(1) ஓடும் ஆற்றைச் சதா பாலம் கடக்கும். (2) ஊருக்கு நடக்கும் முன்னே ஊர் போய்ச் சேர்ந்திருக்கும் அவசரமாய் ஒற்றையடிப் பாதை. (3) எங்கு போய் நிற்பதென்று ஓடிப் பார்த்து விடவேண்டுமென்று ஓடும் நெடுஞ்சாலையில் ஓடும் ஒரு நாய். (4) இளைக்க ஓடும் இரயிலின் சக்கரக்கால் பாய்ச்சலை முறியடிக்கும் மலைத் தொடர் சாவகாசமாய் ஊர்ந்து. (5) நீந்த நதி நெடுக இரு கரையும் சதா காத்திருக்கும். (6) ஊரும் எறும்புகளில் […]
கத்திரி வெயில் வறுத்தெடுக்கும் கடற்கரை மணலில் கைவிடப்பட்டதாய்த் திரியும் கிழவனுக்கு அலைகள் தேற்றினாலும் என்ன ஆதரவிருக்கும்? சேரிக் குடிசையிலிருந்து தன் பெண்டின் சிகையைப் பிடித்து ’தர தர’வென்று தெருவில் இழுத்துச் செல்லும் ’தற்கொண்டானுக்கு’ என்ன இரக்கமிருக்கும்? பேருந்திலிருந்து கழுத்தைப் பிடித்து நெட்டித் தள்ளிவிடப்பட்டு சாலைப் புழுதியில் விழுந்து கிடக்கும் குடிகாரன் மேல் பயணிகள் யாருக்கும் என்ன அக்கறையிருக்கும்? பரட்டைத் தலையும் கந்தையுமாய்த் தான் பாட்டுக்குத் திரியும் பைத்தியக்காரனை ’லத்தி’யில் துரத்தும் போலிஸ்காரனுக்கு என்ன நியாயமிருக்கும்? உலகில் எல்லா […]
இன்னும் சூரியன் முகம் காட்டவில்லை. கதவு தட்டப்படும். கதவைத் திறக்க கண்டு நாளும் பேசிக் கொள்ளும் ஒற்றைத் தென்னை குனிந்து நிற்கும். நேற்றிரவு நிலா இல்லாத வானம் கண்டு உறக்கமில்லையா? அடையும் பறவைகளில் ஏதேனும் ஒன்று வரவில்லையா? எதிர் வீட்டு மாடியில் தனித்து விடப்பட்ட தொண்டு கிழவர் ‘தொண தொண’வென்று சதா இரவெல்லாம் பேசித் தொலைத்தாரா? வாழ்வின் கவலைகள் இப்படித் தேங்காய்க் குலையாய்க் கனக்குமென்று தெரியவில்லையென்றா? […]
காடு விட்டு பட்டாம் பூச்சிகள் கூட்டமாய் வந்தது போலிருக்கும். சிறகடிக்கும் மனம் போல் விரிந்து கிடக்கும் மைதானத்தில் குழந்தைகள். ஓடித் தொட்டு ஓடித் தொட்டு விளையாடும். யாரும் தோற்கவில்லை. யாரும் ஜெயிக்கவில்லை. விழுந்து எழும். எழுந்து விழும். கூட ஓடி ஓடி மைதானமும் களைத்துப் போய் ஒரு மூலையில் போய் உட்காரும். குழந்தைகளின் விளையாட்டு கலையும். குழந்தைகள் விட்டுப் போன விளையாட்டைக் கண்டு கலையாது வெளியில் தட்டான் பூச்சிகள் விளையாடும். கு.அழகர்சாமி
பசியில் தீக்கொழுந்து போல் துள்ளும். நீட்டிப் படுத்துக் கிடக்கும் இரயில் நடைமேடை நெடுக நிலத்தில் இழுத்த கோடு போல் பின் தொடரும். விடுவதாயில்லை அவளை. கையிலிருக்கும் காகிதப் பொட்டலத்தைப் பிரிப்பாள் அவள். விழுங்கும் ஒரு பருக்கை விடாமல் சோற்றை ’அரக்கப் பரக்க’ சொறி நாய். பசித் தீ தணியும். நின்று அன்பில் நோக்குவாள் ’என்பு தோல் போர்த்த’ பிச்சைக்காரி. நில்லாமல் இரயிலடியை அவசரமாய்க் கடந்து கொண்டேயிருக்கும் இரயிலொன்று ஏமாற்றமாயில்லை அவளுக்கு. கு.அழகர்சாமி
பட்டாம் பூச்சியொன்று பறக்காமல் பைய நடந்து வருவது போல் இருக்கும். அம்மா குழந்தையை அழைத்து வருவாள் மழலையர் பள்ளியில் சேர்க்க. குழந்தை முதல் நாள் விடாது அழும். இரண்டாம் நாள் விட்டு விட்டு அழும். மூன்றாம் நாள் மனதுக்குள்ளே கிணற்றுக்குள் அழும். இப்போதெல்லாம் குழந்தை அழுவதில்லையாம். குழந்தை ‘ஏ, பி, சி, டி’ யெல்லாம் சொல்லும். ‘டிவின்கில் டிவின்கில் லிட்டில் ஸ்டார்’ என்று ’ரைம்ஸ்’ எல்லாம் […]
நள்ளிரவில் சிப்பாய்கள் தடதடவென்று கதவைத் தட்ட நெஞ்சில் திகில் எப்படியிருக்குமென்று தெரியாது. தாழ்ந்து பறந்து விமானம் இரைச்சலிட்டுத் தாக்கி விட்டுப் போவது எப்படியிருக்குமென்று தெரியாது. இழுத்துப் போய் எங்கோ மிதி மிதியென்று இராணுவ பூட்ஸ் கால்கள் மிதித்தால் எப்படியிருக்குமென்று தெரியாது. கைகளைப் பின்கட்டி கண்கள் வெறிக்க திறந்த மார்பின் முன் தொடும் கொலைத்துப்பாக்கி முன் தன் உயிர்க்குஞ்சு துடிதுடிப்பது எப்படியிருக்குமென்று தெரியாது. உற்றார் உறவினரெல்லாம் சிதறிப் போக சொந்த மண்ணிலேயே […]
இருள் கவிய சாலை சர்ப்பமாகும். சாலையில் அம்மா கையை உதறி விட்டுக் குழந்தை ஓடும். பதறிச் சாலைக்கும் முந்தி சடுதியில் ஓடிப் போய்ப் பிடிப்பாள் அம்மா. அம்மா! அதென்ன? மரம். அதக் கேட்கல. காக்கா. அதக் கேட்கல. ஆகாசம். அதக் கேட்கல. மேகம். அதக் கேட்கல. நட்சத்திரம். அதக் கேட்கல. நிலா. அதக் கேட்கல. போடி! தெரியாது. கைகள் விசிறியாய்க் குழந்தை சிரிக்கும். அம்மா குழந்தையை வாரி மழைமுத்தம் பொழிவாள். அஞ்ஞான்று உலகெலாம் சிலிர்ப்பது தெரியும். கு.அழகர்சாமி
ஊழலின் செயல்பாட்டை இரு கண்ணோட்டங்களில் புரிந்து கொள்ளலாம். ஒன்று அமைப்பு ரீதியில்; மற்றொன்று அன்றாட வாழ்வின் தளத்தில். அமைப்பு சார் ஊழல்கள்(systemic corruption) சமுதாயத்தைச் சீரழிக்கின்றன. பொருளாதாரத்தைப் பாழடிக்கின்றன. அலைக் கற்றை, நிலக்கரி, மணல், நிலம் என்று ஒன்றையும் விட்டு வைக்காமல் இயற்கைத் தாதுப் பொருட்களைச் சுரண்டி இந்தியாவில் நிகழ்த்தப்பட்டுள்ள ஊழல்கள் இதனைத் தெளிவாக்குகின்றன. அன்றாட வாழ்வில் நிகழ்த்தப்படும் ஊழல்கள் அமைப்பு சார் ஊழல்கள் போலல்லாமல் மக்களை நேரடியாய்ப் பாதிக்கின்றன. நச்சாய் நச்சரிக்கின்றன. இவை மக்கள் மேல் […]
கடலைக் கைகளில் தூக்கி வைத்துக் கொள்வேன். அடம் பிடிக்காதே என்று அறிவுறுத்துவேன். அழுது கொண்டே இருக்காதே என்று சமாதானப்படுத்துவேன். நிலாவைப் பார் என்று வேடிக்கை காட்டுவேன். அலைகளில் துள்ளித் துள்ளி விளையாடுவது கண்டு ஆனந்திப்பேன். ஆகாயச் சட்டை போட்டு விட்டு அழகு பார்ப்பேன். தினம் தினம் வீட்டுக்குக் கூட்டி வந்து விடுவேன். இரவில் என் கூடப் படுக்க வைத்துக் கொள்வேன். தூங்காத கடலைத் தூங்க […]