காற்றின் கவிதை

எழுதாமல் பல பக்கங்கள் காலியாகவே இருக்கின்றன. எழுதுவதற்காக இருந்தவன் எழுதாமல் போனதால் பலன் பெற்றனவோ அந்தப் பக்கங்கள். எழுதுபவன் எழுதாததால் வெள்ளை உள்ளத்துடன் வெற்றிடம் காட்டி விரைந்து அழைக்கிறதோ அந்தக் காகிதப் பக்கங்கள். காகிதத்தின் மொழி அறியாமல் காகிதத்தில் எழுத முயல்கையில்…

அன்பின் அரவம்

குமரி எஸ். நீலகண்டன்   யாரோ ஒருவருடன் சதா பேசிக் கொண்டே இருக்கிறார்கள். சுற்றி யாருமில்லை. அலைபேசியில்தான் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.   அல்லது யாரோ ஒருவருடன் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். உற்று நோக்கி ஒருமித்தப் பார்வையுடன் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.…

மழையின் முகம்

துளி துளியெனத் தூளியில் ஆடிப் பாடுகிறது மழை. பக்கம் பக்கமாய் மணலில் எழுதி கடலில் சேர்க்கிறது காவியமாய். வரையும் சித்திரம் வளர்கிறது விரிகிறது இலையாய் மலராய் மரமாய்.வனமாய். காங்கிரீட் தளங்களில் விழுந்து எழுந்து காயமும் படுகிறது. கொட்டிக் கொட்டி கண்ணாடியில் முகம்…

கனவும் காலமும்

கனவு பறந்து கொண்டே இருக்கிறது நினைவு என்ற இலக்கை நோக்கி... கனவின் இறக்கைகளை கத்தரித்துக் கொண்டே இருக்கிறது காலம். காலம் கனவை இரவாய் பார்க்கிறது. கனவு காலத்தைப் பகலாய் பார்க்கிறது. கனவோடு பறக்கிற காலத்தின் போட்டியில் கனவு காலத்தை வென்றே விடுகிறது…

கிணற்று நிலா

குமரி எஸ். நீலகண்டன் கிணற்றுக்குள் விழுந்து விட்டது நிலா. வாளியை இறக்கி நிலாவைத் தூக்க முயல்கையில் வாளித் தண்ணீரில் வரும் நிலா மீண்டும் கிணற்றுக்குள்ளேயே விழுந்தது. அசையும் கயிறுக்கு அஞ்சி ஆழ் கிணற்றினுள்ளேயே துள்ளி விழுகிறது என்றான் நண்பன். இல்லை.. வாளி…

அணையும் விளக்கு

எண்ணெயை அவ்வப்போது ஏற்றிக் கொள்கிறது தீபம். அங்குமிங்குமாய் ஆடும் ஊசலாய் ஆடி ஆடி அலைகிறது தீபம். எண்ணெயினை ஏற்றிக் கொண்டும் அணைகிற வரை அலைந்து கொண்டும் இருக்கும் தீபம் ஆடும் குடிகாரனின் ஆக்ரோஷ உருவத்தைக் காட்டி.

பறவைகளின் தீபாவளி

குமரி எஸ். நீலகண்டன் தீபாவளிக் கோலாகலத்தில் புகை மூட்டமாய் வானம்... ஏவியவர்களின் உற்சாகங்கள் வானத்தில் ஒளிப் பொதிகளாய் வானத்தில் சிதறின... நிலத்திலிருந்து உருவான மின்னலும் இடியும் மேகத்தில் போய் விழுந்தன... நகரத்தின் ஒற்றை மரங்களில் கூடு கட்டியப் பறவைகள் பூகம்பமென்று கூட்டினை…

ஒரு உண்ணாவிரத மேடையில்

குமரி எஸ். நீலகண்டன் மரண தண்டனையை எதிர்த்தும் மனித உரிமைகளுக்காகவும் உண்ணாவிரதமிருந்தான் அவன். எந்த உயிரைக் கொல்வதற்கும் மனிதனுக்கு உரிமை இல்லையென்றே முழங்கினான். அவனைக் கடித்துக் கொண்டே இருந்த கொசுக்களை அடித்து அடித்து இதையெல்லாம் சொல்ல வேண்டி இருக்கிறது அவனுக்கு. குமரி…

நிலாவும் குதிரையும்

குமரி எஸ். நீலகண்டன்   பரந்த பசும் வெளியில் பாய்ந்து சென்றது ஒரு குதிரை தன்னந்தனியாய்.   ஆடுகள் மாடுகள் ஆங்காங்கு மேய்ந்திருக்க இறுமாப்புடன் வானம் நோக்கியது.   வட்ட நிலாவைக் கண்டு அழகிய இளவரசி தன்மேல் சவாரி செய்வதாய் நினைத்துக்…

நிலா விசாரணை

குமரி எஸ். நீலகண்டன்   வெயிலில் வெந்து தணிந்த கடலில் குளித்து முகமெங்கும் மஞ்சள் பூசிய மகாராணியாய் வானமேறி வருகிறது அழகு நிலா...   விரைந்து வருகின்றன அவளைச் சுற்றி வெள்ளியாய் மிளிரும் விண்மீன் படைகள்..   ஓய்ந்துறங்கும் உலகை உற்று…