காவல் இல்லாத தோட்டங்களை சுதந்திரமாக மேய்கின்றன கட்டாக்காலிகள் கொண்டாட்டமும், களிப்புமாய் அவைகள் காணிக்காரனின் சுதந்திரமோ கம்பிகளுக்குப் பின்னால் கிழக்குச் சமவெளிகள் திகட்டிவிட்டதால் வடக்கில் வாய் நீள்கிறது கடைவாயூறும் கட்டாக்காலிகளைக் கட்டி வைக்கவோ கல்லால் அடிக்கவோ விடாமல் காவல் காக்கிறது இறையான்மை ஊரான் தோட்டத்தில் மேயும் கட்டாக்காலிகள் காணிப் பகிர்வையும் காவல்காரனையும் விரும்புவதில்லை தெற்கிலும் தென்கிழக்கிலும் கட்டாக்காலிகள் கால் வைப்பதில்லை வாலை நீட்டினால் கூட வேட்டையாடி விடுகின்றன சிங்கங்கள்
சந்திப்பிழை போன்ற சந்ததிப்பிழை நாங்கள் காலத்தின் பேரேட்டைக் கடவுள் திருத்தட்டும் — நா.காமராசன் -காகிதப் பூக்கள் மணியக்கா லயித்து ஆடிக்கொண்டிருந்தாள்.என்னதான் மாயம் இருக்குதடி… கண்ணண் இசைத்திடும் தேன்குழல் தான்…. இதயம் உருக்குதடி….என பாடலுக்குள் தன்னை இழந்தவளாக அனிச்சையாக உடல் வளைத்து ஆடிக்கொண்டிருந்தாள்.பரதம் தான் அவள்.அவள் தான் பரதம்.கண்கள் கிறங்கி, கண்ணணோடு ஒன்றாக கலப்பது போலவும், அவனோடு காற்று வெளியில் கை கோர்த்து நடப்பது போலவும் ஆடிக்கொண்டிருந்தாள். பெரிய பெரிய சபாக்களில் எல்லாம் அரங்கேற்றம் செய்தவள் மணியக்கா. ஆடிய […]
— மன்னார் அமுதன் கஞ்சிக்கும் கூழுக்கும் நீதியொன்று – பணம் காய்த்த நல் மரத்திற்கு நீதிவேறு – என நெஞ்சினைக் கல்லாக்கி நீதி சொல்லும் -அந்த நீதிமான்களைக் காலம் வெல்லும் கிஞ்சித்தும் அஞ்சாமல் கொடுமை செய்யும் கீழான மனிதர்தம் பாதம் தொட்டு – நல்ல மேலான பதவிகள் கேட்டுநிற்கும்- இவர்கள் நிலையினைப் பார்த்தாலே உள்ளம் வெட்கும் பாருக்குள் எங்கோவோர் மூலையிலோ -நல்ல பண்புகள் கொண்டவரைச் சாலையிலோ -கண்டு கதைக்கையில் ஒருதுளி நீர்திரளும் -அந்த நீரினில் ஒருபுறம் நீதி […]
உன்னைப் போலவே தான் நானும் பிரமிக்கின்றேன் எதிர்பாரா தருணத்தில் எப்படியோ என்னுள் நுழைந்திருந்தாய் இனிதாய் நகர்ந்தவென் பொழுதுகளில் -உன் ஒற்றைத் தலைவலியையும் இணைத்துக் கொண்டாய் பழகியதைப் போலவே ஏதோ ஒரு நொடியில் பிரிந்தும் சென்றாய் ஏன் பழகினாய் ஏன் பிரிந்தாய் எதுவுமறியாமல் அலைந்த நாட்களில் தான் மீண்டும் வருகிறாய் மற்றொரு காதல் மடலோடு எப்படி ஏற்றுக் கொள்ள நானலைந்த தெருக்களில் காரணமறியாமல் அலையவிட்டிருக்கிறாய் மற்றொருவனையும் ======
பருவமெய்திய பின்தான் மாறிப் போயிருந்தது அப்பாவிற்கும் எனக்குமான பிடித்தல்கள் வாசலில் வரும் போதே வீணாவா! வா வாவெனும் அடுத்த வீட்டு மாமாவும் அகிலாவின் அண்ணாவும் போலிருக்கவில்லை அப்பா மழை வரமுன் குடையுடனும்.. தாமதித்தால் பேருந்து நிலையத்திலும்.. முன்னும் பின்னுமாய் திரிய காரணம் தேவைப்படுகிறது அப்பாவுக்கு துக்கம் தாழாமல் அழுத ஒருபொழுதில் ஆறுதல் கூறுவதாய் அங்கம் தடவுகிறான் அகிலாவின் அண்ணா யாருக்கும் தெரியாமல் மொட்டைமாடிக்கு வா நிலா பார்க்கலாமென மாமா இப்போதெல்லாம் பிடிக்கிறது அப்பாவை — மன்னார் அமுதன்
மன்னார் அமுதன் படைப்புலகில் முழுமை பெற்றவர்களும், புனைவுகளில் ஏற்பட்ட வறட்சியாலும் எவ்வாறாவது தம்மை இலக்கியப்புலத்தில் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்ற நிர்பந்தமுடையவர்களும் இலக்கிய சஞ்சிககைகளை வெளியிட்டு வரும் காலமிது. இதனால் இலக்கிய சஞ்சிகைகள் எண்ணிக்கையிலும், தரத்திலும் மலிந்து கொண்டே வருகிறன. மேலும் தொடங்கிய சஞ்சிகையை தொடர்ந்து வெளியிடுவதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளால் பல சஞ்சிகைகளின் வரவு இடையிடையிலேயே தடைபட்டுவிடுகின்றன. இவர்களுக்கிடையே உண்மையான படைப்பிலக்கிய ஆர்வமும், ஆளுமையும் கொண்ட இளைஞர்களும், யுவதிகளும் சிறுசஞ்சிகைகளை ஆரம்பிக்கும் போதும், தொடர்ந்து முயற்சியுடன் அவற்றை வெளிக்கொணரும் […]