ப. லட்சமி முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதிநேரம்), தமிழாய்வத்துறை பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி, (தன்னாட்சி) திருச்சிராப்பள்ளி படைப்பாளன் படைப்புகளில் தான் வாழும் காலத்தையும் பதிவு செய்கிறான். தனக்கு முந்தைய காலத்தையும் மதிப்பிடுகிறான். அதே நேரத்தில் எதிர்காலம் பற்றிய பதிவுகளையும் அவன் உணர்த்திநிற்கிறான். இம்முக்காலத்தையும் பதிவாக்கும் இலக்கியம் நல்ல படைப்பாக உயர்ந்து நிற்கிறது. முக்காலத்தையும் உணர்த்துதலே படைப்பாளனின் கடமையும் ஆகின்றது. ஒவ்வொரு படைப்பாளரிடத்திலும் இத்தகைய மூன்று காலத்தின் இயல்புகளைப், பண்புகளைக் காணமுடிகின்றது. புதுக்கவிதை உலகில் தனித்த இடம் […]
ப.லெட்சுமி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை ஈ.வெ.ரா பெரியார் கல்லூரி, திருச்சிராப்பள்ளி படைப்பாளர்கள் தற்கால நிகழ்வுகளோடு ஒட்டித் தம் பதிவுகளைப் படைப்புக்களில் பதிய வைக்கின்றனர். இதன் காரணமாக படைப்புகள் உயிர்த்தன்மையுடன் திகழ்கின்றன. கவிஞர் மேத்தா வானம்பாடி இயக்க காலக் கவிஞராவார். தொடர்ந்து புதுக்கவிதைகளைப் படைத்துக் கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது தமிழ்ச்சமுதாயம் பற்றிய பல விமர்சனங்களைத் தந்து தமிழ்ச்சமுதாயத்தின் இக்கட்டுக்களை, ஏற்ற இறக்கங்களை மதிப்பிட்டு அது சரியான வழியில் நடைபோட ஆக்கமும் ஊக்கமும் மிக்கக் கவிதைகளை படைத்தளித்து வருகின்றார். […]