சிலிக்கான்வேலி வங்கி திவால்

This entry is part 12 of 13 in the series 12 மார்ச் 2023

சென்ற வெள்ளிக்கிழமையன்று அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிக்கான்வேலி வங்கி திவாலாகியிருக்கிறது. அதில் ஆச்சரியமூட்டும் விஷயம் என்னவென்றால் மொத்த வங்கியும் நான்கே மணி நேரங்களில் ஊற்றி மூடியதுதான். 2008-ஆம் வருடம் வாஷிங்டன் ம்யூச்சுவல் வங்கி திவாலானதுடன் அமெரிக்கப் பங்குச் சந்தை பெரும் சரிவினைச் சந்தித்தது. அதுபோன்றதொரு சரிவு திங்கட்கிழமையன்று ஆரம்பமாகலாம் என அஞ்சப்படுகிறது.

2008-ஆம் வருடச் சரிவினை டாலரை அச்சடித்துத் தள்ளிச் சரிக்கட்டினார்கள். இந்தமுறை அப்படிச் செய்வது சிரமம்தான். சிலிக்கான்வேலி வங்கியில் என்ன நடந்தது என்பதனைக் குறித்து இங்கு விளக்கினால் பெரும்பாலோருக்குப் புரிவது சிரமம் என்பதால் அதனைச் செய்யவில்லை. தேவைப்படுவோருக்கு இணையமெங்கும் தகவல்கள் இருக்கின்றன.

அமெரிக்கர்களின் இரட்டைவேடம் இந்தமுறை கிழிந்து தொங்கியிருக்கிறது. அதானியின் கம்பெனிகள் மீது ஆதியோடு அந்தமாக விவரணை செய்த ஹிண்டன்பர்க், இன்னபிற அமெரிக்கப் பொருளாதார “மேதைகள்” தங்கள் நாட்டு வங்கி ஃப்ராடுத்தனம் செய்வதை அறியாமல் இருந்தது ஆச்சரியம்தான். அமெரிக்கப் பொருளாதாரம் இந்தமுறை பெருத்த அடி வாங்கக்கூடும். ஏற்கனவே இந்தியா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் அமெரிக்க டாலரை உபயோககிப்பதைக் குறைத்துக் கொண்டிருக்கின்றன. எனவே கடந்த காலங்களில் அமெரிக்க நஷ்டத்தைத் தந்திரமாக் பிற நாடுகளின் தலையின் மீது அமெரிக்கா சுமத்துவது வழக்கம். இந்தமுறை அப்படிச் சுமத்தமுடியாது.

அதற்கும் மேலாக பரம எதிரிகளான சவூதி அரேபியாவும், ஈரானும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். சீனா இதற்கு மத்தியஸ்தம் செய்திருக்கிறது. இதன் மூலம் அமெரிக்க ஆதிக்கம் மத்திய கிழக்கில் ஏறக்குறைய முடிவுக்கு வந்திருக்கிறது. அரபிகள் அமெரிக்கர்களின் தந்திரங்களை உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். மிகச் சிக்கலானதொரு காலகட்டத்தை நோக்கி அமெரிக்கா நகர்ந்து கொண்டிருக்கிறது.

முன்பு ஒருமுறை சொன்னபடி, அமெரிக்க வாழ் இந்தியர்கள் எதற்கும் தயாராக இருந்துகொள்வது நல்லது. அமெரிக்கப் பொருளாதாரம் கீழே விழுந்தால் இந்தியர்கள் மீது தாக்குதல்கள் நடக்கலாம். ஏனென்றால் இன்றைய தேதியில் அமெரிக்காவில் நல்ல நிலையில் இருப்பவர்களில் இந்தியர்கள் முன்னனியில் இருக்கிறார்கள். அது பலரின் கண்களை உறுத்திக் கொண்டிருக்கிறது. இதனைப் போகிற போக்கில் நான் சொல்லவில்லை. நன்றாக உணர்ந்தே சொல்கிறேன்.

சிலிக்கான்வேலி வங்கியில் பணத்தை இழந்தவர்களில் பெரும்பாலோர் இந்தியர்களாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது. அவர்களுக்கு என் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய பங்குச் சந்தையிலும் பாதிப்புகள் இருக்கலாம். இருந்தாலும் இந்தியப் பொருளாதாரக் கட்டமைப்பு உறுதியாக இருப்பதால் இந்தச் சரிவிலிருந்து இந்தியப் பங்குச்சந்தை விரைவில் மீளும்.

Series Navigationஆப்பிரிக்காவில் இந்தியா: தெற்கு-தெற்கு ஒத்துழைப்பின் மாறிவரும் முகம்60 ஆண்டுகால “வடக்கன்” அரிப்பு
narendran

பி எஸ் நரேந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *