியமாக ஒளிந்துக்கொண்ட போது எதிர்நிற்கும் உயிரானவனின் விழிகளுக்கு முகமூடிக்குள் நட்பின் சிநேகிதி என்பது தெரியாம லேயே போனது விளையாடுபவளின் நட்பை உணராமல் எதிராளியை போன்று குத்தப்படும் வார்த்தைகளை வீசி நிராகரிப்பின் உச்சத்தை வானத்தில் எறிந்து போகிறான் ! நிராகரிப்பிலும் நட்பின் கண்ணியத்தை உணர்ந்த மனம் வலிகளை மறைத்து வலம் வருகிறது முகமூடிக்குள் ஒளிந்த இதயம் வலிக்க வில்லை என்று பொய் சொல்லி சிரிக்கிறது ! +++++++++++++++++

புத்தா ! என்னோடு வாசம் செய்.

This entry is part 26 of 27 in the series 29 செப்டம்பர் 2013

    ஜி. ஜே. தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு. புத்தா…! சில காலம் என்​ ​ ​ இதயக் கோவிலில் வாசம் செய் உன் மன அடையாளங்களைப் பெறும் மட்டும் ​.​ வெளிப்படும் கோபத்தில் – பிறர் மாற்றத்தை உறுதி செய்யட்டும் அல்லவென்றால் மன இயல்பங்கு வெளிப்படட்டும் அதுவரையில் இதயக் கோவிலில் குடிகொள். கோபப் பெருந்தீயில் – பிறர் நம்பிக்கை கொழுந்து கருகாமல் பார்த்துக்கொள் ​.​ உன்னை போல் சாந்தமுடையவள் அல்ல பார்வைத் தணலில்  – பிறர் பொசுங்காமல் பார்த்துக்கொள் பார்வையில் கனிவில்லை. […]