Articles Posted by the Author:

 • வியட்நாம் முத்துகள்

      வியட்நாமில் ஹா லுங் பே(Ha Long Bay)  என்ற இடம்,  கடலில் நீரில் முத்து வளர்ப்பதற்குப் பிரசித்தமானது. எங்களை அங்கு வழிகாட்டி  அழைத்துச்   சென்றபோது  ‘நத்தைகள்போல் சிப்பிகளும் ஆணும் பெண்ணும் அர்த்த நாரியாக (hermaphrodites) இணைந்திருப்பவை ‘  என சியாமளாவிற்குச் சொன்னபோது,   ‘அவைகள் பாவம் ஒன்றின்மேல் ஒன்று எப்படி ஒற்றுமையாக இருக்கும்’  என்றார். ‘மனிதர்களில் ஆணும் பெண்ணும்  ஒற்றுமையாகவா இருக்கிறார்கள்?  இயற்கை    இவைகளைப் பற்றி  கவலைப்படுவதில்லை: பரிதாபம் பார்ப்பதில்லை:  அனுதாபத்துடன் நோக்குவதில்லை.  அந்த உயிர்கள் […]


 • வியட்நாமின்,  சம்பா இந்து அரசு

  வியட்நாமின்,  சம்பா இந்து அரசு

      நடேசன்.   பல வருடங்கள் முன்பாக கம்போடியாவிலுள்ள  அங்கோவாட் போயிருந்தபோது,  கமர் (Khmer) இராஜதானிக்கும்  வியட்நாம் பகுதியிலுள்ள சம்பா என்ற  இந்து அரசுக்கும்  தொடர்ச்சியான போர் நடந்தது என அங்கு குறிப்பு  எழுதியிருந்ததைப் பார்த்தேன். அக்கால  சம்பா அரசு தற்போது வியட்னாமின் மத்திய பகுதியே  என்று சொல்லப்பட்டது.  அக்காலத்தில் இந்துக்களாக இருந்த அந்த சம்பா மக்கள் இஸ்லாமியராக இப்பொழுது மாறிவிட்டார்கள் என்றார் எனது வழிகாட்டி . அதன்பின் சில தடவை வியட்நாம் சென்றபோது எதோ […]


 • அசாம்  – அவதானித்தவை

    எனது பாடசாலை நண்பரான டாக்டர் திருச்செல்வத்துடன் இவ்வருடம்  ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் வட  கிழக்கு மாநிலங்களுக்குப் பயணம் செய்தேன். பலவகையில் வித்தியாசமான அனுபவம். இதுவரையிலும் நாம் பார்த்த இந்தியாவாக இந்தப் பிரதேசம்  இருக்கவில்லை.    தற்பொழுது  அசாம்,  மேகாலயா மாநிலங்கள் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது எனும் செய்திகள் வரும்போது மனதுக்குக் கஷ்டமாகிறது. நாம் பிரயாணம் செய்த இடங்கள் எங்களுடன் உளரீதியாக இணைக்கப்படுகிறது . ஒரு விதத்தில் எமக்குத் தெரிந்தவர்கள் துன்பம் போன்றது. தொடர்ந்து தொலைக்காட்சியை பார்த்தபடியிருந்தேன். இந்தியாவின் […]


 • மகாபலிபுரத்தில் என்னைக் கவர்ந்த சில சிற்பங்கள்

        அருச்சுனன் தபசு அருச்சுனன் தபசு எனக் கூறப்படும் கல்லோவியம் இரண்டு பாறைகளில் செதுக்கப்பட்ட சிற்பங்களின் கூட்டாகும் . அவை  ஒவ்வொன்றையும் அவற்றின் அழகியலையும் பலவாறு வர்ணிக்கமுடியும். எனது நோக்கம் அதுவல்ல. நம் எல்லோருக்கும் தெரிந்த மகாபாரதத்தில் வரும் அருச்சுனன் பாத்திரம் ஹோமரின் கிரேக்க காவியத்தில் வரும் ஆக்கிலிஸ் என்ற வீர னின் பாத்திரத்தைப் போன்றது. காலத்தைக் கடந்து இந்தப் பாத்திரம் மக்கள் மனதில் நிற்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று வில்லாற்றல்  கொண்ட […]


 • மாமல்லன்

  மாமல்லன்

          இந்தியாவின் பல இடங்களில் குகைகளில் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன.பெரும்பாலானவை  புத்த,  சமண மதத்தவர்களது.  குகைக் கோவில்களின் அடுத்த பரிணாமம் ஒரே கல்லில்      (Single rock cut temple ) செதுக்குவதேயாகும்.    இப்படியான குகை கோவில்கள் மகாபலிபுரத்தில் உள்ளன. .குகைக்கோயில்கள்,  தனிக் கல்லான கோவில்கள்,  அத்துடன் பல கற்களில் கட்டப்பட்ட  கடற்கரை கோவில் என மூன்று வகையானதும் ஒரே இடத்தில் இருக்கிறது.  ஒரே கல்லில் அமைந்த கற்கோவில்கள்  ( Single rock cut […]


 • கொரனாவின்பின்னான பயணம்

  நடேசன் வாழ்வில் பயணங்கள் என்பது  நூறு புத்தகங்களைப் படிப்பதற்குச் சமனானது என்று எங்கோ படித்த நினைவு. அதே நேரத்தில் புத்தகங்களை வாசிப்பதும்,  இருந்த இடத்திலிருந்தே  யாத்திரை செய்வது போன்றது என்பார்கள்.  எனது பயணம் எப்பொழுதும் புத்தகங்களுடனேயே  இருக்கும் என்பதால் இரட்டை சந்தோசம் என நினைப்பேன். ஆனால்,   இம்முறை எனது வெளிநாட்டுப் பயணம் எதிர்பார்த்ததை விடப்  பல விடயங்களை எனக்குப் போதித்தது. பலவற்றை நினைக்க வைத்தது. வாழ்வின் மகத்துவத்தைப் புரியவைத்தது. வழமையாக என்னுடன் வரும் மனைவி  சியாமளா இம்முறை […]


 • கொரோனோ தொற்றிய நாய்

  கொரோனோ தொற்றிய நாய்

      நடேசன் ஹாங்காங்கில், இரண்டு பொமரேனியன் நாய்களில் கோவிட் வைரஸ் காணப்பட்டது என்ற  செய்தியை இரு வருடங்களுக்கு  முன்பாக பார்த்தேன். அக்காலத்தில் அவுஸ்திரேலியாவில் அதிக நோய் தாக்கமில்லை . ஹாங்கொங்போல் இங்கு அடுக்கு மாடி கட்டிடங்கள் இல்லை.  பெரும்பாலானவை தனியான வீடுகளென்பதால் இங்கு நாய்களில் தொற்று ஏற்பட  சாத்தியமில்லை என்பது எனது எண்ணமாக இருந்தது.   மெல்பனில்,  கிழமையில் ஒரு நாள் வேலை செய்தபோதிலும் இரு வருடங்களாகத்  தொடர்ந்து வேலை செய்து வந்தேன். எல்லோரும் மாஸ்க்குடன் […]


 • மலையாள சினிமா

      நடேசன் நான் பார்த்த தமிழ்ப் படங்களில் யதார்த்தமானவை எனக்கருதும்  திரைப்படங்களிலும் 99 வீதமானவை புறவயமானவை. அதாவது மனம் சம்பந்தப்படாதவை. இலகுவாக கமராவால் படம்பிடிக்க முடிந்தவை. அதாவது ஒரு செகியூரிட்டி கமராவின்   தொழில்பாடு போன்றவை.  வர்க்கம் ,சாதி,  மதம்  போன்ற தடைகளை மீறுதல், வன்முறைகளுக்கு எதிராகப் போராடுதல்  அல்லது அதற்கு எதிரான  பிரசாரத்தில் ஈடுபடுவது என்ற புறச்சார்பு  அல்லது உலக நடைமுறை விடங்களைப் பிரதிபலிப்பவையே  தமிழ்த்திரைப்படங்கள்.  இவற்றில்  பெண்களை முக்கிய பாத்திரங்களாக கொண்ட சில படங்களும் […]


 • மனநோய்களும் திருமணங்களும்

  மனநோய்களும் திருமணங்களும்

      நடேசன்   இந்திராணி சில்வா 45 வருடங்களுக்கு  முன்பு இலங்கையில்   என்னுடன் படித்த பெண். அவரை சமீபத்தில்   ஒரு  மெய்நிகர்  நிகழ்வில் சந்தித்தேன்.  அந்த நிகழ்வில் கலந்துகொண்ட  ஒருவர் அந்தப் பெண்ணை  “ அங்கொடை சில்வா   “ என்றார். அது ஒரு நகைச்சுவை எனப் பலரும் சிரித்தார்கள். நான் சிரிக்கவில்லை, ஆனால்,  அந்த வார்த்தையின் உள்ளர்த்தம்  என்னைச் சிந்திக்கப் பண்ணியதால் இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. அங்கொடை என்ற இடம்  இலங்கையில் பிரதான மன நோய் […]


 • நேற்றைய மனிதர்கள்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் சிறுகதைத் தொகுதி – மதிப்பீடு

  நேற்றைய மனிதர்கள்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் சிறுகதைத் தொகுதி – மதிப்பீடு

    நடேசன்   புலம் பெயர்ந்த எழுத்தாளர்களில் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் பெண் எழுத்தாளராகவும்  தமிழ் எழுத்தாளர்களில் வித்தியாசமானவராகவும் அறியப்பட்டவர்.  புலம்பெயர்ந்த தனது புற,  அக அனுபவங்களையும்,  மற்றவர்களின் அனுபவங்களையும் உள்வாங்கி எழுதுபவர். அவரது அரை நூற்றாண்டுகளுக்கு மேலான இங்கிலாந்து வாழ்வுடன், அங்குள்ள தமிழர்கள் , தமிழர்கள் அல்லாதவர்களது,  கலாச்சாரம்,  பண்பாட்டுக் கூறுகளை உள்வாங்கி, அவற்றைத்  தனது கதைகளில் வெளிக்கொணர்ந்துள்ளார். மேற்கு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகத்தின் செல்லும் திசையை  அறிய அவரது எழுத்துகள்,  திசைக்கருவியாக எமக்கு உதவும். அ. […]