ப.அழகுநிலா “கொஞ்சம் தள்ளி ஒட்கார முடியுமா? நின்னு நின்னு கால்வலி உசுரு போவுது” ‘’அதுக்கென்ன! இப்படி ஒட்காருங்க. இந்த போட்டில இப்பதான் மொத தடவையா கலந்துக்கிறிங்களா!’’ “ஆமாம். எப்படி கரெக்ட்டா கண்டுபிடிச்சீங்க?’’ ‘’போட்டி ஆரம்பிச்சு ரெண்டு மணிநேரம் கூட ஆகலை. அதுக்குள்ள கால்வலிக்குதுங்கிறிங்களே! அதை வச்சுதான்’’ “போட்டி முடிய இன்னும் எவ்வளவு நேரமாகும்?’’ ‘’அது சாயந்திரம் ஆயிடும். எடையில லன்ச் பிரேக் ஒரு மணிநேரம்’’ ‘’நீங்க எத்தனை வருஷமா கலந்துக்கிறிங்க?’’ ‘’இந்த போட்டி ஆரம்பிச்சதிலேந்து கிட்டத்தட்ட […]
ப.அழகுநிலா சிங்கப்பூர் “அப்பதான் மொத, மொதல்ல அவளுக்கு அப்பாவை புடிக்காம போச்சு” என்று வசந்தாவிடம் சத்தமாக சொல்லிக்கொண்டிருந்த தேன்மொழி, அறைக்குள் நுழைந்த அரசியை பார்த்தவுடன் சட்டென்று பேச்சை நிறுத்திக்கொண்டாள். அரசியிடமிருந்து வந்த மீன் கவிச்சி, வீட்டில் மீன் குழம்பு என்று சொல்லியது. “அக்கா! ஒன்னையும், வசந்தாக்காவையும் அம்மா சாப்பிட கூப்பிடுது” ன்னு சொல்லிக்கொண்டே அலமாரியை திறந்து துண்டையும், உள்பாவாடையையும் எடுத்தவள், “ஆமாம்! நான் உள்ள நொழைஞ்சப்ப யாருக்கோ அப்பாவை புடிக்காம போச்சுன்னியே யாருக்குக்கா?” என்று அவர்கள் […]