பெஷாவர் (1) எங்கிருந்தாலும் குழந்தைகள் உயிர் நிலவுகள். நிலவுகளை நெற்றிப் பொட்டில் சுட்டார்கள். நெஞ்சில் இருள். (2) குழந்தைகளுக்கு என்ன தெரியும்? பட்டாம் பூச்சிகள் தெரியும். ஓடியாடி விளையாடத் தெரியும். பயங்கரவாதிகளையும் மனிதர்கள் என்று தான் தெரியும். எப்படி மனம் வந்தது சுட? (3) வகுப்பறைகளில் வார்த்தை கற்கும் குழந்தைகள் சுடப்பட்டார்கள். […]
(1) ஒரு விநோதமான இரவும் அதன் பின்னும் ஒரு விநோதமான இரவு. முதல் யாமம். யாரோ கைகளாலல்ல ஆனால் கதவைத் தட்டுவது போலிருக்கும். இந்த வேளையில் இப்படி யாரென்று கதவைத் திறக்கவில்லை. நடு யாமம். யாரோ கைகளாலல்ல ஆனால் கதவைத் தட்டுவது போலிருக்கும் மறுபடியும். இந்த வேளையில் இப்படி யாரென்று கதவைத் திறக்கவில்லை. கடைசி யாமம். யாரோ கைகளாலல்ல ஆனால் கதவைத் தட்டுவது போலிருக்கும் மறுபடியும் மறுபடியும். இந்த வேளையில் இப்படி யாரென்று கதவைத் திறக்கவில்லை. விடியலில் […]
(1) பூக்காரி பந்து பந்தாய் மல்லிகைப் பூவைச் சுற்றிப் பிரம்புக் கூடையில் அடுக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு லிஃப்ட் இல்லாத அடுக்ககத்தின் உச்சி மாடி வீட்டுக்குத் தினம் தினம் மூச்சு வாங்க ஏறி வந்து மல்லிகைப் பூவை விட முகம் மலர்ந்து முழம் போட்டு மல்லிகைப் பூ தந்து விட்டுப் போகும் ஒல்லிக் குச்சியான பூக்காரியை மல்லிகைக் கூடையுடன் நகர் விட்டு நீங்கிய சில காலம் கழித்து தற்செயலாய் நகரின் நாற்சாலைகளின் ‘சிக்னல்’ சந்திப்பில் […]
(1) சிறகுகளைக் கேட்கும் நான் எப்படி கடல் மேல் பறக்குங் கால் கடலை உறிஞ்சி ஒரு துளி மேகமாகி விடுகிறாய்? எப்படி குன்றைக் கடக்கும் போது குன்றின் தலையில் ஒரு குட்டு குட்டுகிறாய்? எப்படி ஆகாயத்தின் முடிவில்லாக் கனவின் கதவுகளைத் திறந்து முடிவில் ஒன்றுமில்லையென்கிறாய்? எப்படி சித்தம் போக்கில் திரிந்து வெட்ட வெளியில் கற்ற ஞானத்தைக் காற்றின் பாடலாய் எழுதுகிறாய்? எப்படி கோடுகளிழுக்காமல் பகலெல்லாம் நீ பறந்து […]
(1) காத்திருக்கும் காடு செல்லுமிடமெல்லாம் எம்மோடுகூட வரும் செழித்த பெருங் காடு. ஒரு பெரிய ஓவியச் சீலையின் மூலையில் ஏதோ வரைவது போல் ஒரு கலைமான் காட்டில் எங்கேயோ திரிவது தெரியும். எம்மருகில் தெரியும் பெயர் தெரியா மரமும் காட்டில் எங்கேயோ இருக்கும் மரம். மேல் உறைந்து பனி அடியில் நதி மெல்ல நகருமென மெய்யுள் மூச்சோடும். புலி எங்கே? புலி வந்து போகும் சிறு […]
செல்லவில்லை. இல்லை செல்ல முடியவில்லை. செல்ல முடிந்திருந்தாலும் ‘எடுப்பதற்குள்’ சென்றிருக்க முடியுமா? ‘எடுப்பதற்குள்’ சென்றிருக்க முடிந்தாலும் இற்றைப் பொழுதில் இரு பறவைகளில் ஒரு பறவை தனியாய் இன்னொன்றை நினைந்திருப்பதைப் போல அற்றைப் பொழுதிலும் அவனை நினைந்திருந்திருப்பேன் என்பதன்றி வேறென்ன செய்திருக்க முடியும்? சென்றிருக்க முடியும் என்பதால் இப்படியெல்லாம் என் வாலை நானே விழுங்குகிறேனா? செல்லவில்லை என் பால்ய சிநேகிதன் சாவுக்கு என்பது நினைத்தால் தேள் கொட்டும் இன்னும். கு.அழகர்சாமி
சற்று நில். மண் பற்றிக் கொள்ளட்டும். திரிந்தலையும் மேகங்களைக் கண்டு பறந்தலையும் பறவைகள் உன்னிடம் சேருங் கால் இளைப்பாறுவாய் நீ நினைப்பொடுங்கி நிழல் பரப்பும் தருவாகி. கு.அழகர்சாமி
ஆட்டம் சூடு பிடித்திருக்கும். கணிணியும் அவனும் மோதும் உச்சக்கட்டத்தில் கவனத்தின் குண்டூசி முனையில் இறுதிப் போர் நடக்கும். தன்னையே தான் பணயம் வைத்து ஆடுகிறானா? கடைசி நகர்த்தலில் கணிணி நகைக்கும். காணோம் அவன். தேடி ’மெளஸைக்’ ‘கிளிக்’ செய்தால் மெலிதாய்க் கீச்சிடுவான். கு.அழகர்சாமி
(1) என்ன ஆனான் அவர்களிடம் அவன்? காணவில்லை அவன். ’காணாமல் போய் விட்டானெ’ன்று ஏதோ தெரியாததைத் தெரிவிப்பது போல் தெரிந்ததே தெரிவிக்கப்படும். கரைந்த கனவா அவன்? பொய்த்தவர் முதலில் தம்மிடம் தோற்றுப் போனவரென்று அவர்களுக்குத் தெரியவில்லை. எப்படி அவர்கள் கொலை நிழலை மண்ணில் குழி தோண்டிப் புதைத்து விட முடியுமென்று நம்புகிறார்கள் ? மண்ணிலிருந்து மீட்டெழும் அவன் எலும்புக் கூடு மானுடத்தின் சாட்சியாய். அது […]
நைந்து போயிருக்கும் புத்தகம். அட்டைகள் இல்லை. முன் பக்கங்கள் சில முகம் கிழிந்து போயிருக்கும். கிழிந்த பக்கங்கள் கவனமாய் நூல் கட்டி வைக்கப்பட்டிருக்கும். ஒடிந்து போய் விடுமோ என்று எத்தனையோ பக்கங்கள் ஓய்ந்திருக்கும். திரிக்கப்பட்ட சிறிய நூலொன்று புத்தக அடையாளமாய் வைக்கப்பட்டிருக்கும். கடைசியாய் எந்தப் பக்கம் வாசிக்கப்பட்டிருக்குமென்று தெரியவில்லை. புத்தகத்துக்குத் தெரியுமோ? கவனமாய் புத்தகத்தைத் திறப்பேன் பழங்காலப் புதையல் போல. எங்கே […]