வரும்போதே எரிச்சல் மண்டும். குட்டிப் பிசாசுகள் வாலில்லா குரங்குகளென திட்டிக் கொட்டுவாள் மனைவி. பிள்ளைகள்மீது பிரியம்தானெனினும் அட்டகாசம் பார்க்க அப்படித் தோன்றும். விடுமுறை கழிக்க உறவினர் வீடு சென்ற குழந்தைகள் மறந்து வெளியில் சென்று திரும்புகையில் மவுன வீடு கண்டு பதைக்கும் மனசு. செங்கல் சிமெண்டினால் ஆனது வீடெனினும் துடித்துக் கொண்டிருக்கிறது குழந்தைகள் சப்தங்களில் வீட்டின் உயிர்.