author

பெருந்தொற்றின் காலத்தில்

This entry is part 18 of 21 in the series 2 ஆகஸ்ட் 2020

கு.அழகர்சாமி (1) ஊரடங்கி நடமாட்டமில்லாமல் வீதி- இருபுற வீடுகளிடையே திடநதியாய் ஓடி சுவடுகள் பதியாது விலாசமிழந்து நிசப்தம் சப்திக்க நடக்க நீட்டித் தலைக்கு வெளியை வைத்து உறங்கி- (2) நாளும் நடந்து- நன்கு தெரியும் என்னை அதற்கு – ஆனால் தெரியாதது போல் கடக்கிறது  என்னை வெறிச்சோடிய வீதி (3) “வெளியே” நடை செல்ல முடியாமல்- ஒற்றைத் தென்னை உரைக்கும்: ” நிற்கிற அதே இடத்திலேயே நட என்னைப் போல்- ‘வெளியே’ உன்னைச் சுற்றி-” (4) தனித்து- […]

செலேடார் ஆற்றின் சதுப்புநில யட்சிகள் – இரண்டாம் பாகம்

This entry is part 4 of 20 in the series 2 பெப்ருவரி 2020

சிறுகதை – அழகர்சாமி சக்திவேல் கி.பி 1896, மார்ச் 16 அந்த யட்சி, திரும்பி என்னைப் பார்த்தாள். ஆகா..என்னவொரு சிருங்காரப் பார்வை! “மன்னிக்கவும்” என்று நான் சொல்லவந்த ஒற்றை வார்த்தை, அப்படியே, என் நாக்கிலேயே நின்று போனது. அவள்தான் பேசினாள். “நீங்கள்தானே, இந்த பண்டுன் கவிதைக்கு, சற்றுமுன் இசை வாசித்தது?” அவள் குரலும் இசைபாடியது. சற்றே காமத்தில் தடுமாறியிருந்த எனது குரலை, நான் இப்போது சீராக்கிக்கொண்டேன். “ஆம். ஆனால், நான் வாசித்ததோ, தொலைதூரத்தில் இருந்து. அப்படியிருக்க, அது […]

குழந்தைகளும் மீன்களும்

This entry is part 4 of 11 in the series 26 ஜனவரி 2020

கு. அழகர்சாமி (1) கண்ணாடித் தொட்டிக்குள் நீரில் கலர் கலராய் நீந்தும் மீன்கள் கண்டதும் கல கலவென்று குதித்துத் துள்ளும் நிலம் துள்ள– குட்டிக் குட்டி மீன்கள்- குழந்தைகள்! (2) தூண்டிலில் பிடிபட்ட மீன் துள்ளி விழும் தரையில். துடி துடிக்கும்; துவளும். மெல்ல அடங்கும். மெதுவாய்க் குழந்தை தொடும்- மூடிய விழிகள் திறந்து- தரை மீது கடைசியாய்த் துள்ளி மலங்க நோக்கும் குழந்தையின் விழிக் கடலில் கடைசியாய் நீந்தும் மீன்.

சிலந்தி வலை

This entry is part 17 of 19 in the series 5 ஜூலை 2015

’என் வீடு’. ’உன் வீடு போல் என் வீடு இது. ’என் வீடு கல் வீடு’ ‘என் வீடு நூல் வீடு, அதனாலென்ன?’ என் வீடு ‘பெரிய’ வீடு என் வீடு ஓலை வீடாய்க் கூட இல்லாத ஏழை வீடு தான், என்ன செய்ய? ‘வெளியே போ’ ஏன்? உன் வீடு பக்கத்தில் இருப்பது அழகாக இல்லை. உன் வீட்டைக் காட்டி பயமுறுத்துவது நன்றாக இல்லை. ‘நான் உழைத்துக் கட்டிய வீடு இது ’. ‘நான் உழைத்தும் […]

என் பெயர் அழகர்சாமி

This entry is part 21 of 24 in the series 7 ஜூன் 2015

அறுபதாண்டுகள் பழகிய பின் என் பெயர் ’அழகர்சாமி’ என்னை இறுக்குவது போலிருக்கும்.. எப்படி பிறர் இந்தப் பெயரைக் கூப்பிட்ட போதெல்லாம் ஒத்துழைத்துத் திரும்பியிருக்கிறேன். எத்தனையோ லெளகீக விஷயங்களுக்கு இந்தப் பெயர் உதவிக்கு வந்திருக்கிறது. அப்பா வைத்த பெயரென்று அப்பாவின் மேல் என் மரியாதைக்கு சாட்சியாக இருந்திருக்கிறது. (ஏன் அம்மா வைத்த பெயரில்லையென்று கேட்க வேண்டாம்) திரும்பத் திரும்ப எழுதிய வார்த்தைகளில் என் பெயர் தான் நான் அதிகம் எழுதிய வார்த்தையென்பதலிருந்து அதன் மேல் என் பிரியம் தெரியும். […]

கடந்து செல்லும் பெண்

This entry is part 18 of 25 in the series 17 மே 2015

    நீ மெதுவாய் நடந்து வர நேரமும் பொழுதும் இருக்கிறது.   அதற்குள் ஒன்றும் நடந்து விட முடியாதென்று உறுதியாயிருக்கிறாய்.   நீ தனியாக நடந்து வருகிறாய் என்பதால் பொறுப்பாக இருக்க வேண்டியதை உணர்த்துகிறாய்.   உன் வனப்பில் இருக்கும் கண்டிப்பில் யாரும் உன்னை பலவந்தப்படுத்தி விட முடியாது.   யார் மேலான அவநம்பிக்கையிலும் அதைரியத்திலும் உன் நம்பிக்கையையும் தைரியத்தையும் நீ அமைத்துக் கொள்ளவில்லை என்பது தெரியும்.   காதலை வெளிப்படுத்துவது பலவீனமில்லையென்பதில் நீ யதார்த்ததை […]

பறவை ஒலித்தலின் அர்த்தங்கள்

This entry is part 9 of 26 in the series 10 மே 2015

ஒரு பறவையின் ஒலித்தல் எனக்குப் பல விதங்களில் அர்த்தமாகிறது. பறக்கும் திசையைப் பறக்கையிலே தீர்மானிக்கும் அதன் பறத்தலைப் போல் எதிர்பாராது ஒலித்தலில் அதன் பரிமாணம் விரிகிறது. ஆற்றாமையாயும், ஆனந்தமாயும், துக்கமாயும், ஏமாற்றமாயும் எத்தனையோ அர்த்தங்களில் என் நிலைக்கேற்பவும் அர்த்தமாகிறது. ‘க்கீ க்கீ க்க்கீ க்க்கீ க்க்க்கீ…….’என்று துரித கதியில் ஒலிக்குங் கால் காலம் கடந்து கொண்டிருக்கிறது என்று எச்சரிக்கிறது. விட்டு விட்டு ஒலிக்கும் அது ஒலிக்காத இடை வெளிகளில் நான் கவனிக்கத் தவறி நழுவிய காலத்தையும் குறிக்கிறது. […]

றெக்கைகள் கிழிந்தவன்

This entry is part 14 of 32 in the series 29 மார்ச் 2015

வழி நெடுக உற்ற பெருந்துணை போல் அடக்கத்துடன் கூட வரும் அடுக்கு மலைத் தொடர் விழி நெடுகத் தொடர்ந்தாலும் மாறி மாறித் தோற்றம் மாய்மாலம் செய்யும் மேகக் கூட்டம் புழுதி படிந்து பரட்டைத் தலை விரிய ஏனென்று எப்பவும் கேள்வி கேட்கும் ’ஒத்தப்’ பனை புறப்பட்டுச் செல்ல ஐயனாரை ஏற்றிக் கொண்டு எந்தச் சமயத்திலும் கம்பீரமாய்க் காத்திருக்கும் கல் குதிரை என்றோ தண்ணீர் கரை புரண்டோடிய காலம் எண்ணி எண்ணி மனம் திரைத்து மணல் திரளாகிய வறண்டாறு […]

நினைவுகளைக் கூட்டுவது

This entry is part 11 of 26 in the series 22 பெப்ருவரி 2015

    காலம் தன்னிடம் மண்டியிட்டு அகாலமாய் இறுகியது போல் முகம் கொண்டு கைகளில் குச்சியில் கட்டிய துடைப்பத்தை ஏந்தி, அணி வகுத்து நிற்கும் மரங்களிடம் முன் பின் சொல்லாமல் உதிரும் சருகு மேல் சருகு சேர்ந்த சருகுக் குவியலின் இரகசியத்தைக் கலைத்துப் பார்த்து விட்டு மறுபடியும் குவித்து வைப்பது போல் சருகுகளைக் கூட்டிச் சேர்க்கிறானே முதியவன் அவனைப் பார்.   தன் முகச் சுருக்கங்களில் காலம் தன் மடிப்புக்களைச் சேர்க்க, விழிகளின் தீட்சண்யத்தில் சூரிய ரேகைகளைச் […]

மழையின் சித்தம்

This entry is part 14 of 17 in the series 1 பெப்ருவரி 2015

  மழையின் நீர்க் கால்கள் நிலத்தில் தொடும்.   மழை வலுத்தாலும் வலுக்கலாம்.   பிசு பிசுத்தாலும் பிசு பிசுக்கலாம்.   அது அதன் இஷ்டம்.   வலுத்தாலும் வலுக்கட்டாயமில்லை.   நீ நனையலாம்.   நனையாமலும் இருக்கலாம்.   உனக்கென்ன கவலை?   உனக்குப் பதில் நனைய உன் வீடிருக்கும்.   இல்லையானால் ஒதுங்க ஒரு கூரையிருக்கும்.   ஒரு மரத்தடியாவது இருக்கும்.   ஓடிப் போக முடியாமல் ஒற்றைக் காலில் மரம் தான் நனையும். […]