கிளைகளுக்கு நீரூற்றிக்கொண்டே வேர்களை வெட்டியெறியும் ஒரு தோட்டக்காரன்! மனச் சருகு மிதிபடும் சத்தம் இரும்புச் சப்பாத்துக்களின் செவிகளை எட்டவேயில்லை! கெல்லிக் கெல்லி – என் கணுக்களைச் சிதைக்கிறாய் – மீள உயிர்த்தலைத் தவிர்த்திடும் நஞ்சினைப் புதைக்கிறாய்! கொத்திக் குதறும் – உன் மண்வெட்டிக் கைப்பிடிக்கு எந்தன் முதுகெலும்பையே இரவலாய்க் கேட்கிறாய்! காதலின் கருணையின் காணிக்கை என்று சொல்லி – என் நாளையை, வாழ்தலை கனவுகளைப் பறிக்கிறாய், நீ ! சுவர்களை, மதில்களை உயரமாய் எழுப்பியோர் இருள்வெளிக் குகையுளெந்தன் […]
இழந்தது என்னவென்று தெரியவில்லைதான் ஆனாலும்… எதையோ இழந்ததான வலியில் உயிர் துவண்டு கசிகிறது. வாழ்தல் பற்றிய கனவுகளின் விலையாய் எதனை இழந்திருக்கக்கூடும் நான்? தெரியவில்லை. என் உள்ளார்ந்த விம்மலின் சத்தம் உன் ஆழ்ந்த மௌனத்துள் அமிழ்ந்துதான் போயிற்று! இருள்களின் எல்லை தாண்டிய பயணம் பற்றிய என்னுடைய கனவுகள் நடுவானிலேயே தம் சிறகுகளை இழந்துவிட்டனவா, என்ன! எழுந்து தொடரும் பெருமூச்சுக்களின் நீளத்தை நீ என்றேனும் அளந்து பார்த்திருக்கிறாயா, நண்பனே? உனக்கான வாழ்க்கையில் எனக்கான மணித்துளிகள்… அந்தோ! உன் வேலைப் […]
வெளியே மழை தூறிக்கொண்டிருந்தது. கிழிந்து போய்விட்ட மனித நேயமாய் விரிசல் கண்டிருந்த ஓலைக் கூரையின் வழியே வீட்டினுள் மழைநீர் சொட்டுச் சொட்டாய் ஒழுகியது. “டங்..டங்…” தப்பாத தாள லயத்தோடு மழைத்துளி ஒன்றன்பின் ஒன்றாய் வந்துவிழுந்து, நசுங்கிப்போன அலுமினியப் பாத்திரத்தில் கச்சேரி நடத்திக் கொண்டிருந்தது. பழசாகிப் போன கயிற்றுக் கட்டிலில் ஒருக்களித்துச் சாய்ந்தபடி இருந்த கந்தசாமி மாஸ்டரின் முகத்தில் முதுமை எழுதிய கவிதை, சுருக்கங்களாகப் படிந்திருந்தன. கண்களைக் கசக்கி விட்டபடி குடிசையை நோட்டமிடுகிறார். குடிசை மூலையில் இருந்த தடுப்புக்கு […]
‘கோவலன் கொலையுண்டான்’ செய்தி வந்ததும் காற்று மௌனித்து அஞ்சலி செலுத்தியது. * * * * * * * இரவுக்கு வெள்ளையடிக்க நிலவு பொழிந்தாலும் -தேச இருட்டுக்கு அஞ்சி காரைபெயர்ந்த குடிலுக்குள்-அவள் கந்தல் சாக்கிலே சுருண்டுகிடந்தாள். கண்முன் கணவனின் சடலமிருந்தும் அடையாளம் காட்டி அழமுடியாது உணர்வுகளைப் புதைத்திட்ட நேற்றைய அவலத்தில் நொறுங்கியிருந்தாள். * * * * * * * கண்ணகி தேவிக்கு கண்கள் சிவந்தன கூந்தல் அவிழ்ந்து’காற்றில் அலைந்தது முகத்தினில் ரௌத்திரம் தாண்டவம் […]