உலகத்தின் உயிர்ப்புக்களில் எழுப்பப் பட்டு விடுகின்ற போலிகளுக்கு நிஜங்கள் தோற்றுப் போகும் மனங்களெல்லாம் நிச்சயம் பிணம்தான். புத்தி மந்தமாகிப் போய் சோகமே உருவாகி எதுமேயின்றி வெறுமைக்குள் வறுமைப் படுத்தப் பட்டு கல்வியெல்லாம் அகற்றப்படும் அநத நாள் வருமே அது பற்றியதான பயம் எனக்கிருக்கிறது. “கொலைகள் மலிந்த காலம் வரும்” அப்போது இவ்வுலகம் மாறும். வாழ்வியலின் பிணைப்புக்குள் உருட்டப் பட்டு சின்னக் கைகளுக்குள் சிக்கி விடுகின்ற பொழுதுகள் பற்றியதான அச்சம் என்னை மேலும் அச்சப்படுத்துகிறது. அந்த நாள் வருடம் […]
கிண்ணியா இஜாஸ் குருதி தோய்ந்த முகத்துடன் நாளைய நகர்வுக்கான தடம் பதித்தல் பற்றி சிந்திக்கையிலும் நேற்றைய நினைவுகள்தான் என் ஈரமாகிப் போன மனதை முத்தமிடுகின்றன. பிஞ்சு மனதில் விதைக்கப்பட்ட நஞ்சுகள் கொஞ்சம் கொஞ்சமாய் பெருப்பிக்கப்பட்டு இன்று காற்றுடைந்த பலூனாய்ப் பரவிப் போய்க் கிடக்கிறது. எதுமே செய்ய இயலாது போகையிலும் உண்மையின் உறைவிடம் இன்றும் அநாதரவற்ற நிலையில் இருக்கையிலும் அடிமைப் படுத்தப்பட்ட வாழ்வுக்கும் மீழ்தழின்றி தவிக்கும் பொழுதுகளிலும் மெழுகு பூசப்பட்ட வாழ்வுக்கான போர்கைள் கைகளில் சிக்கிக் கொள்ள எத்தனிக்கையிலும் […]