author

சத்திய சோதனை

This entry is part 16 of 16 in the series 31 ஜனவரி 2021

உண்மை சுடும். உண்மை சுடப் படலாம். வலி நாட்டிற்கு… தன்னைச் சுடும் உண்மை தங்கமாக மாறும் யாரையும் சுடாத உண்மையின் பெயர்தான் அன்பு.

நினைவின் ஆழியில் அலையும் கயல்கள் – ரவிசுப்பிரமணியனின் சமீபத்திய கவிதை நூல் விமர்சனம்

This entry is part 14 of 14 in the series 24 ஜனவரி 2021

குமரி எஸ். நீலகண்டன் நினைவின் ஆழியில் அலையும் கயல்கள் என்பது ரவிசுப்பிரமணியனின் சமீபத்திய கவிதை நூல். ஆழிக்கடலின் சூறாவளியாய் வந்தவை இந்த அழகியக் கவிதைகள். ரவிசுப்பிரமணியன் அவர்கள் இசையிலும் கவிதையிலும் ஆழ்ந்த அறிவும் நுடபமும் அறிந்தவர். அமைதியாய் உலவுகிற இந்த அற்புத மனிதரிடம் வலை வீசாமலேயே அகப்பட்டு விடுகின்றன அபூர்வமானபடிமங்களோடு பலதரமான அழகியல் அனுபவங்கள் கவிதைகளாய். இவர் கவிதைகளை படைப்பதாய் நான் பார்க்கவில்லை. கவிதைகள் இவரின் வளமான ஈரமான இதயத்தில் முளைத்து வளர்ந்து பரந்து படர்கின்றன. அவரின் […]

சாலைத்தெரு நாயகன்

This entry is part 13 of 13 in the series 10 ஜனவரி 2021

குமரி எஸ். நீலகண்டன் திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவிலின் எதிரே ஒரு சிறிய பூங்காவினை அடுத்து ஒரு நெடிய சாலை. அதுதான் சாலைக் கம்போளத் தெரு . அந்தத் தெருவின் தொடர்ந்த பாதை கிள்ளிப் பாலம் தாண்டி வளைந்து நெளிந்து கன்னியாகுமரி நோக்கிச் செல்கிறது. உள்ளே நுழைந்ததுமே சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் நுழைந்த உணர்வு இருக்கும். மளிகைக் கடைகள் சார்ந்த வணிகப் பகுதியில் வரும்போது நாகர்கோவில் கோட்டாறு கம்போளத்தெருவுக்குள் நுழைந்த உணர்வும் ஏற்படும்.  மலையாளத் தமிழர்கள் ஆ.மாதவனின் […]

2021

This entry is part 1 of 11 in the series 3 ஜனவரி 2021

அண்டவெளியில் ஒரு உயிர் கோளமாய் சுழலும் பந்தில் சூரிய விழிகளின் சிமிட்டலாய் கருப்பு வெள்ளை ஒளி ஜாலம் ஒரே தாளத்துடன் ஒரே வேகத்துடன் காலச் சக்கரமாய் உருண்டு கொண்டு இருக்கிறது. வருடங்கள் வந்தும் போயும் இருக்கின்றன பூக்கடை முன்பு பறக்கிற அழுக்கு தூசிகள் போல வாழ்த்துக்களோடும் ஏச்சு பேச்சுக்களோடும். வருடங்கள் பிறந்து கொண்டே இருக்கின்றன வேறு வேறு வடிவங்களில் கொரோனா போல. பலரும் முகமூடிகளோடே திரிகிறார்கள். பலர் தற்காப்புக்காக முக மூடி போட்டுக் கொள்கிறார்கள். முகமூடிக்குள் பலருக்குள்ளும் […]

மிஸ்டர் மாதவன்

This entry is part 1 of 13 in the series 8 நவம்பர் 2020

குமரி எஸ். நீலகண்டன் கொரோனா காலம் எல்லா மனிதர்களைப் போல் என்னையும் வீட்டில் முடக்கியது. எல்லோரையும் வீட்டிற்குள் அனுப்பி விட்டு  சாலைகளையெல்லாம் கடவுள் தூசி தட்டிக் கொண்டிருக்கிறார். காற்றையும் தண்ணீரையும் அண்ட வெளிகளையும் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஏன்? ஓசோன் துளையைக் கூட கடவுள் அடைத்து விட்டாரென்று கேள்விப் பட்டேன். இதையெல்லாம் பார்த்த போது நம் வீட்டை மட்டும் தூசியாக வைத்திருக்கலாமாவென எனக்கு தோன்றியது. அதனால் என் வீட்டையும் சுத்தப் படுத்தத் தொடங்கினேன். இறுக்கி அடைத்து வைத்திருந்த அட்டைப் […]

மண்ணில் உப்பானவர்கள் – நூல் விமர்சனம்

This entry is part 14 of 19 in the series 1 நவம்பர் 2020

குமரி எஸ். நீலகண்டன் உடலில் தண்ணீர் எவ்வளவு நிரம்பி இருக்கிறதோ அதே போல்தான் உப்பும் நம் உடலின் ஆரோக்கியத்தில் அதி உன்னதமான பங்கை வகித்துக் கொண்டிருக்கிறது. காற்றைப் போல் உலகம் முழுக்க நிரம்பி இருக்கிறது உப்பு.  அந்த உப்பைத் தின்றவர்கள்தான் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வீறு கொண்டு எழுந்தார்கள். அந்த உப்புதான் இந்திய விடுதலைப் போரில் ஒரு புதிய வேகத்தையும் சக்தியையும் அளித்தது.  காந்தியடிகளின் உப்பு சத்தியா கிரகத்தை அறியாமல் எந்த இந்தியனும் இருக்க இயலாது. […]

எல்லாம் பத்மனாபன் செயல்

This entry is part 2 of 18 in the series 23 ஆகஸ்ட் 2020

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மார்த்தாண்ட வர்மாவிற்கு பின் வந்த மன்னர்களெல்லோரும் பத்மனாபசுவாமியின் சார்பாக பத்மனாப தாசர்களென்றே தன்னை அறிவித்து ஆட்சி செய்தனர். அவர்களின் ஆணைகள், தீர்ப்பென எல்லாவற்றையும் பத்மனாபன் செயலெனவே அறிவித்து கடவுளின் ஆணையை அறிவிப்பவர்களாக மட்டுமே மன்னர்கள் தன்னைக் கருதினர். ஆனால் நான் இங்கு குறிப்பிடும் பத்மனாபன் வேறு. அவர் காலடி பத்மனாபன். மிகப் பெரிய சமஸ்கிருத அறிஞர். தமிழ், இந்தி. ஆங்கிலம், மலையாளம், சமஸ்கிருதம் என பன்மொழி வல்லுனர். சிறந்த மொழி பெயர்ப்பாளர். தமிழின் குறிப்பிடத்தக்க […]

ஒழுங்கீனமென்ற சமூகத் தொற்று

This entry is part 11 of 20 in the series 19 ஜூலை 2020

குமரி எஸ். நீலகண்டன்                         நான் பலதடவை ஒரு வித்தியாசமான வகையில் பெருமைப்படுவது உண்டு. காந்தி என்ற பெயரை உலகின் ஏதாவது ஒரு மூலையில் யாராவது ஒருவர் இந்த நொடியில் நிச்சயமாக சொல்லிக் கொண்டுதான் இருப்பார். பாரதியார், வள்ளுவர், கம்பரென தமிழுக்கு பெருமை சேர்க்கிற உலகம் வியக்கும் ஆளுமைகளையும் உலகில் ஏதாவது ஒரு மூலையில் யாராவது ஒருவராவது இந்த நொடியில் பேசிக் கொண்டோ எழுதிக் கொண்டோ இருப்பர். காற்று போல உலகில் பரவி புகழுடன் வியாபித்து […]

கேரளாவும் கொரோனாவும்

This entry is part 1 of 9 in the series 31 மே 2020

நாகர்கோவில் கேரளா எல்லையில் பாரசாலை பக்கம் ஒரு முக்கிய பிரமுகரின் திருமணம். ஊர்மக்கள், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகளென பலரும் வந்து கொண்டே இருக்கிறார்கள்.கேரள போக்குவரத்து துறை அமைச்சரும் ஒரு காரில் வந்து இறங்கினார். அவருடைய சக நண்பர்களும் கூடவே வந்து இறங்கினர். வாசலில் வரவேற்றுக் கொண்டிருந்த இருவர் எல்லோரையும் வரவேற்பதைப் போலவே வாருங்க சார் என அவரை உள்ளே அழைத்து வரவேற்றார். ஆச்சரியமாகத்தான் இருந்தது அந்த திருமணத்திற்கு சென்றிருந்த நம்ம ஊர் நண்பருக்கு. அவரும் கற்பனை செய்து […]