(அன்புடையீர், கடந்த ஒரு மாதமாக உடல் நலமின்றி இருந்ததால் தொடர் தாமதமாக வெளிவருகிறது. திண்ணை இதழ் வாசக நண்பர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்) பிரான்சு நாட்டின் பதினேழாம் நூற்றாண்டு பதினான்காம் லூயியின் நூற்றாண்டு என்றால் மிகையில்லை. 1638 தொடங்கி 1715 வரை அவர் ஆட்சி செய்த தாக வரலாறு சொல்கிறது. ஏற்கனவே கூறியிருந்ததைப் போல அவர் பட்டத்திற்கு வந்தபோது வயது ஐந்து. பதின்மூன்றாம் லூயியைப்போலவே தொடக்கத்தில் பிரதிநிதித்துவ ஆட்சி. இங்கும் மகனுக்குப் பதிலாக தாயின் ஆட்சி, […]
– நாகரத்தினம் கிருஷ்ணா அ. இயற்கை தரிசனம் : அம்மா ; ஆ. பிரான்சு அதிபர் தேர்தல் அ. இயற்கை தரிசனம் : அம்மா நீர், நிலம் நெருப்பு, ஆகாயம் இவற்றின் சங்கமத்தால் ஏற்பட்ட விளவுகள் அனைத்துமே இயற்கைதான். மனிதர் உட்பட அனைத்துஜீவன்களும் இயற்கையின் பிரதிகள்தான், இயற்கையின் கூறுகள்தான், இயற்கையின் கைப்பாவைகள்தான், இயற்கையினால் ஆட்டுவிக்கப்படுவர்கள்தான். இயற்கை வேறு நாம் வேறு அல்ல என்ற உணர்வுதான் கடந்த சில கிழமைகளாக என்னிடத்தில் மிஞ்சுகிறது. ஒளியும், நிலமும், நீரும் […]
பிரெஞ்சு ஓவியத்துறையும், இலக்கியங்கள் குறிப்பாக நாடகத்துறை புகழின் உச்சத்தில் இருந்த காலம் பதினேழாம் நூற்றாண்டு. தத்துவ உலகெங்கும் கொண்டாடப்படுகிற ரெனெ தெக்கார்த்(René Descartes) , நாடகவியலாளர்களும் படைப்பாளியுமாகப் புகழ்பெற்ற பியர்கொர்னெய் (Pierre Corneille) ழான் ரசீன் (Jean Racine) மொலியேர்(Molière) ஆகியோரும் ; லெ நேன் சகோதர ர்கள் (Frères Le Nain), ழார்ழ் துமெனில் (Georges Dumensil de la Tour ), நிக்கொலா பூஸ்ஸன் (Nicolas Poussin) போன்ற ஓவியர்களும் இந்த நூற்றாண்டில் முக்கியமானவர்கள். பதினைந்தாம் […]
எனி இந்திய பதிப்பகம் வெளியிட்டிருந்த என்னுடைய இரண்டாவது நாவல்‘மாத்தா ஹரி ‘ ‘Bavani, l’avatar de Mata Hari’ என்ற பெயரில் பிரெஞ்சு மொழியில் எனது முதல் நாவலாக வெளிவருகிறது. புதுச்சேரியைச் சேர்ந்த தமிழன் என்ற வகையில் எனது படைப்பு பிரெஞ்சு மொழியில் வருவதில் பிரத்தியேக மகிழ்ச்சி. சிறுகதைகள், நாவல்கள் அனைத்துமே பிரெஞ்சுமொழியில் வரவேண்டும் , வருமென்ற கனவுடன் எழுதப்பட்டவை, புதுச்சேரி,யையும் பிரான்சு நாட்டையும் களனாகக் கொண்டவை, எனவே பிரெஞ்சு வாசகர்களுக்கு அந்நியத் தன்மையைத் தராது என்பது […]
நாகரத்தினம் கிருஷ்ணா கலை, இலக்கியத்துறையில் பதினைந்தாம் நூற்றாண்டில் நிகழ்ந்த மாற்றங்களை ஒருவித பகுத்தறிவு அணுகுமுறை என வர்ணிக்கலாம். சமயத்தை விமர்சனத்திற்கு உட்படுத்தி, இயற்கையைப் போற்றிய கிரேக்க- இலத்தீன் தொன்மத்தின்மீது உருவான பற்றுதல் அல்லது அமைத்துக்கொண்ட நோஸ்ட்டால்ஜியா தடமே மறுமலர்ச்சி. இடைக்காலத்தில் ஆதிக்கச்சக்தியின்கீழ் அண்டிப்பிழைத்த படைப்பாளிகள், கலை இலக்கியம் சார்ந்த துறைகளில் மட்டுமின்றி சமயத்தின் நிழலிலிருந்தும் தங்களை விடுவித்துக்கொண்டு தொன்மத்திற்கு பயணிக்க முடிவுசெய்ததின் விளவு அது. பொதுவாகவே ஐரோப்பிய நாடுகளில் கலை இலக்கிய துறையில் இத்தாலிநாட்டின் பங்களிப்பினை […]
அ. மரங்களின் வாழ்க்கை ரகசியம், ஆ. இலக்கிய சொல்லாடல் : இலக்கிய காப்பிக்கூடம் (Café littéraire) ; இ. பிரான்சில் என்ன நடக்கிறது ? அ. மரங்களின் வாழ்க்கை ரகசியம்.: பீட்டர் வோலீபன் (Peter Wohlleben) என்ற ஜெர்மன் இயற்கையியல் அபிமானி ஜெர்மன் மொழியில் எழுதி பல இலட்சம் பிரதிகள் விற்பனையில் சாதனை புரிந்துள்ள நூல் அண்மையில் பிரெஞ்சு மொழியில் வந்துள்ளது. மொழிபெயர்ப்பாளர், Bernard Mangiante. நூலின் பெயர் « மரங்களின் வாழ்க்கை ரகசியம்.(‘La vie sécrète des arbres ) » . […]
ரொமான் (le roman) : புதினத்தைப் பிரெஞ்சு மொழியில் ரொமான் என்றே இன்றைக்கும் அழைக்கிறார்கள். இச்சொல் இடைக்காலத்தில் உருவான சொல் தவிர அவை உரைநடையில் அல்லாது பாடல்களால் ஆனவை. (பிரெஞ்சு உரைநடை புதினங்களின் காலம் பதினாறாம் நூற்றாண்டு). ரொமான் என்ற பெயரை இவ்வகை இலக்கியங்கள் பெறுவதற்குரிய காரணம் , அக்காலகட்ட த்தில் இலக்கியங்கள் எனப்பட்டவை இலத்தீன் மொழியிலேயே சொல்லப்படுவது மரபு. தவிர அவை பெருவாரியான சாமானிய மக்களிடமிருந்து விலகி அரசவை, திருச்சபை, மேட்டுக்குடியினர் ஆகியோருக்கு உரியனவாக க் […]
நாகரத்தினம் கிருஷ்ணா அ. இலக்கிய சொல்லாடல்கள் ஆ. சத்தியானந்தன் சிறுகதை இ. கமலஹாசன் குரல் அ. இலக்கிய சொல்லாடல்கள் : கலைத்துவ எழுத்து (Belles-lettres) பதினேழாம் நூற்றாண்டிலேயே ‘கலைத்துவ எழுத்தின்’ வருகை உணரப்படுகிறது. எனினும் அதற்குச் சரியானச் சொல்லாடலைப் பிரெஞ்சு இலக்கிய உலகம் உபயோகிக்கத் தொடங்கியது பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில். அக்காலக் கட்ட த்தில் சமயபோதனைகள், பைபிள், சமய வரலாறு ஆகியன மறை எழுத்து (Lettres-saintes) என்றும், இதனைத் தவிர கல்விமான்கள் எழுத்து(Lettres savantes), நல்ல எழுத்து […]
பிரெஞ்சுமொழியின் இலக்கிய வரலாறென்பது இடைக்காலத்தில் தொடங்குகிறது, அதாவது ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பதினைந்தாம் நூற்றாண்டுவரையிலானக் காலத்தை இடைக்காலத்திற்குரிய காலம் என்போமெனில் அதில் கடைசி இருநூறு ஆண்டுகளில்தான் இலக்கியம் என்ற சொல்லை இன்று நாம் விளங்கிக்கொள்ளும் பொருளில் கையாளுகிறார்கள். பிரெஞ்சு இலக்கியத்தைப் புரிந்துகொள்வதற்கு முன்பாகச் சுருக்கமாக பிரெஞ்சு மொழியின் வரலாறு: இன்றைய பிரெஞ்சு மொழியின் தாய்மொழி இலத்தீன் அல்லது இலத்தீன் மொழியின் வெகுசன வடிவம். இரும்பு யுகத்தில், பிரான்சு நாட்டின் பூர்வாங்கப்பெயர் கோல் (la Gaule) என்றும், […]
பிரெஞ்சு மொழியிலிருந்து நவீன இலக்கியம் தருவித்துக்கொண்டதொருசொல். இராணுவப் பொருள்கொண்ட ஒரு வார்த்தை. Avant என்ற பிரெஞ்சு சொல்லுக்கு முன்புறம் என்றும் Garde என்ற சொல்லுக்குக் காவலர் அல்லது வீரர் என்றும் பொருள். ஒரு படையில் முன்வரிசையில் இருக்கிற, தாக்குதலை முன்நின்று நடத்துகிற அதன் விளைவுகளையும் முன்நின்று எதிர்கொள்கிற படைக்காவலர் அல்லது படைவீரர் ‘Avant-Garde’, அதாவது ‘படைக்கு முந்தி’, என்று இருப்பவர்கள், முன்னணி வீரர்கள். இச்சொல்லை முதன் முதலில் (தற்போது அனைவரும் அறிந்துள்ள பொருளில்) உபயோகித்தவர் குளோது ஹாரி […]
பின்னூட்டங்கள்